Advertisement
அரசியல் செய்திகள்
விலைவாசியை உயர வைக்கும் பட்ஜெட்: ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
மார்ச் 05,2010,00:00  IST

Latest indian and world political news information

புதுடில்லி: மத்திய அரசின் பொதுபட்ஜெட்டில் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகியவற்றின் மீது ஒரு ரூபாய் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலைகள் ரூ.3 முதல் ரூ.4 வரை கூடுதலாக  உயரப்போகிறது. இதை கண்டித்த எதிர்க்கட்சிகளுக்கும் அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும் பட்ஜெட் தாக்கலின்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் வெளிநடப்பு செய்தன.நேற்று லோக்சபாவில் மத்திய  அரசின் 2010-11ம் ஆண்டுக்கான பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. காலை அவை கூடியதும் பட்ஜெட் உரையை படிக்க ஆரம்பித்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஏறத்தாழ இரண்டு மணிநேரம் வாசித்தார். பட்ஜெட் உரையை வாசித்துக் கொண்டே வந்தபோது மறைமுக வரிவிதிப்பு பற்றி குறிப்பிட்டபடி வந்தார். அப்போது டீசல் மற்றும் பெட்ரோல் பொருட்கள் மீதான கலால்வரியை மேலும் ஒரு ரூபாய் அதிகரிப்பதாக குறிப்பிட்டார். தற்போது உள்ள 7.5 சதவீதத்தை இனி 8.5 சதவீமாக்கப்போவதாக அவர் குறிப்பிட்ட போது அவையில் உள்ள எதிர்க்கட்சியினர் சற்று நேரம் திகைத்தனர். அமைதியாக இருந்த அவையில் அரசின் இந்த அறிவிப்பை சற்றும் எதிர்பார்க்காத தலைவர்கள் நொடியில் சுதாரித்துக் கொண்டனர்.பாஜ எம்.பி.,யான கோபிநாத் முண்டேதான் முதல் ஆளாய் குறுக்கிட்டார். இருக்கையில் இருந்து எழுந்து சத்தம்போட்டார். ஏறிக் கிடக்கும் விலையை குறைப்பது எப்படி என்றெல்லாம் இப்போதுதானே பேசி முடித்தோம். அதற்குள் விலையை உயர்த்த அரசு துணைபோவதா என்று அவர் கேட்க, எதிர்க்கட்சிதலைவர் சுஷ்மா சுவராஜ்,லாலுபிரசாத்,முலாயம்  உள்ளிட்ட தலைவர்களும் எதிர்ப்பு குரல் எழுப்பினர். இதையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ஏறத்தாழ 200க்கும் அதிகமானோர் எழுந்து அவையில் அரசின் அறிவிப்பை எதிர்த்து கடும் கூச்சலை எழுப்பினர். இதனால் சற்று நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது. தனது பட்ஜெட் உரை வாசிப்பில் குறுக்கீடு செய்வதை அறிந்த பிரணாப் டென்ஷனாகிவிட்டார். தன்னை எதிர்த்தவர்களை பார்த்து, " நான் பட்ஜெட் தாக்கல் செய்வதை யாரும் தடுத்துவிட முடியாது. அரசியல் சட்டம் அளித்துள்ள கடமையை நான் செய்கிறேன். உங்களுக்கு ஏதாவது வருத்தம் இருந்தால் விவாதம் நடத்தும்போது அவை தெரிவியுங்கள்.அதை விட்டுவிட்டு கூச்சல் போடும் வேலையில் இறங்காதீர்கள்,' என்று எச்சரித்தார். ஆனாலும் எதிர்கட்சி தலைவர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்தவண்ணம் இருந்தனர். இதைபார்த்த சபாநாயகர் மீராகுமார், பட்ஜெட் உரையை மேற்கொண்டு படிக்கும்படி பிரணாப்பை கேட்டுக் கொள்ள அவர் வாசிப்பதை தொடர்ந்தார். தங்கள் எதிர்ப்பை பத்து நிமிடங்கள் சபையில் தெரிவித்துவிட்டு அதிமுக, பாஜ,இடதுசாரிகள்,ராஷ்டிரிய ஜனதாதளம், சமாஜ்வாடி,ஐக்கிய ஜனதாதளம்,பகுஜன்சமாஜ் உள்ளிட்ட கட்சி எம்.பி.,க்கள் அவையைவிட்டு வெளியேறினர். சமீப ஆண்டுகளில் பொதுபட்ஜெட் தாக்கல் செய்யும் போது அதை கண்டித்து ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றுசேர்ந்து வெளிநடப்பு செய்வது இதுவே முதல் முறை ஆகும்.மத்திய அரசின் நேற்றைய பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவதற்கு உச்சவரம்பாக ரூ. ஒரு லட்சத்து 60 ஆயிரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  சிகரெட்,மூக்குப்பொடி,சூயங்கம் உள்ளிட்டவற்றின் விலை உயருகிறது. மைக்ரோ ஓவன்,வாட்ச்,ரெடிமேட் துணிகள்,வாட்டர் பில்டர் ஆகியவற்றின் விலை குறைகிறது.  சிமெண்ட், போர்ட்லண்ட் சிமெண்ட்,கிளிங்கர்ஸ் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிக்கும்.பெரியகார்கள்,பந்தய கார்கள் மீது 22 சதவீதம் கலால்வரி விதிக்கப்படவுள்ளது. அரசு வேலையில் சேருவோரின் நலனுக்காக புது பென்ஷன் திட்டம் கொண்டுவரப்படுகிறது. முதல் ஆண்டு ரூ.1000த்தை அரசே பரீமியமாக செலுத்தும். அதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அரசு அளித்த ஊக்கவிப்பு நிதிஉதவி காரணமாக உற்பத்தி துறையில் 18.5 சதவீதம் வளர்ச்சி இருந்தது. ஏற்றுமதி துறையில் கடந்த 12 மாதமாக இருந்து வந்த வீழ்ச்சி சற்று மாறத்துவங்கியுள்ளதற்கான சாதகமான அறிகுறிகள் தென்படுகின்றன. விவசாயத்துறையில் மைனஸ் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதை சரிசெய்வதற்கு அரசாங்கம் புதிதாக 3 திட்டங்களை அறிவித்துள்ளது. விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கடன் தள்ளுபடி சலுகையை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. அதாவது வரும் ஜுன் மாதம் வரை இந்த கடன்சலுகை திட்டம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 5 மெகா உணவு பூங்காங்கள்  அமைக்கப்படுகின்றன.குறுதொழில் செய்வோர்கள் ரூ.60 லட்சம்வரை அவர்களாவே நேரடியாக வருமானவரி தாக்கல் செய்து கொள்ளலாம். சம்பளம் பெறும் பட்டியலில் இருப்போர் ரூ.15 லட்சம் வரை தாங்களாகவே வருமானவரி தாக்கல் செய்து கொள்ளலாம்.நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது விரைவில் இரட்டை இலக்கத்தை அடையும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விலை உயருது: மத்திய அரசின் பொதுபட்ஜெட்டில் டீசல் மற்றும் பெட்ரோல் பொருட்களின் மீது ஒரு ரூபாய் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த மறைமுக வரியால் அதன் சுமை சாதாரணமக்கள் தலையில் கட்டப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பால் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலைகள் லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.4 வரை கூடுதலாக  உயரப்போகிறது. சென்னை போன்ற நகரங்களில் ரூ.5 வரை உயரலாம் என்று கூறப்படுகிறது. டீசல் மற்றும் பெட்ரோல் விலை அதிரிப்பால் வழக்கம்போல அனைத்து பொருட்களின் விலைகளும் மேலும் உயரப்போவது நிச்சயம்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 Pl roll back petrol and diesel hike.Request SONIAJI TO BE INTERFERE FOR THIS MATTER SERIOUSLY.KKS

 
by k.k. shanmugam,chennai,India    05-03-2010 11:12:44 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்