Advertisement
அரசியல் செய்திகள்
பெண்களை இழிவுபடுத்தினார் முலாயம்:கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம்
மார்ச் 25,2010,00:00  IST

Latest indian and world political news information

லக்னோ:' இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக, சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவ், பெண்களை இழிவு படுத்தும் விதத்தில் எந்த கருத்துக்களையும் தெரிவிக்க வில்லை' என, சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அகமது ஹாசன் தெரிவித்துள்ளார். ஆனால், பல்வேறு கட்சித் தலைவர்களும், முலாயம் பேச்சு அநாகரிகமானது என்று கண்டனம் செய்துள்ளனர்.


உ.பி.,யில் நேற்று முன்தினம், மாபெரும் சோசலிஸ்ட் கட்சித் தலைவர் ராம் மனோகர் லோகியாவின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், தற்போது உள்ள நிலவரப்படி, பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா பார்லியில் நிறைவேறினால் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களின் மகள்கள் தான் எம்.பி.,க்களாக அதிக அளவில் இடம் பெற்றிருப்பார்கள். இதனால், இவர்களைப் பார்த்து சபையில் விசிலடித்து கேலி செய்யும் கட்டாயத்திற்கு இளைஞர்கள் தள்ளப்படுவார்கள் என்றார்.


இதற்கிடையே, இட ஒதுக்கீடு மசோதாவால் முஸ்லிம் மற்றும் தலித் பெண்கள் பயனடைய முடியாது என்று தான் முலாயம் சிங் யாதவ் தெரிவித்து வருகிறார். பெண்களைப் பற்றி அவர் ஒருபோதும் கொச்சையாக பேசியது கிடையாது; பெண்களுக்கு அவர் எதிரானவர் என தெரிவித்துவரும் எதிர்க்கட்சிகள், இந்த விஷயத்தை பெரிது படுத்தி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன என, அக்கட்சியை சேர்ந்த அகமது ஹாசன் மற்றும் கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி உட்பட பலரும் பரிந்து பேசியுள்ளனர்.


கண்டனம்: முலாயமின் இந்த கருத்துக்கு காங்கிரஸ், மா.கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கிரிஜா வியாஸ் - தேசிய பெண்கள் ஆணையத் தலைவர்: முலாயம் சிங் யாதவ் போன்ற மூத்த தலைவர்களிடமிருந்து பெண்களைப் பற்றி இத்தகைய விமர்சனங்கள் வருமே யானால் மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது? இது போன்ற வார்த்தைகளை நான் ஒரு போதும் அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.


முலாயமை விட்டு விலகிய அமர் சிங்: பெண்களைப் பற்றி அவதூறாக பேசிய முலாயம் சிங் யாதவ் மீது, தேசிய பெண்கள் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ' பெண்களைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில், மலிவான வகையில் தனது கருத்துக் களை முலாயம் தெரிவித்துள்ளார்.


மா.கம்யூ., எம்.பி., பிருந்தா காரத்: பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை தர்க்க ரீதியாக அவர் எதிர்க்கிறார் என்றால் அது அவரது கருத்து சுதந்திரம். மாறாக, பெண்களை இழிவாகவும், கீழ்த்தரமாகவும் விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இளைஞர்கள், பெண்களைப் பார்த்து விசிலடித்து கேலி செய்வார்கள் என, அவர் தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.


ரீட்டா பகுகுணா - உ.பி., காங்., தலைவர்: பெண்களை இழிவாக பேசிய முலாயம் சிங் யாதவ், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.


நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 ஆமாம். பெண் MP , MLA பெரும்பாலும் ஷோக்கா வந்து, மேக்கப் , ட்ரஸ்செல்லாம் exhibition மாதிரி காமிச்சுட்டு, ஏதாவது VIP யை கையில் போட்டுக்கிட்டு, ஜாலி பண்றது புதுசா? எல்லாரு சுஷ்மா மாதிரி, மேனகாகாந்தி மாதிரி ஒழைக்கரதுக்கா வராங்க. அதிலும் செல் பேர், ஜெயில்ல இருக்கற புருஷனுக்கு பினாமியா தேர்தல்ல ஜெயிச்சு சபைக்கு வராங்க. இல்லாட்டி புருஷன் செத்துப்போன இடத்துல நின்னு ஜெயிச்சு, யாரோ பேப்பர்ல எழுதிகொடுத்ததப் படிச்சு, காசு கொடுத்து கைதட்டல்வேற வாங்கறாங்க! இந்த மாதிரி அசிங்கத்துக்கு தேர்தலே வேண்டாங்கறேன் .ரேசர்வதியன் வேண்டவே வேண்டாங்கறேன். . 
by V மணி,Chennai,India    25-03-2010 12:55:15 IST
 முலாயம் சிங் யாதவ் கூறிய கருத்தில் ஒன்றும் தவறில்லை. அவர் கூறியது சரியே இந்த இட ஒதுக்கீட்டால் மேல்தட்டு அதிகார வர்க்கங்களின் வீட்டு பெண்களே பயன்பெறுவர். சாமானிய சாதாரண சிறுபான்மையினர் பிற்படுத்தபட்டவர்கள் பயன் ஏதும் அடைய முடியாது. இச்சட்டத்தில் திருத்தும் கொண்டுவந்து சிறுபான்மை முஸ்லிம்கள் தலித்துகள் மற்றும் பிற்படுதபட்டவரும் பயனடைய வழி வகுக்க வேண்டும். வாழ்க முலாயம்  
by R தமிழ் நேசன் ,Riyadh,SaudiArabia    25-03-2010 12:43:38 IST
 உளவியல் ரீதியாக நோக்கின் முலாயம் சொன்னதில் தப்பில்லை. அவரின் பொருள் மிகவும் சரியே. முஸ்லிம் தலித் பெண்களுக்கு இடம் கேள்வியாகும் என்றிருக்கின்றார் சரிதானே. 
by k kanakavel,vandaloor,India    25-03-2010 10:50:58 IST
 all useless woman are critisings mr yadav. he and mr.lalu only supporting sc/bc/mbc women,so all others simple critising mr yadav  
by kp raja,madrai,India    25-03-2010 09:54:49 IST
 there is nothing wrong in mulayams speach..congress will not get any seat in the next election.. to avoid BJP we voited for congress, now we have to look parties except BJP and Cong. 
by k vel,chennai,India    25-03-2010 09:26:24 IST
 முலாயமின் மருமகளைப் பார்த்து யாராவது விசில் அடித்தார்களோ என்னவோ. வர வர இந்த மனுஷன் ஜாஸ்தியாத்தான் உளறுகிறார். இப்படிப்பட்ட ஆட்களைக் கொண்டுதான் உ.பி மாநில அரசியல் நடக்கிறது என்பது வெட்கக்கேடான விஷயம்.  
by K Maulee,Madurai,India    25-03-2010 07:07:58 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்