Advertisement
அரசியல் செய்திகள்
காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியா ஆலோசனை
ஏப்ரல் 17,2010,00:00  IST

Latest indian and world political news information

புதுடில்லி:'ஐ.பி.எல்., கிரிக்கெட் அணி சர்ச்சை தொடர்பாக, மத்திய அமைச்சர் சசி தரூரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் கோரி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று இந்தப் பிரச்னை குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் விவாதித்தார்.'ஐ.பி.எல்., கொச்சி அணியின் பங்குகளை தனது தோழி சுனந்தா புஷ்கருக்கு பெற்றுத் தர, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார்' என, மத்திய இணை அமைச்சர் சசி தரூர் மீது புகார் கூறப்பட்டது. இது பற்றி வாஷிங்டனில் கருத்து தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், 'நான் நாடு திரும்பியவுடன் அனைத்து உண்மைகளையும் கண்டறிவேன். அதன் பின்னரே சசி தரூருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்யப்படும்' என்றார்.


பாரதிய ஜனதா கட்சியோ, 'கிரிக்கெட் அணி ஏலத்தில் நடந்த அனைத்து விவரங்களும் தற்போது வெளிப்படையாக தெரியவந்துள்ளன. இந்த விவகாரத்தில் காலதாமதமே கூடாது. உடனே, சசி தரூர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரியது.அதே நேரத்தில், 'இந்தப் பிரச்னை தொடர்பாக, பார்லிமென்டில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி அரசு தரப்பில் கேட்டுக் கொண்டால், அதைச் செய்யத் தயார்' என சசி தரூர் கூறினார். மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் சந்தித்து நடந்த விவரங்களை விவரித்தார்.


இந்நிலையில், சசி தரூர் விவகாரம் தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களான நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, தனது அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோருடன் நேற்று சோனியா ஆலோசனை நடத்தினார். இந்த மூன்று தலைவர் களும், காங்கிரஸ் கட்சியின் உயர் மட்டக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள்.


பொதுவாக நிதி தொடர்பான பிரச்னை, புகார் எழுந்தால், அரசு தரப்பில் பார்லிமென்டில் விளக்கம் அளிப்பது உண்டு. ஆனால், சசி தரூரே விளக்கம் அளிப்பதின் மூலம், எதிர்ப்பை குறைத்து விடலாம் என்ற அரசின் கருத்து பலன் தரவில்லை. சசி தரூர் கேரள நலனுக்காகச் செயல்பட்டதாகக் கூறினாலும், அவரது தோழி சுனந்தாவுக்கு கோடிக்கணக்கில் லாபம் ஈட்ட அவர் செயல்பட்ட விதம், இனியும் அவர் அமைச்சராக தொடர்வதற்கு அனுமதிக்கப்படுவது ஏன் என்ற கேள்வி தொடர்கிறது.


நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்