Advertisement
அரசியல் செய்திகள்
ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சட்டசபையில் கோரிக்கை
ஏப்ரல் 22,2010,00:00  IST

Latest indian and world political news information

சென்னை:'தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் செல்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சட்டசபையில் கோரிக்கை விடப்பட்டது.சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:ரவிக்குமார் - வி.சி: ஹஜ் பயணம் செல்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்த அரசு ஆவன செய்ய வேண்டும். ஹஜ் பயணம் செல்பவர்கள் தங்குவதற்கான இடத்தை மத்திய அரசு புக் செய்து அதற்கான பணத்தை பயணிகளிடமிருந்து பெறுகிறது.


இதில் காலதாமதம் ஏற்படுவதால் நல்ல இடம் கிடைக்காமல் போகிறது. மத்திய அரசு முதலில் இடத்தை புக் செய்து பின் பயணிகளிடமிருந்து பணத்தை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பன்னீர்செல்வம் - அ.தி.மு.க: அ.தி.மு.க., ஆட்சியில் ஹஜ் பயணம் செல்ல மனு செய்தவர்கள் அனைவருக்கும் மத்திய அரசுடன் பேசி, செல்வதற்கு வழி செய்யப்பட்டது. தற்போது மனு செய்த அனைவரும் ஹஜ் பயணம் செல்ல அனுமதி வழங்க வேண்டும்.


அமைச்சர் மைதீன்கான்: கடந்த 2009ம் ஆண்டு தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் செய்ய 2,700 பேருக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் முதல்வர், துணை முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதால், 1,116 பேர் கூடுதலாக சேர்த்து 3,816 பேர் ஹஜ் பயணம் சென்றனர். ஹஜ் பயணம் செய்ய விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.


இந்த ஆண்டு, மூன்று முறை தொடர்ந்து ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பித்தவர்களை குலுக்கல் இல்லாமலே தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர். 2009ம் ஆண்டு 16 ஆயிரத்து 735 பேர் ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பித்தனர்; 3,816 பேர் ஹஜ் பயணம் சென்றனர்.இவ்வாறு விவாதம் நடந்தது.


நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 ப்ளீஸ் தயவு செய்து எல்லா மனுக்களையும் அனுமதிக்கவும் தேவை பட்டாள் கேரளா அரசு இடம் வழி முறை பின் பட்டவும் தேங்க்ஸ்  
by vm கல்வத்,melapalayam,India    22-04-2010 19:23:48 IST
 ஜெயலலிதா ஆட்சியில் குழுக்கள் ஏதுமின்றி 2005 ஆண்டு புனித பயணம் செய்தோம். அப்போது அண்ணாவி என்பவர் மந்திரி. இப்போது மைதீன்கான் இருந்து என்ன பிரயோசநம்? கேரளாவிலிருந்து 20 ஆயிரம் பேர் செல்லலாம் .தமிழகத்திலிருந்து வெறும் 3850 பேர் மட்டுமா? வெத்துவேட்டுகள்! வோட்டு பொரிக்கிகள்!!! 
by A MISBAHUDEEN @sudin Brunei ,JurongEast,Singapore    22-04-2010 14:43:50 IST
 மக்களின் வரி பணத்தில் இப்படி மத சுற்றுலா போவது கொஞ்சமும் சரி இல்லை.  
by H சுப்பன்,Nellai,India    22-04-2010 11:16:02 IST
 இஸ்லாத்தை பற்றி மைதீன் கான்னுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பது விளக்கவும். குறைந்தது ஒரு வேளையாவது தொழுது இருக்கிறாரா ? இறைவனை வணங்க மசூதிக்கு செல்ல மாட்டார். ஓட்டுக்காகத்தான் செல்வார். 
by S.I. Mohamed Kayal,Jiangmen.,China    22-04-2010 04:52:59 IST
 No problem if the pilgrims foot their bill themselves. it is their right to go any where on pilgrimage if they spend their for it. If taxpayer's money is to be spent for some religious group's pilgrimage, then there is of course a problem. India is a secular state and as such no one group should unduly benefit. 
by AV Arumugam,Chennai,India    22-04-2010 03:28:35 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்