Advertisement
அரசியல் செய்திகள்
செம்மொழி மாநாடு கவிதை போட்டி: முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய்
ஏப்ரல் 28,2010,00:00  IST

Latest indian and world political news information




சென்னை:''செம்மொழி மாநாட்டு கவிதைப் போட்டியில் முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்,'' என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.தமிழ்ச் செம்மொழி மாநாடு நிகழ்ச்சிகள் அமைப்புக் குழுவின் மூன்றாம் கூட்டம், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன் முடி தலைமையில் சென்னையில் நேற்று முன் தினம் நடந்தது.

கூட்டத்துக்கு பின் பொன்முடி கூறியதாவது:கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட்டில், 'சங்கத்தமிழ் அனைத்தும் தா' என்ற தலைப்பில், உலகளாவிய கவிதைப் போட்டியை நடத்த முடிவு செய்துள்ளோம்.போட்டியில் பங்கேற்க விரும்புவோர், ஒரு பக்க அளவில், 24 வரிகளுக்கு உட்பட்டு மரபு அல்லது புதுக்கவிதையை எழுதி அனுப்ப வேண்டும்.கவிதை அனுப்ப விரும்புவோர், மே 20ம் தேதிக்குள், 'முதன்மைச் செயலர், உயர் கல்வித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை - 600 009' என்ற முகவரிக்கு சாதாரண தபால் அல்லது ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பி வைக்கலாம்.

புதிய இ-மெயில் முகவரி உருவாக்கி, அதை முறையாக நாங்கள் அறிவித்த பின், அந்த முகவரிக்கும் கவிதைகளை அனுப்பலாம்.கவிதைப் போட்டியில் கலந்து கொள்ள, வயது வரம்பு எதுவும் இல்லை. கைகளில் எழுதி அல்லது டைப் செய்து கவிதைகளை அனுப்பலாம்.தேர்வு செய்யப்படும் கவிதைகளுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.ஊக்கப் பரிசாக ஐந்து பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும், முதல் மூன்று பரிசை பெறுபவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கவும் முடிவு செய்யப்பட் டுள்ளது.இவ்வாறு பொன்முடி கூறினார்.


நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 அதையும் ஒங்க தலைவரை விட்டே கவிதை பாட வைக்கலாமே. அவர் நல்லாவே மத்தவங்கள திட்டி கவிதை எழுதுவார்.  
by V Bask,tangkuvarsaththiram.,India    28-04-2010 20:07:59 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்