Advertisement
அரசியல் செய்திகள்
ஆதரவு வாபஸ் கடிதம் கொடுக்க பா.ஜ., தயக்கம் : சிபுசோரன் மகன் மன்னிப்பால் முடிவு மாறுமா?
ஏப்ரல் 30,2010,00:00  IST

Latest indian and world political news information

புதுடில்லி : சிபுசோரன் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டமாக அறிவித்த பாரதிய ஜனதா கட்சி, நேற்றிரவு வரை ஆதரவு வாபஸ் கடிதத்தை கொடுக்கவில்லை. பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், கவர்னரை சந்திக்கும் முடிவு இரு முறை தள்ளி வைக்கப்பட்டது. ஜார்க்கண்டில் நான்கு மாதங்களுக்கு முன், பா.ஜ., ஆதரவுடன் கூட்டணி அரசு அமைத்து முதல்வரானார் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன். ஆனால், சமீபத்தில் லோக்சபாவில் பா.ஜ., மற்றும் இடதுசாரி கட்சிகள் வெட்டுத் தீர்மானம் கொண்டு வந்த போது, அதற்கு எதிராக ஓட்டளித்தார்.

வெட்டுத் தீர்மானத்திற்கு எதிராக ஓட்டளித்து, மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதால், அதிருப்தி அடைந்த பா.ஜ., 'சிபுசோரன் துரோகம் செய்து விட்டார்' எனக் கூறி, அவரது அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தது. இது தொடர்பான கடிதத்தை, ஜார்க்கண்ட் கவர்னர் எம்.ஓ.எச்.பரூக்கை நேற்று சந்தித்து கொடுப்பதாக இருந்தது. ஆனால், இந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டது. கவர்னரை பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பது தள்ளி வைக்கப்பட்டது. கவர்னரை சந்திக்க நேரம் கேட்டுப் பெற்றிருந்ததை, ஜார்க்கண்ட் மாநில பா.ஜ., பொதுச் செயலர் கணேஷ் மிஸ்ராவே நேரடியாக சென்று, ரத்து செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

இதன்பின் அவர் கூறுகையில், 'முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்னை தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. அதனால், நிர்ணயித்த நேரத்தில் கவர்னரை பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சந்திக்கவில்லை. ஆதரவு வாபஸ் முடிவை திரும்பப் பெற வேண்டும் என, சிபுசோரனின் மகன் கேட்டுக் கொண்டுள்ளதால், விரிவான ஆலோசனைகள் நடக்கின்றன. இருந்தாலும், பா.ஜ., தலைவர்களுக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி இரண்டாவது ஒரு கடிதம் எழுதியதாக எனக்கு எந்தத் தகவலும் இல்லை,'' என்றார்.

கவர்னரை பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சந்திக்க நேரம் கேட்டு பெற்று, இரு முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால், இனி நேரம் கேட்டு பெற்றால், அதை ரத்து செய்ய முடியாது என, கவர்னர் மாளிகை வட்டாரங்கள் கூறியுள்ளன.

இதற்கிடையில், பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ், கட்சியின் தலைவர் நிதின் கட்காரிக்கு முதல்வர் சிபுசோரன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது: பார்லிமென்டில் வெட்டுத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக ஓட்டளித்ததற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். சில நாட்களாக நான் உடல் நலம் இல்லாமல் இருந்தேன். உடல் நலக்குறைவு காரணமாகவே நான் வெட்டுத் தீர்மானத்திற்கு எதிராக ஓட்டளித்தேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் நான் தொடர்வேன். எனது அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறும் முடிவை பா.ஜ., கட்சி மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் சிபுசோரன் கூறியுள்ளார்.

இதற்கிடையில், சிபுசோரன் விவகாரத்தினால், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் மோதல் உருவாகியுள்ளது. அந்தக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான சிமோன் மராண்டி கூறியதாவது: வெட்டுத் தீர்மானத்திற்கு எதிராக சிபுசோரன் ஓட்டளித்ததற்காக, அவரது மகனும் எம்.எல்.ஏ.,வுமான ஹேமந்த் சோரன், பா.ஜ.,விடம் மன்னிப்புக் கேட்டது சரியல்ல. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரனே அன்றி, ஹேமந்த் அல்ல.

பார்லிமென்டில் வெட்டுத் தீர்மானம் ஓட்டெடுப்பிற்கு வந்த போது, ஒரு முறை அல்ல இரு முறை சிபுசோரன் ஓட்டளித்துள்ளார். அதில், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். இதிலிருந்தே அவர் அந்தக் கூட்டணியைத்தான் விரும்புகிறார் என்பது தெளிவாகிறது. நானும், மற்றும் சில ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏ.,க்களும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை ஆதரிக்கிறோம். இவ்வாறு சிமோன் மராண்டி கூறினார்.

நடந்த சம்பவத்திற்கு பா.ஜ., தலைவர்களிடம் சிபுசோரனின் மகன் மன்னிப்புக் கேட்டுள்ளதால், ஆதரவு வாபஸ் விவகாரத்தில் புதிய திருப்பம் உருவாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. சிபு சோரனை நீக்கி விட்டு மற்றவர்களுடன் தொடர்ந்து ஆட்சி நடத்த பா.ஜ., திட்டமிட்டிருக்கிறது என்ற கருத்தும் பேசப்படுகிறது.


நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 பதவிவெறி பிடித்தவர்கள் தான் தற்போது உள்ள அரசியல்வாதிகள் என்பதை இருவரும் வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள். இதுபோன்ற கோமாளிகள் காட்டும் வித்தையை பார்த்து ஏமாளிகளாக நிற்கும் பொதுமக்கள்தான் சிந்தித்து செயல்படவேண்டும். தங்களின் சுய லாபத்திற்க்காக மக்களின் வரிப்பணத்தை வீண் சிலவு செய்கிறார்கள். இவன் எல்லாம் எப்படி மக்களுக்கு சேவை செய்வான். எப்போது திருந்துவான். இறைவன் தான் தீர்த்து வைக்கவேண்டும்  
by mm அபுனுசைபா ,DAMMAMSAUDIARABIA,India    01-05-2010 10:57:44 IST
 ஆற்றில் ஒரு கல் சேற்றில் ஒரு கால் வைத்திருக்கும் குதிரை சிபுசோரனை இனிமேல் நம்பியிருக்காமல் விட்டு விடுவதே பாஜ வுக்கு நல்லது. இல்லாவிட்டால் பாஜ் வின் மதிப்பு ஜார்கண்டில் குறைய neridum  
by V Natarajan,Singapore,India    30-04-2010 09:09:56 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்