Advertisement
அரசியல் செய்திகள்
முதல்வர் பதவியை பிடிக்க பா.ஜ.,வில் போட்டி:சோரன் ஆட்சியை கவிழ்ப்பது நிறுத்திவைப்பு
மே 01,2010,00:00  IST

Latest indian and world political news information

ராஞ்சி:'ஜார்க்கண்டில் பா.ஜ., ஆட்சி அமைக்க முற்பட்டால், அதற்கு ஆதரவு அளிக்கத் தயார்' என சிபு சோரன் அறிவித்ததால், புதிய அரசு அமையலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. இதனால், முதல்வர் பதவியைப் பிடிக்க பா.ஜ., தலைவர்கள் இடையே போட்டி உருவாகியுள்ளது; ஆதரவு திரட்டும் வேலையிலும் இறங்கியுள்ளனர்.


லோக்சபாவில் பா.ஜ., வெட்டுத் தீர்மானம் கொண்டு வந்த போது, அதற்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாகவும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன் ஓட்டளித்ததால், எரிச்சல் அடைந்த பா.ஜ., தலைவர்கள், ஜார்க்கண்டில் அவர் தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக தெரிவித்தனர். இதனால், சிபு சோரன் அரசு கவிழும் சூழ்நிலை உருவானது.


ஆனால், சோரனும், அவரின் மகனும் மன்னிப்பு கேட்டு பா.ஜ., மேலிடத் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியதால், ஆதரவு வாபஸ் கடிதத்தை அளிக்காமல் பா.ஜ., தலைவர் காலம் தாழ்த்தினர். நேற்று காலை நடந்த பா.ஜ., பார்லிமென்டரி போர்டு கூட்டத்திலும், ஆதரவு வாபஸ் கடிதம் கொடுப்பதை நிறுத்தி வைப்பது என தீர்மானிக்கப்பட்டது.


அதே நேரத்தில், 'ஜார்க்கண்டில் பா.ஜ., ஆட்சி அமைத்தால், அதற்கு ஆதரவு அளிக்கத் தயார்' என சிபு சோரன் கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடரப் போவதாகவும் அறிவித்தார். இதனால், ஜார்க்கண்டில் பா.ஜ., தலைமையில் புதிய அரசு அமையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.அப்படி அமைந்தால், முதல்வர் பதவியை பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆதரவு திரட்டும் வேலையில், ஜார்க்கண்ட் மாநில பா.ஜ., தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.


முன்னாள் முதல்வரும், கட்சியின் தேசிய பொதுச் செயலருமான அர்ஜுன் முண்டா, தற்போதைய துணை முதல்வர் ரகுவர் தாஸ் உட்பட சிலர், எப்படியும் முதல்வர் பதவியை பிடித்துவிட வேண்டும் என, தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.ஜார்க்கண்ட் மாநிலம் அமைந்து ஒன்பது ஆண்டுகளாகியுள்ளது. இதுவரை எட்டு அரசுகள் பதவி வகித்துள்ளன. இதில், பழங்குடியினத்தைச் சாராத எவரும் முதல்வரானதில்லை.


எனவே, தனக்குத் தான் முதல்வர் பதவி என்ற அதீத நம்பிக்கையுடன் உள்ளார், ஏற்கனவே இரு முறை பதவி வகித்த அர்ஜுன் முண்டா.மேலும், பா.ஜ., கட்சியைச் சேர்ந்தவர் முதல்வராகி விட்டால், சிபு சோரன் கட்சியைச் சேர்ந்தவர் துணை முதல்வராவார். அதனால், அந்தப் பதவிக்கு சிபு சோரனின் மகன் ஹேமந்த் சோரன் நியமிக்கப்படலாம்.இருந்தாலும், ஜார்க்கண்ட் மாநில பா.ஜ.,வில் ஒரு பிரிவினர், புதிய அரசு அமைப்பதில் ஆர்வம் காட்டவில்லை.


சிபு சோரனே முதல்வராக தொடர வேண்டும் என விரும்புகின்றனர். 'சிபு சோரன் முதல்வராக நீடிக்க அனுமதிக்க வேண்டும்' என்றும் கட்சி மேலிடத்தைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.இதற்கிடையில், 'பா.ஜ., கட்சி பதவி ஆசை பிடித்து அலைகிறது' என, ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.


அம்மாநில காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''பா.ஜ., கட்சி மறுபடியும் எண்ணிக்கை விளையாட்டு விளையாடுகிறது. பா.ஜ.,வும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் அடிக்கடி தங்களின் முடிவை மாற்றுவதால், மாநிலத்தில் அரசியல் நெருக்கடி உருவாகியுள்ளது; ஜனநாயக நடைமுறைகளுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது' என, தெரிவித்துள்ளது.


ஆதரவு தர மறுப்பு: 'பா.ஜ., ஆட்சி அமைத்தால் ஆதரவு தர மாட்டேன்' என, சிபு சோரன் தலைமையிலான அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் ஜார்க்கண்ட் ஜனாதிகர் மஞ்ச் எம்.எல்.ஏ., பாந்து திர்கே கூறியுள்ளார். ''சோரனுக்குத் தான் நான் ஆதரவு தருகிறேன்; பா.ஜ.,வுக்கு அல்ல. பா.ஜ.,வுக்கு ஆதரவு தரப்படுமா என்பது குறித்து எங்கள் கட்சி தான் முடிவெடுக்கும்,'' என திர்கே மேலும் கூறினார்.


நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 In the same situation, if Congress tries to form the Govt, Manish Tiwari (tension fellow) will tell that Cong is doing its democratic duty of trying to form the Govt. If is is done by BJP, he will say the BJP is after power. And many of your readers are voicing similar views. What a pity ? 
by R PRASAD,Chennai,India    01-05-2010 21:21:12 IST
 ப ஜ க அரசக்கு வாழ்த்துக்கள் வாழ்க ப ஜ க  
by v chandrasekaran,Bangalore,India    01-05-2010 13:27:29 IST
 திரு பிஜேபி அவர்களே சிபுசோரன் ஒரு குள்ளநரி (cunning fox). ஞாபகம் இருக்கட்டும்.பதவிக்கு ஆசைப்பட்டு மக்களின் நன்மதிப்பை இழந்துவிடாதீர்கள்.  
by V Natarajan,Singapore,Singapore    01-05-2010 13:18:45 IST
 தப்பு மேல தப்பு செய்யறீங்க ப ஜ க . சிபு சோரன் உறவு போதும். ஆட்சி போனாலும் பரவாயில்லை சார்  
by R ஸ்ரீனிவாசன் ,theniTamilnadu,India    01-05-2010 10:39:06 IST
 shibu soran only doing political drama ,he want only chief minister post and also his son will be high power ,but he could not taken any developement of jhargant state.BJP NEVER COME IN PM POST IN INDIA,PUBLIC WANT CONGRESS 
by m chandrasekaran,mumbai,India    01-05-2010 09:41:44 IST
 பிஜேபி சரியான முடிவு எடுத்துள்ளது  
by T Suthan,Chennai,India    01-05-2010 09:35:34 IST
 குஜராத்திலோ மோதியின் ஆட்சி, கர்நாடகத்திலோ ரெட்டிகளின் ஆட்சி, பி.ஜே.பி ஆட்சி எங்கே நடக்கிறது அய்யா? ஜார்கண்டிலே உங்கள் முயற்சி பலிக்குமா? சிபு ஒரு மறதி மகாதேவன். அவர் சார்ந்திருப்பவர்களை எதிர்த்துத்தான் வாக்களிப்பர். கவனம். 
by K Maulee,Madurai,India    01-05-2010 07:47:08 IST
 பிஜேபி எப்படி பதவி வெறி பிடித்து அலைகிறார்கள் என்பதற்கு இதுவே ஒரு சான்று.இவர்களால் எப்படி ஜனநாயகத்தையும் இந்தியாவையும் காப்பாற்ற முடியும்.சிபு சோரேன் இவர்களை முட்டாள்கள் என்று நிரூபித்து விட்டார். 
by K Sugavanam,salem,India    01-05-2010 06:53:02 IST
 ******** PLEASE EDUCATE ATLEAST 100 PEOPLE THAT YOU KNOW TO FOLLOW ALL THE RULES & REGULATIONS, KEEP THE ENVIRONMENT CLEAN, CHOOSE A RIGHT CANDIDATE IN THE ELECTION, OTHERWISE THIS IS GOING TO BE A MAJOR ISSUE FOR INDIA VERY SOON*********** 
by R Raasa,Blore,India    01-05-2010 03:17:14 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்