Advertisement
அரசியல் செய்திகள்
பாலியல் புகாரால் கர்நாடக உணவு மந்திரி ராஜினாமா: சர்ச்சையை தவிர்க்க முதல்வர் அதிரடி முடிவு
மே 03,2010,00:00  IST

Latest indian and world political news information

பெங்களூரு:நண்பரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு வெளியானதையடுத்து, கர்நாடகா உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் ஹர்தாலு ஹாலப்பா, தன் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்ததாக ஊராட்சித் தேர்தலை கட்சி சந்திக்க வேண்டியிருப்பதால், மேலும் சர்ச்சை வேண்டாம் என்ற கருத்தில் அமைச்சர் ராஜினாமா முடிவு வேகமாக எடுக்கப்பட்டது.கர்நாடகா உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சராக இருந்தவர் ஹாலப்பா. முதல்வர் எடியூரப்பாவின் நெருங்கிய ஆதரவாளர். முதல்வரின் சொந்த மாவட்டமான ஷிமோகாவை சேர்ந்தவர். இவர், பாலியல் புகாரில் சிக்கியதாக, கன்னட நாளிதழ் ஒன்றில் முதல் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தியை படித்தவுடன் ஹாலப்பா, தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, முதல்வர் எடியூரப்பா அலுவலகத்திற்கு தகவலை அனுப்பி வைத்துள்ளார்.


பத்திரிகையில் வெளியான தகவல்:ஹாலப்பா அமைச்சராக இருந்த போது, ஷிமோகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். தனது பயணத்தை முடித்துக் கொண்டு, நண்பரின் வீட்டிற்கு சென்றார். அங்கு, சாப்பிட்டு விட்டு அங்கேயே தங்கியிருந்தார். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும், மாத்திரை வாங்கி வருமாறும் தனது நண்பரிடம் கூறினார். நண்பரும் மாத்திரைகளை வாங்கி விட்டு வீட்டுக்கு வந்தாராம். அப்போது நண்பரின் மனைவி, ஆடைகள் கலைந்த நிலையில் அழுது கொண்டிருந்தார்.


இச்சம்பவம் நடந்தவுடன் நண்பரின் மனைவி, தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார். இந்த பாலியல் பலாத்கார விவகாரம் வெளிவந்தால், தனது பதவிக்கு ஆபத்து என்பதை அறிந்த அமைச்சர் ஹாலப்பா, இந்த விவகாரத்தை வெளியில் கூறாத வகையில் நண்பர் குடும்பத்தை மிரட்டி வைத்திருந்தார். இச்சம்பவம், கடந்த நவம்பரில் நடந்துள்ளது. இவ்வாறு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.ஹாலப்பா விவகாரம், கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தினரும் ஆவேச அறிக்கை, பேட்டி வெளியிட்டுள்ளனர்.


ராஜினாமாவுக்கு பின், நிருபர்களிடம் ஹாலப்பா கூறுகையில், ''என் மீதான குற்றச்சாட் டுகள் ஆதாரமற்றவை, ஜோடிக்கப்பட்டவை. கட்சிக்கும், அரசுக்கும் எவ்வித சங்கடமும் வரக்கூடாது என்பதற்காக, அமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்தேன். முதல்வர் வெளியூரில் இருப்பதால் அவருடனும், கட்சித் தலைவர் ஈஸ்வரப்பாவுடனும் தொலைபேசியில் பேசி, ராஜினாமா முடிவு குறித்து தெரிவித்தேன். முதல்வர் எடியூரப்பா பெங்களூரு வந்தவுடன், அவரை சந்திப்பேன். இந்த விவகாரம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. பல மாதங் களாக திட்டமிட்டு, சிருஷ்டிக்கப் பட்டுள் ளது. விசாரணைக்கு பின்னர், உண்மை வெளிவரும்.


இதன் பின்னணியில், பாரதிய ஜனதாவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.,க்கள், எதிர்க்கட்சி பிரமுகர்களுக்கும் தொடர்பு உள்ளது. யார், யார் உள்ளனர் என்பதை தக்க நேரத்தில் தெரிவிப்பேன். பொது வாழ்க்கையில், ஆரம்பம் முதலே, நேர்மை, நெறிமுறைகளை பின்பற்றி வந்துள்ளேன்.குற்றச்சாட்டு குறித்து, பத்திரிகையில் செய்தியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். கிராம ஊராட்சி தேர்தல் நடக்கும் சூழ்நிலையில், அரசுக்கு சிக்கல் ஏற்படுத்த என்னை பலிகடாவாக்க முயற்சி நடக்கிறது. ராஜினாமா செய்துள்ளதால் எனக்கு எவ்வித மன வருத்தமும் இல்லை. அரசியலில் தொடர எனக்கு வயது இன்னமும் இருக்கிறது. புகழுக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, ராஜினாமா செய்தேன். ராஜினாமா செய்யும்படி யாரும் வற்புறுத்தவில்லை. எனது சொந்த முடிவு. இதன் பின்னணியில், பா.ஜ., எம்.எல்.ஏ., ஒருவர் உள்ளார். நான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி கெடு விதித்திருந்தார். இவ்விஷயங்கள் குறித்தும் முதல்வர், கட்சித் தலைவருடன் ஆலோசிப்பேன்.இவ்வாறு ஹாலப்பா கூறினார்.


ஹாலப்பாவின் ராஜினாமா கடிதத்தை முதல்வர் எடியூரப்பா ஏற்றுக்கொண்டு, கவர்னருக்கு அனுப்பி வைத்தார். முதல்வர் எடியூரப்பா கூறுகையில், ''ஹாலப்பா விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் நடத்துகின்றன. பாரதிய ஜனதாவுக்கு எதிராக, எதிர்க்கட்சியினர் சதி செய்துள்ளனர். ஹாலப்பாவின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.அடுத்ததாக ஊராட்சி தேர்தல் வரும் நேரத்தில் சர்ச்சை ஏற்படுவதைத் தடுக்க முதல்வர் எடியூரப்பா, அமைச்சரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்றார். ஹாலப்பா மீதான புகாரினால், முதல்வர் எடியூரப்பா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது ரேஸ் கோர்ஸ் ரோடு இல்லத்தின் முன், பெங்களூரு நகர இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்; 50 பேர் கைது செய்யப்பட்டனர்.


மொபைலில் படம் பிடித்தார் நண்பர்:அமைச்சர் ஹாலப்பாவின் நண்பர், ஷிமோகா வினோபா நகரில் வசிக்கிறார். பைனான்சியர் தொழில் செய்து வருகிறார். வினோபா நகர் வீட்டிலேயே இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.அமைச்சர் ஹாலப்பா சம்பந்தமான விவகாரங்களை, அவரது நண்பரே மொபைலில் படம் பிடித்ததாகவும், 40 வினாடிகள் இந்த படம் ஓடுவதாகவும், ஹாலப்பா, தனது நண்பர் மனைவியின் காலில் விழுவதும், அதன் பின், தனது பேன்டை போடுவதாகவும், அந்த துணிகளுடன் ஹாலப்பா இருப்பது போன்றும் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன.


இந்த துணிகள் தற்போது, 'டி.என்.ஏ.,' டெஸ்டுக்கு அனுப்பப்படவுள்ளதாக கூறப்படுகிறது.இச்சம்பவம் நவம்பர் 27ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு நடந்துள்ளது. மொபைலில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் விரைவில் வெளியாகுமா என்ற பரபரப்பும் மக்களிடம் உருவாகியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து, ஹாலப்பாவின் நண்பருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.


நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 ஒரு கைதியின் டைரி ஸ்டோரி மாதிரி நடந்திருக்கு.... சட்டம் கடுமையாகும் வரை;எல்லோருக்கு ஒரே சட்டம் வரும்வரை இந்த அரசியல்வாதிகல் maaraபோவதில்லை  
by Kums,LosAngeles,India    04-05-2010 01:40:58 IST
 குட்  
by najad நஜாத்,dubai,India    03-05-2010 23:58:02 IST
 முதலில் இவர் பாதுகாவலர் இல்லாமல் சென்றார் என்பதை நம்ப முடியவில்லை. அடுத்தது இவருக்கு நெஞ்சு வலிக்கும் பொழுது வீட்டில் இவர்கள் மூவரும் இருந்துள்ளார்கள்.. அவரது நண்பர் உடனே மருந்து வாங்க வெளியே சென்றார் என்பதும் நம்ப முடியவில்லை. ஒரு மனிதர்.. அதுவும் அமைச்சர் நெஞ்சு வலி என்றால் அவரது நண்பர் மருத்துவருக்கு போன் பண்ணாமல் குப்பன்.. சுப்பன் போல மருந்துக் கடைக்கு சென்றிருப்பாரா? தனது மனைவி மானபங்கம் படுத்தப் படும் பொழுது கணவன் அதை தடுக்காமல் மொபைலில் படம் பிடித்தாராம்... நல்ல கணவர்... ஓட்டைகள் பல உள்ளன... உண்மைகள் பல வெளியே வர வேண்டும்... 
by H நாராயணன்,Hyderabad,India    03-05-2010 20:43:51 IST
 இந்திய மக்களின் லாஜிக்கை மெகா சீரியல் மற்றும் சினிமா மழுங்கடித்து விட்டது. நவம்பர் மதம் நடந்த குற்றம் இப்போது வெளி வந்துள்ளது. மேலும் தனது நண்பர் அதிகாலை தனது மனைவியுடன் அலங்கோலமாக இருந்தால், நண்பரை உதைத்து தனது மனைவியை காப்பாற்றாமல் ஆங்கிள் பார்த்து வீடியோ எடுப்பவன் எப்பிடி பட்ட கணவன்? ஹைதராபாத் ஷோயப் கேஸ் போல இதுவும் பணம் பறிக்கும் ஒரு நாடகமாகவே தோன்றுகிறது. 
by s raguraman,madurai,India    03-05-2010 18:24:51 IST
 தன மனைவி, தன் நண்பனால் மானபங்கபடுத்தப்பட்டு கற்பழிக்கப்படுவதை பார்த்தும் தடுக்காமல், போட்டோ எடுத்து நிதானமாக போலீஸில் கொடுக்கிறான் என்றால் அதில் ஏதோ சூழ்ச்சி இருக்கும். இந்த கேவலமான வேலையில் நிச்சயமாக சதித்திட்டமே. என்ன எப்படியாவது பிஜேபி அரசுக்கு நெருக்கடி அவதுறு கொடுக்க வேண்டும், மற்றபடி இது வேரொன்றும் இல்லை. உபயோயகமில்லாத கேஸ். 
by AC கிட்டப்ப,chennai600061,India    03-05-2010 17:54:57 IST
 நித்யனந்தாவின் சீடராக இருப்பார் போலிருக்கே... இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா... 
by G GJK,Dubai,India    03-05-2010 15:10:32 IST
 திரு A அனந்த காந்தி ,jambuvanodai,சிங்கபோரே. அவர்களின் கருத்து முக்கியமானது மற்றும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது... எனது வாழ்த்துக்கள்  
by r மணி,chennai,India    03-05-2010 14:17:54 IST
 ஹாலப்பா, நண்பர் மனைவி election ல் நின்றால் மக்கள் ஒட்டு போடுவார்கள் ....  
by s sundar,namakkal,India    03-05-2010 12:07:11 IST
 கர்நாடகாவில் ஆட்சி நடக்கவில்லை. எடியுரபாவை உட்பட அனைவரும் ஊழல் வாழ்கை நடத்துகின்றனர். ரெட்டி சகோதரர்களின் குவாரி சுரண்டல், ஜாலபாவின் குசல்கள்.  
by L ராசு,Bangalore,India    03-05-2010 10:06:34 IST
 நாய வீடுக்குள்ள விட்டா கடிக்காமா என்ன பண்ணும் ?  
by k விமலா,Abudhabi,UnitedArabEmirates    03-05-2010 09:40:16 IST
 சரி ஒரு அமைசருக்கு நெஞ்சு வலின்னா அவரோட பி.எ போய் மாத்திரை வாங்கமாட்டரா? என்ன காங்கிரஸ் இப்படி கேவலமா இறங்கிங்டீங்க?  
by A அனந்த காந்தி ,jambuvanodai,Singapore    03-05-2010 08:54:19 IST
 வாட் எ ஜோக் யா  
by j ராஜதுரை,dubaivriddhachalam,India    03-05-2010 08:32:05 IST
 இது பெரிய விஷயம் அல்ல , இந்தியாவிலும் சரி , மாநில மந்திரிகளும் சரி , அவர்களுக்கு அல்லவா சாப்பிடுவது மாதிரி , தெரிந்தது இது மட்டும் தான் , மானத்துக்கு பயந்து குடும்பபெண்கள் சொல்வது இல்லை . அரசாங்கம் மந்திரிகள் , மற்றும் அரசியல் வாதிகளின் தின அட்டவனையை பதிவு செய்ய வேண்டும் .Raj 
by P Raj,KL,Malaysia    03-05-2010 06:53:48 IST
 டெஸ்டிங்..ஓனே...டூ...treee 
by அடங்க..,london,India    03-05-2010 04:29:35 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்