Advertisement
அரசியல் செய்திகள்
பதவி விலக விரும்பினார் ஜெய்ராம்: அனுமதிக்கவில்லை பிரதமர்
மே 14,2010,00:00  IST

Latest indian and world political news information

புதுடில்லி: உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடு பற்றி விமர்சித்ததால், சர்ச்சைக்கு உள்ளான மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பதவி விலக விருப்பம் தெரிவித்தார். ஆனால், அதை பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்து விட்டார்.


சீனாவில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்கச் சென்ற மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், 'சீனாவால் ஆபத்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் பயமுறுத்துகிறது. சீன நிறுவனங்களிடம் இருந்து தொலைத்தொடர்பு உபகரணங்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்தப் பயம் தேவையற்றது. சீனா தொடர்பான இந்தியாவின் கொள்கைகள் பீதியை ஏற்படுத்தக்கூடியவை மற்றும் தவறான எண்ணத்தில் எடுக்கப்பட்டவை' என்றார்.


இதையடுத்து, அமைச்சர் ஜெய்ராம் ரமேஷின் அறிக்கைக்கு கடும் அதிருப்தி தெரிவித்து, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு உள்துறை அமைச்சர் சிதம்பரம் கடிதம் எழுதியிருந்தார். உடன், அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், 'அடுத்த அமைச்சகங்களின் செயல்பாடு பற்றி கருத்து தெரிவிக்கக்கூடாது. குறிப்பாக சீனாவுடனான உறவுகள் பற்றி எதையும் தெரிவிக்க வேண்டாம்' என, கண்டிப்புடன் கூறினார்.


உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் நேற்று முன்தினம் சந்தித்து, அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் விளக்கம் அளித்தார். இந்நிலையில், கடந்த திங்களன்று இரவே அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்ததாகவும், பிரதமர் மன்மோகன் சிங் அதை நிராகரித்து விட்டார் என்றும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.


நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 It is a pity that the Congress Govt does not have spine to throw Jairam out of cabinet. We definitely have better people to handle his portfolio. It is pathetic that he went about talking against our own security favoring trade with China. China can never be trusted until unless they have a democracy. Jairam exposed his limitations and here we continue with him as a minister?! 
by K Ayyappan,Muscat,Oman    14-05-2010 11:54:40 IST
 இவர் ராஜினமா செய்ய முன் வந்ததற்கும் திருவாளர் சிதம்பரம் ராஜினமா செய்ததற்கும் வித்யாசம் உண்டு. இவரது செயல் உண்மையானது. ஆனால் சிவகங்கை சீமான் செய்தது நாடகம். அரசியல் ஏமாற்று வேலை.  
by G பன்னாடை பாண்டியன் ,chennai,India    14-05-2010 10:20:46 IST
 மரபணுமாற்று கத்திரிக்காயை பிடிக்கமுடியாது போனதால் தற்போது சீனாவை பிடிக்கிறார் போலும். இவர் சீனாவில் போய் நம்மநாட்டு அமைச்சகதைபற்றி குறைகூறுவது அரசியல்நாகரிகம் இல்லை. இவர் சீனாவுக்கு மந்திரிபோல் பேசியுள்ளார். சில நாட்களுக்கு முன்னால் சீனாவில் இந்தியர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள் ஆனால் சீனமக்கள் பேசாமல் உழைத்துக்கொண்டு இருப்பார்கள் என்று கூறினார் திரு மன்மொஹன்சிங்கிற்கு தரூர் என்ற தலைவலிபோய் தற்போது ஜெயராம் என்ற திருகுவலி வந்துவிட்டது.  
by V Natarajan,Singapore,India    14-05-2010 08:03:40 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்