Advertisement
அரசியல் செய்திகள்
விஸ்வநாதன் ஆனந்துக்கு சட்டசபையில் பாராட்டு
மே 14,2010,00:00  IST

Latest indian and world political news information

சென்னை; உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்துக்கு சட்டசபையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வனம், சுற்றுச்சூழல், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறைகளுக்கான மானியத்தின் மீது நடந்த விவாதம்:


குமரகுரு - அ.தி.மு.க., : உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாத் ஆனந்தை அரசு பாராட்டவில்லை.


அமைச்சர் மைதீன் கான் : விஸ்வநாத் ஆனந்த் 2000ம் ஆண்டில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற போது, அவருக்கு 32.75 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு கொடுத்தவர் முதல்வர் கருணாநிதி. 2008ல் மீண்டும் அவர் சாம்பியன் பட்டம் வென்ற பின், 20 லட்சம் ரூபாயை முதல்வர் கொடுத்தார். தற்போது கடந்த 10ம் தேதி அவர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். முதல்வரின் சார்பில் அவரை பாராட்டுகிறேன்.


குமரகுரு : அரசு உதவி செய்யவில்லை என்று கூறவில்லை. நான்கு ஆண்டுகளாக தொடர்ச்சியாக பட்டம் பெற்றவரை சட்டசபையில் பாராட்டுவதற்காகத் தான் கூறினேன். மாசு கட்டுப்பாடு வாரியம் தொழிற்சாலைகளுக்கு அனுமதி தருவதோடு சரி. அதன்பின் அவற்றை கண்காணிப்பதில்லை. இதனால் மாசு அதிகரிக்கிறது. அனைத்து தொழிற்சாலை கழிவுகளையும் சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றங்களை காப்பதில் அரசு செலுத்தும் அக்கறை, சுற்றுச்சூழலை காப்பதில் செலுத்துவதில்லை. திருப்பூர் சாயக்கழிவை கடலில் கலக்கும் திட்டம் மூன்று ஆண்டுகளாக அறிவிக்கப்படுகிறது. ஆனால் திட்டத்தை செயல்படுத்தவில்லை. வேலூர் தோல் தொழிற்சாலை கழிவுநீர் பாலாற்றில் கலப்பதால், மாசுபடுகிறது. கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை கழிவு, நீர் நிலைகளில் கலப்பதால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் தண்ணீர் மாசுபட்டுள்ளது.


உதயசூரியன் - தி.மு.க., : கள்ளக்குறிச்சி கூட்டுறவு ஆலைக்கு 1989ல் அடிக்கல் நாட்டியவர் முதல்வர் கருணாநிதி. அதன் பின் ஆட்சிக்கு வந்தவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. மீண்டும் 1996ல் ஆட்சிக்கு வந்த பின் தான், அந்த சர்க்கரை ஆலையை முதல்வர் திறந்து வைத்தார். இங்குள்ள கிராமங்களின் நீர் ஆதாரம் கோமியாறு தான். சர்க்கரை ஆலையின் கழிவு நீர் கலப்பது சிறு ஏரியில் தான். அந்த ஏரி குடிநீருக்கு பயன்படுத்துவதில்லை. அங்குள்ள கிராமங்களில் மேல்நிலை தொட்டிகள் அமைத்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. நெல்லையில் மதுரா கோட்ஸ் சாயக் கழிவு நீர் தாமிரபரணி ஆற்றில் கலப்பதால், மாசு ஏற்படுகிறது.


பழனிசாமி - காங்கிரஸ்: கே.பி.சுந்தராம்பாளுக்கு கொடுமுடியில் மணி மண்டபம் கட்ட வேண்டும். திருப்பூர் சாயக் கழிவுகளால் ஒரு லட்சம் ஏக்கர் நிலம் விவசாயம் செய்ய முடியாமல் உள்ளது. நீர்நிலைகளுக்கு ஒரு கி.மீ., தூரத்துக்குள் ஆலைகள் அமைக்கக் கூடாது. ஆனால், திருப்பூரில் 170 சாயப் பட்டறைகளும், ஈரோட்டில் 100 பட்டறைகளும் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன. புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டம் ஈரோடு என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் அதிகமானோரை தாக்குவதற்கு காரணம், தோல் பட்டறை சாயக் கழிவுகள் ஆற்றில் கலப்பது தான். காவிரியில் கலக்கும் இந்த நஞ்சு காரணமாக, வரும் காலத்தில் தஞ்சையும் கெடும். பின் சென்னைக்கும் பாதிப்பு வரும். இவ்வாறு விவாதம் நடந்தது.


நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 ஆல் தி பெஸ்ட் Thiru.Anand 
by Kalai,Chennai,India    15-05-2010 15:55:51 IST
 Mr.Mani, please go thro the speech of Mr.MaideenKhan 
by h SELVARAJ,madurai,India    14-05-2010 17:48:23 IST
 Congratulations Anand. You are the real Hero. Hats Off to you. Wishing you to attain more success in your future endeavour. People who like cricket - What your cricket team did in T20-T20 international matches. They lost. They are running behind the money and girls, hence they lost the matches and if this continues they never win in the coming world cup also. Atleast try to encourage our Grand slam master Viswanathan Anand victory. Pour numerous comments to wish him. Long Live Anand. We are proud that you are a tamilian and yielding a good fame to our country. Hats Off you Anand once again.  
by N Velmurugan,Chennai,India    14-05-2010 13:16:53 IST
 திரு மணி கூறியது போல திரு ஆனந்த் என்ன மானாட மயிலாட கதாநாயகனா? பெரிய மைதானத்துல பாராட்டு விழா நடத்துறதுக்கு? ஏன் தான் இந்த அரசியல்வாதிகள் இப்படி இருக்கிறார்களோ? நீங்கள் கலக்குங்கள் திரு ஆனந்த் அவர்களே. உங்கள் பெருமையை இந்த உலகம் பேசட்டும். இந்த கேடுகெட்ட அரசியல் வாதிகள் பேசவேண்டாம், என் மனமார பாராட்டுகிறேன் திரு ஆனந்த் அவர்களே!!!. எல்லா செல்வங்களும் கிடைக்க கடவுளை வேண்டுகிறேன். 
by A கோகுல்,Singapore,India    14-05-2010 13:15:26 IST
 Our country's beloved son achieved once again championship. Every Indian should be proud for his achievement 4th time. Our sachin/our viswanathan are there for our indian nation whose sevices to our nation and in the world besides our greatest scholar for ever shri abdulkalamji. We wish them more success in their fields and good services to our nation. All the best. All of them should be awarded life time we can be proud further. In this present world, we(indians)are talked high compare to any other countries mean due to these top persons and not due to actors/politicians who take care of only their family. I am very happy to state I live with them some where.  
by s ayyappan,chennai,India    14-05-2010 12:11:03 IST
 பத்து ஆண்டுகளுக்குள் மூன்றாவது முறையாக செஸ்ஸில் உலக சாம்பியன் பட்டத்தை பெற்ற விஸ்வநாத் ஆனந்தால் நம் நாட்டிற்கும் குறிப்பாக தமிழ்நாட்டிற்கும் மிகவும் பெருமையே. அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். வருங்காலத்தில் மேலும் இதே பட்டங்களை பெற ஆண்டவன் அவருக்கு அருள்புரிவார். 
by V Natarajan,Singapore,India    14-05-2010 09:01:47 IST
 இந்த மாதிரி விவாதமெல்லாம் சரிதான். ஆனால், இதை செய்வோம் என்று எந்த கட்சியும் கூறவில்லையே! எது எப்படியோ, நாம நல்ல இருந்தா போதும்னு தானே நினைக்கிறாங்க! செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தை நான் உளமார பாராட்டுகிறேன். என்னுடைய ரோல்-மாடல் அப்துல் கலாமுக்கு பிறகு அவர்தான். சாதிக்க வேண்டும்!!!!!!!! 
by G. அருண் குமார்,Sivakasi,India    14-05-2010 08:33:07 IST
 ஆனந்த் என்ன நடிகையா? அல்லது மானாட மயிலாட ஆளா? ஸ்டேடியத்தில் பல்லாயிரவர் முன்பு பட்டம் சூட்ட? அந்தப் பாராட்டு விழாவெல்லாம் மஞ்சத்துண்டுக் குடும்பத்திற்கு மட்டுமே பாத்தியப் பட்டது..வீணாக வேற யாரும் ஆசைப் படவேண்டாம்! அட்லீஸ்ட் பரிசுத்தொகையை கோபாலபுரத்துக்கு அனுப்பினாலாவது ஏதாவது செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்....  
by V மணி ,Chennai,India    14-05-2010 08:23:40 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்