Advertisement
அரசியல் செய்திகள்
என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் எனது பணி சிறக்க வரும் உந்து சக்தி: மத்திய அமைச்சர் ராஜா சொல்கிறார்
மே 18,2010,00:00  IST

Latest indian and world political news information

ஊட்டி:''என் மீது எழுப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள், எனது பணி சிறக்க உந்துதலாக அமைந்துள்ளன,'' என மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார்.ஊட்டி எச்.பி.எப்., தொழிற்சாலையை நேற்று ஆய்வு செய்த அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தற்போது 3 ஜி ஏலம் நடந்து வருகிறது. எதிர்பார்த்ததை விட இதுவரை ஏலம் 60 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. அரசு 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் எதிர்பார்த்தது. ஆனால், இலக்கை தாண்டி ஏலம் செல்கிறது.


இந்நிலையில், 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு குறித்து குற்றச்சாட்டுகள் எழுப்பட்டு வருகின்றன. பார்லிமென்டிலும், வெளியிலும் பல முறை விளக்கம் அளித்துவிட்டேன்; பிரதமரிடமும் விளக்கம் அளித்துள்ளேன். 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடுக்கு அடிப்படை தொகை நிர்ணயிக்கப்படவில்லை. 3 ஜி அலைவரிசை ஏலத்தின் அடிப்படை தொகை, 2 ஜி அலைவரிசைக்கு நிர்ணயிக்க டிராய் அமைப்பு கூறியுள்ளது. 3 ஜி அலைவரிசையை விட 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு மூன்று மடங்கு குறைவானதாகும்.


மத்திய அமைச்சராக பதவியேற்றதில் இருந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளேன். ஐந்தாண்டுகளில் தொலைபேசி கட்டணங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. மொபைல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. 2012ம் ஆண்டு 600 மில்லியன் தொலைபேசி இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது; ஆனால், 2009ம் ஆண்டே இந்த இலக்கு எட்டப்பட்டது. தேர்தலின் போது மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதிகளை பூரணமாக நிறைவேற்றியுள்ளேன். என் மீது எழுப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள், எனது பணி சிறக்க உந்துதலாகவே அமைந்து வருகிறது.இவ்வாறு மத்திய அமைச்சர் ராஜா தெரிவித்தார்.


நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 மிஸ்டர் ராஜா அவர்களே, மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும்வரை உமது தலை தப்பும் .. அடுத்த தேர்தலில் பீ ஜி பீ வந்துவிட்டால் உமது கதி அதோகதி தான் .. கலைஞர் எவ்வளவு நாள் தான் உம்மை காப்பாற்றுவார் .. உண்மை ஒரு நாள் நிச்சயம் வெளியில் வரும் ..  
by C.R. Gopalkrishnan,Chennai,India    18-05-2010 17:26:08 IST
 Raja வருகிறார் பராக், ஒன்னும் தெரியாத பாப்பா ராஜா வருகிறார் பராக், சும்மா oru latcham கோடி மட்டும் ஊழல் செய்த ராஜா பேசுகிறார் , நாம் எல்லாம் அடிமைகல் போங்கள் போய் வேறு வேலை இருந்தால் பாருங்கள். யார் இந்த ராஜாவை குறை சொல்வது. 
by c குண்டப்பா,CROYDON,UnitedKingdom    18-05-2010 15:52:09 IST
 இளமாறன் என்ன தெளிவா சொல்லி இருகார், பிரமாதம் ,பிரமாதம் . தயாநிதி மாறன் மீண்டும் அந்த துறைக்கு வந்தால் பல பேருக்கு வேலை இருக்காது..  
by M நர்த்தனராஜா,kanniyakumari,India    18-05-2010 15:50:01 IST
 ஜெயேந்திரர் கைது ஆனா பொது பிரதமர், ஜெயாவுக்கு நிதானமாக இருக்கும் படி அறிவுரை கூறினார். ஹனீப் என்ற இஸ்லாமிய வாலிபர் வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட பொது தன வருத்தத்தை தெரிவித்தார். ஆனால் உன்னுடைய ஊழலுக்கு மு.க விடம் புகார் தெரிவித்தார். சிபிஐ ரிட் நடக்க செய்தார். நீ செய்தது ஊழல் இல்லை என்று வெளிப்படையாக கூற வில்லை அவ்வளவுதான். கக்கன் என்பவர் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் தான். இன்னமும் சமுகம் அவரை பற்றி உயர்வாகத் தான் பேசி கொண்டு இருக்கிறது. எனவே நேர்மை தான் உயர்வை தரும். ஜாதி அல்லது காசுக்காக ஒட்டு போடும் மக்கள் அல்ல. 
by GS ganapathy,Khartoum,Sudan    18-05-2010 14:56:29 IST
 அப்போ எதுக்கு ஜூனியர் விகடன் மேல கேஸ் போட்டீங்க? சுவான் கம்பெனி யாரோடது? 
by Mrs Girija,India,India    18-05-2010 14:16:10 IST
 இளமாறன் உங்களது சிலேடை , நயம் 
by S. Ramamurthy,Karaikudi,India    18-05-2010 13:34:29 IST
 அய்யா ராசா நீங்க வந்து ஒன்னும்...செய்யல இதுல்லாம் தயாநிதி மாறன் இருக்கும் போதே பட்டி தொட்டி எல்லாம் கைபேசி மற்றும் தொலைபேசி மக்களிடம் போய் சேர்ந்து விட்டுது 3 ஜி டெண்டரில் வரும் வருமானத்தை பாருங்க...  
by j அலாவுதீன் பாஷா ,DUBAI,UAE,India    18-05-2010 10:54:28 IST
 அப்ப இத்தனை நாட்களை கடத்தியது லஞ்சம் தான் முக்கியமாக இருந்தது என சொல்லாமல் சொல்கிறிர்கள், என ஒப்புக்கொண்டால் சரி.என்ன பண்ணுவது சரியாக பங்குபோடால் இவ்வழு பிரச்னை வந்திருக்காது இது ஒரு பாடம் உங்களுக்கு. தலைவரிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். கைவந்த கலை அவர்கள் குடும்பத்திற்கு.  
by s ramachandaran,chennai,India    18-05-2010 10:46:42 IST
 என்னது.. உங்களால்தான் தொலைபேசி கட்டணம் குறைந்ததா? ஏர்டெல், டாடா, ரிலையன்ஸ் போன்றவர்கள் அதிரடியாக குறைத்ததால் வேறு வழியின்றி BSNL கட்டணம் குறைக்கப் பட்டது... சொல்லரதப் பாத்தா இன்னொரு ஸ்பெக்ட்ரம் ஊழல் வரப் போகிறது போல...  
by H நாராயணன்,Hyderabad,India    18-05-2010 08:35:04 IST
 நன்றி ! தங்கள் தவறுகளை ஒப்பியதற்கு. நீங்கள் திறமையாக பணியாற்ற வேண்டும் என்றால் அதிக குற்றங்கள் செய்ய வேண்டும். வாழ்க பாரதம்.  
by S Balan,Chennai,India    18-05-2010 05:15:37 IST
 பணி சிறக்கவா! ஊழல் பணி சிறக்கவா? தில்லியிலே மிக நல்ல பெயர். வெட்கம், மானம் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. சம்பாரிப்பது மட்டும்தான் முக்கியம். குப்பைத் தொட்டியில் கோடிகள் பதுக்கிய மாயாவதியே பொறாமை படுவதாகக் கேள்வி. 
by K Maulee,Madurai,India    18-05-2010 04:24:52 IST
 ராஜா கைய வெச்சா அது தப்பா போனதில்லை; ராஜா தலித் என்பதினால் அவரை முடக்க முயல்கிரர்களா ? ஒன்றும் புரியவில்லை .....இந்த அரசியல் எலவில் எப்போதுதான் தெளிவு வரும்....அப்படி வந்தாலும் நல்ல அரசியல் வாதிகள் எப்போது உருவாவார்கள்..மக்களுக்கு எப்போது நல்லது நடக்கும்... என் இளம் வயதின் நாட்களை எண்ணி பார்க்கிறேன்....தலைவர் கலைஞர் ராக்போர்ட் எக்ஸ்ப்ரஸில் திருச்சி வரும்போது ஸ்ரீரங்கம் ஸ்டேஷன் வரும்போது விடி காலை 4 மணிக்கு பிரெஷாக பால் கறந்து பில்ட்டர் காபி போட்டு எடுத்து கொண்டு ரயில் வரும் முன் காத்து இருந்த (இருண்ட ) நாட்கள் ....நினைக்கும்போது ....என்ன தோன்றுகிறது .....நானும் ஒரு MLA ஆகவோ , மந்திரியாகவோ இருக்கலாம்...ஆனால் , ஜாதி வாரி வோட்டுக்கள் என்ற நிலையினால் , கட்சி தலைமையும் தன் நிலை மறந்ததே ......அன்பில் போன்ற நல்ல மனிதர்கள் மறைந்து விட்டனரே ! என் செய்வது .....அதுதான் நம் தனி திறமையின் பால் நம்பிக்கை கொண்டு, படித்து வேலை செய்து வாழ்வை வாழ்கிறோம் ...காசு,பணம்,ஜாதி இப்படிப்பட்ட பொருட்களை நோக்கின் , எந்த கட்சியும் உண்மையான தொண்டர்களை இழக்கும்....இதை படிப்பவர்கள் அனேக விமரிசங்களை எழுத அவர்களுக்கு உரிமை உண்டு என்றாலும், அவர்கள் இப்படிப்பட்ட அனுபவங்களை சந்திக்கததினால் ....எதை வேண்டுமானாலும் எழுதலாம் ......என்ன சொல்வது....ஆக மொத்தம் கணக்கு பார்த்தல் , அரசியலில் நல்லவன் மேலுக்கு வருவது என்பது ...சற்று(மிகவும்) கடினம்தான்.....தலைமை சிந்திக்குமா ?! 
by FG ஸ்மித்,London,UnitedKingdom    18-05-2010 02:56:03 IST
 போடங்க ...  
by Ari krishna,Lagos,Nigeria    18-05-2010 01:41:17 IST
 நீ வேலையில் சொதப்பினாலும், உன்னை பற்றி தலைவர் எப்பொழுதும் 'கனி'வாகதான் 'மொழி'வார். 
by K இளமாறன்,Chennai.,India    18-05-2010 00:44:13 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்