மெருகு கூடிக் கொண்டே போகிறது, எங்கள் நாயகிக்கு. அத்தனை செய்திகளும், முத்தாய் பயனுள்ளதாய் இருக்கிறது. எவ்வளவு தான் நாம் சொன்னாலும், அதிகாலை வாக்கிங் என்பதின் பலனை பெண்கள் கவனத்தில் கொள்வதில்லை. திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேயிருப்போம்.
முனைவர் கி.நிர்மலா, மந்தாரக்குப்பம், நெய்வேலி
போதை சாக்லேட் மிக அதிகமாக விற்பனை செய்து, இப்போது சோதனையில் பிடிபட்ட வடசென்னை பகுதிவாசி நான். இதன் வீரியத்தால் உயிரிழந்த மாணவனையும், இன்னும் இந்த போதைக்காக அலையும் பல மாணவர்களையும் நாங்கள் அறிவோம். அரசின் கடும் சட்டம் மட்டுமே இதை தடுக்க செய்யும்.