மதிப்பான மெடல்கள் | குமுதம் | Kumutham | tamil weekly supplements
மதிப்பான மெடல்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2010
00:00

- என்.சொக்கன்
காவல்துறை, ராணுவ அதிகாரிகளைப் பார்த்தவுடன், பெரும்பாலானோருக்கு உடனடியாக ஒரு மரியாதை வரும். சட்டென்று ஒரு சல்யூட் வைக்கக்கூடத் தோன்றும்.
இதற்கு முக்கியமான முதல் காரணம் அவர்களிடம் உள்ள அதிகாரத்தை நினைத்து லேசான பயம், நடுக்கும். அடுத்து, அவர்கள் அணிந்திருந்த சீருடை. அப்புறம், சட்டைப் பாக்கெட்டிலோ, தோள்பட்டையிலோ குத்தியிருக்கும் மெடல்கள், கௌரவச் சின்னங்கள்.
உண்மையில் பதக்கம் அல்லது மெடல் என்பது ஒரு சின்ன உலோகத்தகடு. ஆனால் அதுவே ஒருவருடைய சட்டையில் முறைப்படி குத்தப்படும்போது அவரது திறமை அல்லது தகுதிக்கான சான்றாக பெருமைக்குரிய ஒரு விஷயமாக மாறிவிடுகிறது இல்லையா?
போலீஸ்காரர்கள், ராணுவ சிப்பாய்கள் மட்டுமில்லை. நீங்களோ, நானோகடப் பெரிய சாதனைகளைச் செய்யலாம். பல விஷயங்களில் நல்ல திறமைசாலிகளாக இருக்கலாம். ஆனால் நமக்கெல்லாம் யார் மெடல் குத்துவார்கள்?
கவலையேபடாதீர்கள். மெடல் என்பதை இன்னொருவர் குத்தவேண்டும் என்று இல்லை. நமக்கு நாமே மெடல் சூட்டிக் கொள்ளலாம். நம்முடைய திறமையை தகுதியை வெளிப்படுத்தும் அடையாளமாகச் சின்னமாக அதை நினைத்துப் பெருமிதத்தோடு தலைநிமிர்ந்து நடக்கலாம் என்று நம்மைப் போன்ற சாதாரண மக்களுக்குத் தன்னம்பிக்கை ஊசி போடுகிறார் எட்வர்ட் டி பொனொ.
மேலாண்மை, கல்வி, சுயமுன்னேற்றம், சிந்தனை மாற்றம் போன்ற தலைப்புகளில் ஏராளமான புத்தகங்களை எழுதியிருக்கும் எட்வர்ட் டி பொனொ, எழுத்துலக சூப்பர் ஸ்டார். அவருடைய புத்தகங்கள் பல மொழிகளில் உலகம் முழுவதம் லட்சக்கணக்கில் விற்றுத் தீர்ந்துக் கொண்டிருக்கின்றன.
மனித வாழ்க்கையில் நாம் உணர்ந்து பின்பற்ற வேண்டிய விழுமியங்கள், மதிப்பீடுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு 'குடிது ஙச்டூதஞு Mஞுஞீச்டூண்' என்ற பெயரில் ஒரு சுவாரஸ்யமான புத்தகம் எழுதியிருக்கிறார் எட்வர்ட் டி பொனொ. அதில் விவரிக்கப்படும் ஆறுவிதமான பதக்கங்கள்:
1. தங்கள், 2, வெள்ளி, 3. இரும்பு, 4. கண்ணாடி, 5. மரம், 6. வெண்கலம்
இந்த ஆறு பதக்கங்களுக்கும் என்ன அர்த்தம்?
எந்தச் சூழ்நிலைகளில் நாம் இந்த மெடல்களைக் குத்திக் கொள்ளலாம்? ஒவ்வொன்றாய் பார்ப்போம்.
முதலில் தங்கம்
உலகம் முழுவதும் தங்கத்துக்கு மிகுந்த மதிப்பு அளிக்கப்படுகிறது. அதற்குக் காரணம் அதை மிகவும் கஷ்டப்பட்டு பூமிக்குள்ளிருந்து தோண்டி எடுக்க வேண்டும். சுத்தப்படுத்த வேண்டும். மேலும் ஏகப்பட்ட வேலைகளைச் செய்தபிறகுதான் நம்மால் அதன் மதிப்பை அனுபவிக்க முடியும்.
எட்வர்ட் டி.பொனோ, மனிதத்தன்மையைத்தான் தங்கத்துக்கு இணையாகக் குறிப்பிடுகிறார். சக மனிதர்களின் மீது மரியாதை செலுத்தி அவர்களோடு அக்கறையாகப் பழகுபவர்கள். தங்கள் சட்டையில் ஒரு தங்க மெடலைக் குத்திக் கொண்டு நெஞ்ச நிமிர்த்தி நடக்கலாம்.
அடுத்து வெள்ளி
நீங்கள் வசிக்கிற வீட்டில் உங்கள் குடும்பத்தில் தெருவில், ஊரில் உங்களுடைய சமூக வட்டத்தில் வேலை பார்க்கிற அலுவலகத்தில் எப்படி நடந்துகொள்கிறீர்கள்? உங்களைச் சுற்றியுள்ளவர்களின் நோக்கத்தோடு அது ஒத்துப்போகிறதா? அல்லது வெளியாள் போலத் துருத்திக்கொண்டு நிற்கிறீர்களா? அடுத்தவர்களை அரவணைத்து ஒத்துழைத்து ஒன்றாக முன்னே நகர்கிறீர்களா? இந்தக் கேள்விகளுக்கு பாஸிட்டிவ் பதில் வைத்திருக்கிறவர்களுக்கு வெள்ளி மெடல் நிச்சயம்.
மூன்றாவது இரும்பு!
நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவராக இருக்கலாம் அல்லது அடிமட்ட கிளர்க்காக இருக்கலாம். பதவி முக்கியமில்லை. அதோடு வருகிற பொறுப்புகளை உணர்ந்து ரசித்து அனுபவித்துச் செய்கிறவர்களுத்தான் இரும்பு மெடல் கிடைக்கும்.
நான்காவது கண்ணாடி!
இங்கே கண்ணாடி என்பது கிரியேட்டிவிட்டியைக் குறிக்கிறது. அதாவது வித்தியாசமாகச் சிந்திப்பது, திரும்பத் திரும்ப ஒரே வட்டத்துக்குள் சுற்றி வராமல் எதையாவது புதுசாகச் சிந்தித்து அறிமுகப்படுத்துவது இப்படி ஐடியா சிகாமணிகளாக உலகை தினம் தினம் புத்தம் புதுசாக்குகிறவர்களுக்கெல்லாம் கண்ணாடிப் பதக்கம் உறுதி.
ஐந்தாவது மரம்!
ஒரு சாக்லெட்டைப் பிரித்துச் சாப்பிடுகிறோம். அந்தக் காகிதத்தை நடுத்தெருவில் போடாமல் பாக்கெட்டிலேயே வைத்திருந்து அடுத்து எதிர்ப்படும் குப்பைத் தொட்டியில் போடுகிறோம். நம்மைச் சுற்றியிருக்கிற சமூகத்தில் நம்முடைய செயல்கள் என்னமாதிரியான தாக்கத்தை உருவாக்கும் என்று சிந்தித்துச் செயல்படுவது இந்தச் சமூக அக்கறையே மரப் பதக்கமாக நம்மை கௌரவப்படுத்துகிறது
கடைசியாக வெண்கலாம்!
நாம் செய்யும் ஒரு வேலையை மற்றவர்கள் எப்படிப் பார்ப்பார்கள்? அதற்கு ஏற்ப நாம் நமது பழகுமுறையில் ஏதாவது மாற்றம் செய்து கொள்ள வேண்டுமா? இந்தக் கோணத்தில் யோசித்துச் செயல்படுகிறவர்களுக்கு வெண்கலப் பதக்கம் தருகிறார் எட்வர்ட் டி பொனோ.
இரண்டு பையன்கள் ஒன்றாகப் பரீட்சை எழுதுகிறார்கள். ஒருவன் பாஸ், இன்னொருவன் ஃபெயில். பாஸ் செய்தவன் தன்னுடைய மகிழ்ச்சியை துள்ளிக் குதிப்பதற்கு பதில் தன் நண்பனுக்கு ஆறுதலாக அடுத்துவாட்டி நான் உனக்கு உதவி பண்றேன் என்ற தைரியம் தருகிறான். இதன் மூலம் அவனுக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்கிறது.
முக்கியமான விஷயம். இந்த ஆறு பதக்கங்களில் ஏதேனும் ஒன்றுதான் நீங்கள் அணியவேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரே நேரத்தில் இரண்டு மூன்று, நான்கு, ஐந்து ஏன் ஆறையும்கூட மொத்தமாக அணிந்து கொண்டு கம்பீரமாக உலா வரலாம். நம்மை நாமே கௌரவப்படுத்திக் கொள்ளவும். சிறந்த மனிதர்களாக வாழவும் இதைவிடச் சிறந்த வழி இருக்க முடியாது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X