தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்திலிருந்து பழப்பயிர்களில் 33 ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் சப்போட்டா ரகங்களான பி.கே.எம்.1, பி.கே.எம்.4, பி.கே.எம்.5, பப்பாளி ரகங்களான கோ.2, கோ.7, நெல்லி ரகம் பி.எஸ்.ஆர்.1, அருப்புக்கோட்டை சீதா 1 ரகம் ஆகியவை இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. வாழையில் நூற்புழு எதிர்ப்பு ரகங்களான எச்.212, எச்.531, எச்.9617, என்.பி.எச்.02-01 ஆகியவை இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன.
மஞ்சள் நாற்று நடவு:
பொதுவாக மஞ்சள் பயிர் கிழங்கின் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. மஞ்சள் நடவிற்கு விரலி, குண்டு மஞ்சள் பயன்படுகிறது. விதை மஞ்சள் 25 முதல் 30 கிராமிற்கு குறையாமலும் 3 முதல் 4 பரு கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஒரு எக்டருக்கு 2000 முதல் 2500 கிலோ விதைமஞ்சள் தேவைப்படுகிறது. பவானி சாகரிலுள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் விதை கிழங்கிற்குபதிலாக மஞ்சள் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. மஞ்சள் நாற்றை நாம் விதை கிழங்கின் மூலம் சாகுபடி செய்வதைப்போல் சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கருக்கு தேவையான நாற்றுக்களை உற்பத்தி செய்ய 500 கிலோ மஞ்சள் போதுமானது. ஒரு ஏக்கருக்கு நடவு செய்ய 55,000 முதல் 60,000 நாற்றுகள் தேவைப்படுகிறது. விதைக்கிழங்கினை பயன்படுத்தும்போது 80 சதவீதம்தான் முளைப்புத்திறன் இருக்கும். ஆனால் நாற்றுக்களை நடவிற்கு பயன்படுத்துவதால் 98 சதவீதம் பயிர்கள் முளைத்திருக்கும். நாறறுக்கள் நட்ட 2ம் மாதத்திலேயே கிழங்கு உருவாக ஆரம்பித்துவிடும். 8ம் மாதத்தில் நன்கு திரட்சியடைந்து 5 முதல் 6 தூர்கள் கொண்ட கிழங்குகள் அறுவடைக்கு தயாராகிவிடும். மிதமான அளவுக்கு நோய், பூச்சி தாக்குதல் இருக்கும். பொருளாதார சேத நிலையைத் தாண்டும்போது தகுந்த பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும். விதைக்கிழங்கு பயிரிட்டு கிடைக்கும் மகசூலைவிட அதிகபட்சமாக 50 சதவீதம் வரை நாற்றுக்கள் நடுவதன் மூலம் பெறலாம். (தகவல்: பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பவானிசாகர்-638 451, போன்: 04295-240 244).
மா:
அடர்நடவு முறையில் இரு அடுக்கு முறையில் 10x5x5 மீட்டர் இடைவெளியில் நெருக்கி நடவு செய்வதால் எக்டருக்கு 260 கன்றுகளை நடவு செய்யலாம். இரு அடுக்குகளுக்கு இடையில் 10 மீட்டர் இடைவெளி இருப்பதால் டிராக்டர் மூலம் மருந்து தெளிக்கவும், அறுவடை செய்யவும் இன்னும் பிற பயிர் பராமரிப்பு வேலைகளை செய்யவும் ஏற்றதாக இருக்கும். தற்போது அதிஅடர்நடவு முறையில் 3x2 மீட்டர் இடைவெளியில் ஒரு எக்டருக்கு 1666 மரங்கள் நடவு செய்வதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டிசம்பர் - ஜனவரி மாதங்களில் 10 செ.மீ. அளவில் நுனிக்கவாத்து செய்வதன் மூலமாகவும் அதையொட்டி பேக்லோபூட்ரசால் 0.75 கிராம்/மரம் என்ற அளவில் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் ஊற்றுவதன் மூலம் இடைப்பருவ காய்ப்பை பெறலாம். இலைவழியாக 20 கிராம்/லிட்டர் தண்ணீர் அளவில் சல்பேட் ஆப் பொட்டாஷ் உரத்தினைப் பூக்கும் தருணத்திலும் பின் காய்பிடிப்பு தருணத்திலும் தெளிப்பதன் மூலமாக காய்பிடிப்பினை அதிகரிக்கச் செய்வதோடு விளைச்சலையும் அதிகரிக்கலாம்.
வாழை:
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் திசுவளர்ப்பு வாழைகளே பயிரிடப்பட்டு வருகின்றன. வாழையில் அடர்நடவு முறையில் 1.8x3.6 மீட்டர் இடைவெளியில் 3 கன்றுகள் குழிக்கு நடவு செய்வதன் மூலம் எக்டருக்கு 4630 கன்றுகள் நடவு செய்ய முடியும். இம்முறையில் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் உரமிடுவதால் விளைச்சல் எக்டருக்கு 50 சதவீதம் வரை அதிகரிக்கலாம். நீர்த்தேவையும் உரத்தேவையும் குறைக்கப் படுவதால் அதிகம் லாபம் பெறலாம். வாழையில் பரிந்துரைக்கப்பட்ட உர அளவான தழை:மணி:சாம்பல் சத்து 110:35:330 கிராம்/மரம் என்ற அளவை அடர்நடவு முறையில் ஒரு குழியில் உள்ள 3 கன்றுகளுக்கு அளிக்கும்போது 75 சதவீத உரங்களை அளித்தாலே போதுமானது. அதாவது ஒரு குழிக்கு (3 கன்றுகள்) தேவையான உர அளவு 247.5 : 78.75 : 742.5 கிராம் தழை, மணி, சாம்பல் சத்து மட்டுமே நீர்வழி உரமிடல் மூலம் பகிர்ந்தளிக்கலாம். வாரங்கள் - தழை(%) - மணி(%) - சாம்பல்சத்து(%) 9-18 (10 வாரங்கள்) - 30 - 100 - 20 19-30 (12 வாரங்கள்)- 50 - 0 - 40 31-42 (12 வாரங்கள்) - 20 - 0 - 32 43-45 (13 வாரங்கள்) - 0 - 0 - 8 (தகவல்: முனைவர் ப.சுப்பையா, பதிவாளர், த.வே.ப.கழகம், கோவை-641 003) -டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.