நவீனதொழில்நுட்பம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2010
00:00

சிப்பிக்காளான் - பூச்சி, நோய் நிர்வாகம்
சிப்பிக்காளான் படுக்கைகளில் பச்சைப்பூசணம், பாக்டீரியா அழுகல் நோய் ஆகியவை அதிக ஈரப்பதத்தின் காரணமாக தோன்றுகின்றன. தவிர போரிட் ஈ, சியரிட் ஈ, ஸ்பிரிங்டெயில் பூச்சிகளும் தோன்றி காளான் படுக்கைகளில் முட்டைகளை இடுகின்றன.
ஒருங்கிணைந்த பூச்சி நோய் கட்டுப்பாடு முறைகளை கடைபிடிப்பது இன்றியமையாததாகிறது.
* காளான் படுக்கைகளைத் தயார் செய்ய நோய்கள், பூச்சிகள் தாக்காத வைக்கோலைப் பயன்படுத்த வேண்டும்.
* ஊறவைத்தபின் தொற்று நீக்கம் செய்யப்பட்ட வைக்கோல்களைப் படுக்கைகள் தயார் செய்ய பயன்படுத்துகிறோம். அவ்வாறு பயன்படுத்தும்போது வைக்கோலின் ஈரப்பதம் 60 முதல் 65 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது.
* வைக்கோலை உலர வைக்கும்போது மாலத்தியான் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மிலி என்ற அளவில் கலந்து தெளிப்பான் மூலம் ஈக்கள் வைக்கோலில் முட்டையிடுவதைத் தவிர்க்கலாம்.
* காளான் வளர்ப்புக் குடிலில் உள்ள சன்னல் கதவுகளுக்கு நைலான் வலைகள் பொருத்த வேண்டும். இதன்மூலம் ஈக்கள், வண்டுகள், காளான் குடிலுக்குள் வருவது தடுக்கப்படுகிறது.
* காளான் படுக்கைகளில் ஈரப்பதத்தைக் காக்க காலை, மாலை வேளைகளில் நீர் தெளிக்கும்போது காளான் படுக்கையில் நீர் தேங்கினால் காளான் அழுகிவிடும். நீர் தெளிப்பதற்கு சிறு தெளிப்பான்களைப் பயன்படுத்துவது அவசியம்.
* நல்ல தரமான பூசண நோய்களால் பாதிக்கப்படாத காளான் வித்துக்களை மட்டும் காளான் படுக்கைகள் தயார் செய்ய பயன்படுத்த வேண்டும்.
* பாக்டீரியா அழுகல் நோயைத் தடுக்க பிளீச்சிங் பவுடரை ஒரு லிட்டர்  நீருக்கு 2 கிராம் என்ற விகிதத்தில் கலந்து படுக்கைகள் மீது தெளிக்க வேண்டும்.
* கிளைப்பூசணங்கள் தோன்றிய படுக்கைகளை உடனடியாகக் காளான் குடிலில் இருந்து அகற்றி அழித்துவிட வேண்டும்.
* காளான் குடிலின் அருகில் குப்பைக்குழிகள் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். களைப்பூசணம், பாக்டீரியா அழுகல் நோய், போரிட் ஈ ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட காளான் படுக்கைகளை பெரிய குழிதோண்டி புதைத்துவிட வேண்டும். குழிகளின் மேற்பகுதியில் எண்டோசல்பான் மருந்தை லிட்டருக்கு ஒரு மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.
* காளான் குடில்களை அறுவடை முடிந்தபிறகு 45 நாட்களுக்கு ஒரு முறை தொற்றுநீக்கம் செய்வது அவசியம். இதற்கு பார்மலின் பொட்டாசியம் பெர்மாங்கனேட் மருந்துகளை 2:1 என்ற விகிதத்தில் கலந்து குடில்களில் வைத்தபின் இரண்டு நாட்களுக்கு குடிலைத் திறக்கவோ, உள்ளே செல்லவோ கூடாது. குடிலின் சன்னல்களும் நன்றாக மூடப்பட்டிருக்க வேண்டும். (தகவல்: சே.கோபாலகிருஷ்ணன், வீ.வள்ளுவபாரிதாசன், வே.பிரகாசம், பயிர் நோயியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003).
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முத்துசாமி.M - Madurai,இந்தியா
18-நவ-201016:54:31 IST Report Abuse
முத்துசாமி.M வணக்கம், இயற்கை விவசாயம் பற்றியும் இயற்க்கை உணவுப் பொருள்கள் விற்பனை அங்காடிகள்(Organic Food Products Selling Shops) பற்றியும் தற்பொழுது தேடல்கள் துவங்கியுள்ள காலத்தில் விவசாய மலரில் இயற்கை விவசாயம் மற்றும் சந்தை படுத்தும் முறைகள் பற்றியும் அறிந்து கொள்ளவதில் மிகவும் ஆவலாய் இருக்கிறேன், இது குறித்த செய்திகளை வெளியிடுவீர்களா என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X