சின்னச்சின்ன செய்திகள் | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements
சின்னச்சின்ன செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 நவ
2010
00:00

வெட்டிவேர்: இயற்கை முறையில் சாகுபடி செய்துவரும் ராஜகோபாலன் கூறுவது: இது ஒரு லாபகரமானபயிர். இதற்கு அதிக ஆள் தேவையில்லை. அதிக தண்ணீர் தேவையில்லை. அதிக வெயில் தேவையில்லை. அப்படியே அதிக தண்ணீர், அதிக வெயில் இருந்தாலும் அதனால் பெரிய பாதிப்பு இல்லை. வெட்டிவேர் புல்லானது நல்ல மருத்துவகுணம் உள்ளதால் இதற்கு சந்தையில் நல்ல கிராக்கி இருக்கிறது. பயிர் செய்வதற்கு தேவையான இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட 50,000 வெட்டிவேர் நாற்றுகள் விலைக்கு உள்ளன. வேண்டுவோர் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: வீ.ராஜகோபாலன், ஸ்ரீதேவி மெடிக்கல்ஸ், திருவளப்பாடி, அத்தாணி, அறந்தாங்கி வட்டம், புதுக்கோட்டை-614 630. 04371-244 408.

மஞ்சள் கிழங்கு பாலிஷ் செய்ய மானிய விலையில் இயந்திரம் வாங்க நறுமணப் பொருட்கள்வாரியம் மானியம் வழங்கி வருகிறது. 16 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்குகிறது. இது தனிப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படுவதில்லை. சுய உதவிக்குழுவினர், தொண்டு நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகள் போன்றவற்றிற்குத்தான் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் வாசனைப் பொருட்கள் வாரியத்தின் கள அலுவலகம் போடிநாயக்கனூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. வாரியம் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து இங்கு விபரங்கள் பெறலாம். தொடர்புக்கு:  போடிநாயக்கனூர் - 04546-280 317, கோயம்புத்தூர்-0422-247 4430.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X