சின்னச்சின்ன செய்திகள் | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements
சின்னச்சின்ன செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜன
2011
00:00

இயற்கை முறையில் தென்னையைத் தாக்கும் ஈரியோபைட் சிலந்தி கட்டுப்பாடு: இயற்கை முறையில் விவசாயம் செய்யும் கொழுமம் கிராமத்தைச் சேர்ந்த பிறைசூடிப் பித்தன் தன்னுடைய தென்னந்தோப்பில் முழுவதும் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து இருக்கிறார். உழவு போட்டு நாலு வருஷமாகிறது. விஷச்செடிகள் தவிர மற்ற செடிகளை அகற்றுவதில்லை. பாசன நீருடன் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் கலந்து போகும்படி பம்ப்செட் குழாயில் டேங்க் இணைத்து ஒவ்வொரு பாசனத்திலும் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் என மாறி மாறி பாசன நீரில் சென்றுகொண்டே இருக்கும் என்று கூறுகிறார் விவசாயி. தென்னை மரத்தைச் சுற்றிலும் சோற்றுக்கற்றாழை பயிர் செய்துள்ளார். கற்றாழையின் கசப்புத்தன்மை தென்னைமர வேர்களுக்கு செல்கிறது. இதனால் தென்னையைத் தாக்கும் ஈரியோபைட் வாடல் நோய் போன்றவை குறைகிறது. இளம் குரும்பைகள் அதிக அளவு உதிர்வதும் குறைந்துவிட்டது.
சராசரியாக ஒரு மரத்திலிருந்து 40 நாட்களுக்கு ஒரு முறை 20 முதல் 25 முற்றிய காய்கள் அறு வடை செய்கிறார். தேங்காயின் தரம், கொப்பரையின் பிழிதிறன் அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு இருமுறை மரத்துக்கு 10 கிலோ தொழு உரம், 5 கிலோ மண்புழு உரமும் இடுகிறார். தோப்பினுள் விழும் தென்னை மட்டைகளை வெட்டி, மரத்தைச் சுற்றிலும் மூடாக்காகப் போட்டுவிடுவதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் வெயில் காலங்களில் ஈரம் காக்கப்டுவதுடன் மட்கி எருவாகவும் மாறிவிடுகின்றன தென்னைக் கழிவுகள் (தகவல்: பசுமைவிகடன், 10.1.11)


எர்த் ஆகர் - குழிபோடும் கருவி: 2 ஸ்ட்ரோக் இன்ஜின் அமைப்புடைய இந்தக்கருவி ஒரு லிட்டர் பெட்ரோலைக் கொண்டு ஒரு மணி நேரம் வேலை செய்யும் திறன் கொண்டது. ஒரு மணி நேரத்தில் 50-60 குழிகளை வெகு எளிதாகத் தோண்டிவிடும். இது 10 கிலோ எடை கொண்டது என்பதால் எந்த இடத்திற்கும் இதை எடுத்துச் செல்லலாம். ஆள் வைத்து குழி எடுக்க ஒரு குழிக்கு 8,10ரூபாய் ஆகும் செலவை எர்த் ஆகர் ஒரு குழிக்கு ரூ.3 என்ற செலவில் மிச்சப்படுத்துகிறது. தேயிலை, காபி, மா, வாழை, தென்னை, பாக்கு, தேக்கு போன்ற பயிர்களுக்கு குழியிட இதை பயன்படுத்தலாம். வாழைமரம் காற்றில் அசைந்து விழாமல் இருக்க சப்போர்டுக்கு குச்சி நடுவதற்கு இதனைக் கொண்டு குழியிடலாம்.
எர்த் ஆகரின் அடக்கவிலை ரூ.43,680/-. அதில் ரூ.21 ஆயிரம். மானியத் தொகை போகை ரூ.22,680-ஐ விவசாயிகள் கொடுத்தால் போதும். மேக்ஸ் இன்ஜினியரிங் நிறுவனம் 50 சதவீத மானிய சலுகையில் வழங்கிவருகிறது. சிட்டா, அடங்கல் கொண்டு வந்தால் இந்நிறுவனம் மானியத் தொகையைப் பெற்றுக்கொடுத்து இயந்திரம் வழங்க தயாராக உள்ளது. எர்த் ஆகர் எவ்வாறு இயங்குகிறது என்பதை வீடியோ காட்சியாக பார்த்து அறிந்துகொள்ள தீதீதீ.தூணிதtதஞஞு.ஞிணிட்/தீச்tஞிட?தி=அச்3து8சுNஙூ6டு என்ற இணைய முகவரியை தொடர்புகொள்ளலாம்.
மேலும் தொடர்புக்கு "மாக்ஸ் இன்ஜினியரிங், 24, வண்டிக்காரன் தெரு, மடுவங்கரை, கிண்டி, சென்னை-32. 044-3250 0041, 98841 00041'.
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்


Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X