சுபஸ்ரீ ஜெயஸ்ரீ இன்னிசை | கலை மலர் | Kalaimalar | tamil weekly supplements
சுபஸ்ரீ ஜெயஸ்ரீ இன்னிசை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 பிப்
2011
00:00

முத்துஸ்வாமி தீக்ஷிதரின் ஏக தந்தம், பிலஹரி ராஜ கீர்த்தனையுடன் தங்களது இசை நிகழ்ச்சியை மிக அற்புதமாக துவங்கினார். சுபஸ்ரீ, ஜெயஸ்ரீ அதிகம் பாடப்படாத பாடலாக இருந்ததை இவர்கள் பாடியதில் திருப்தி கிடைத்தது. வலயப்பட்டி நாதாலய காச்யப் இசை விழாவில் கௌரி மனோஹரி ராஜ குருலேக கீர்த்தனையை கொடுத்து தங்களது இந்நிகழ்ச்சியை மிக வித்யாசமாகவே களைக் கட்ட வைத்தனர்.
அடுத்து சபஸ்ரீ ஹிந்தோள ராக ஆலாபனையை மிக சுகமாக கொடுத்தார். பாபநாசம் சிவனின் மோஹனராக நாராயண த்வ்ய நாமம் கீர்த்தனை இதுவம் அதிகம் பாடப்படாத பாடல் பத்ம நாப சுவாமி கோவிலின் அரங்கத்திற்கு ஏற்ப மிக பொருத்தமாக அமைந்தது. அடுத்து தர்மவதி ராகத்தை ஜெயஸ்ரீ ப்ரதான ராகமாக எடுத்துக் கொண்டு மிக அழகான அதன் ஜீவஸ்வரம் ராக ரஞ்சக ப்ரயோகங்களை கொடுத்து தனது திறமையை வெளிக்காட்டினார்.
அடுத்து கோபாலகிருஷ்ண பாரதியின் ஆடும் சிதம்பரமோ என்ற பெஹாக்ராக பாடலை கொடுத்தனர். அடுத்து பஜன் ஒன்றை கொடுத்து அதைத் தொடர்ந்து விஷ்ணு சஹஸ்ர நாம் ஸ்தோத்திரமான சாந்தா காரம் என்ற ஸ்தோத்திரத்தை ஹண்முகப்ரியா, வலஜி, ஹம்ஸநாதம், ஹம்சானந்தி இந்த நான்கு ராகங்களில் விருத்தமாக கொடுத்து பாடினர்.
பொதுவாக விருத்தம் பாட நிறைய ராக ஞானம் வேண்டும். பொருள் சிதையாமல் கொடுப்பதுடன் நம் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் முன்பெல்லாம் விருத்தம் பெரும் பங்கு வகித்தது. ஆனால், இன்று அதை தேடி கண்டுபிடிக்க வேண்டிய நிலை சகோதரிகள் பாட மனம் கொஞ்சம் திருப்தி அடைந்தது. முத்தய்யா பாகவதரின் ஹம்சானந்தி ராக தில்லானாவுடன் தங்களது நிகழ்ச்சியை நிறைவு செய்தனர். ஆரம்பத்திலிருந்து இவர்களுக்கு தினேஷ் வயலினில் மிக அற்புதமாக வாசித்து ஒத்துழைப்பு கொடுத்தார். ஸ்ரீதர் மிருதங்கத்தில் மிக பக்குவமாக வாசித்து சிறப்பித்தார்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X