நவீன தொழில்நுட்பம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2011
00:00

மஞ்சள் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்பாடு: மஞ்சள் பயிரை 25 வகையான பூச்சிகள் தாக்கி சேதப்படுத்துகின்றன. இதில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்பாடு பற்றி பார்ப்போம்.
கிழங்கு செதில் பூச்சி: இது மஞ்சளைத் தாக்கும் முக்கியமான பூச்சியாகும். மஞ்சள் பயிரை வயல்களிலும் சேமிப்பு கிடங்குகளிலும் தாக்குகிறது. பயிரின் கிழங்குகளின் மேல் கூட்டம் கூட்டமாக இருந்து சாறை உறிஞ்சி செடிகள் வாடி காய்ந்துவிட ஏதுவாகிறது. சேமிப்பு கிழங்குகளைத் தாக்கும்போது கிழங்கின் எடை குறைந்து முளைப்புத்திறன் பாதிக்கப்படுகிறது.
கட்டுப்படுத்தும் முறைகள்: பூச்சி தாக்கிய இலைகள், தண்டுகள் முதலியவற்றை சேகரித்து அழித்துவிட வேண்டும். பூச்சி தாக்காத நல்ல விதை கிழங்குகளை தேர்வுசெய்து சேகரிக்க வேண்டும். டைகுளோர்வாஸ் 2 மிலி அல்லது மானோகுரோட்டோபாஸ் 15 மிலி/லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து அந்த கலவையில் விதைக்கிழங்குகளை நனைத்து நிழலில் உலர்த்தி பின்னர் நடவுக்கு பயன்படுத்த வேண்டும். நன்கு மக்கிய 10 டன் ஆட்டு தொழு உரத்தை இரண்டாகப் பிரித்து பாதியை உழவு செய்யும்போதும் மீதியை மண் அணைக்கும்போதும் ஒரு எக்டரில் இடவேண்டும். இதனைத் தொடர்ந்து டை மீத்தோயேட் மருந்தை 2 மிலி/லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். விதைக்கிழங்கை குயினால்பாஸ் 2 மிலி/லிட்டர் கரைசலில் அறுவடை செய்தவுடனும், நடுவதற்கு முன் 5 நிமிடமும் நனையவைத்தும் இப்பூச்சி தாக்குதலைக் குறைக்கலாம்.
கண்ணாடி இறக்கைப்பூச்சி: தாக்கிய இலைகளில் மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றி இலைகள் முதலில் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறி காய்ந்துவிடும். மஞ்சள் கலந்த நிறத்துடன் கண்ணாடி இறக்கையுடன் உள்ள இப்பூச்சிகள் இலையின் அடிப்பகுதியில் கூட்டம் கூட்டமாக இருந்துகொண்டு சாறை உறிஞ்சி சேதப்படுத்துகிறது. இதனால் இலைகள் காய்ந்துவிடும். இப்பூச்சியைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட இலைகளை பூச்சிகளுடன் சேகரித்து அழிக்க வேண்டும். டைமீத்தோயேட் அல்லது மீதைல் டெமட்டான் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மிலி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
இலைப்பேன்: வெளிர் மஞ்சள் நிறத்தில் குஞ்சுகளும், பழுப்பு நிறத்தில் வளர்ந்த பூச்சிகளும் இலையின் மேல் கூட்டம் கூட்டமாக இருந்துகொண்டு சாறை உறிஞ்சும். இதனால் இலைகள் சுருண்டு வெளிறிய பச்சை நிறத்தில் காணப்படும். தாக்குதல் அதிகரிக்கும்போது இலைகள் காய்ந்துவிடும். இலைப்பேன் வெளிர்மஞ்சள் நிறத்துடன் சீப்புபோல் பிளவுபட்ட இறக்கைகளுடன் காணப்படும். தாய் பூச்சியானது இலைகளில் ஒரு வெட்டுப்பகுதியை உண்டாக்கி அதனுள் முட்டை இடும்.
கட்டுப்படுத்தும் முறைகள்: பாதிக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்க வேண்டும். டைமீத்தோயேட் 2 மிலி அல்லது பாசலோன் 2 மிலி மருந்துக்கு 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். (தகவல்: கு.கோவிந்தன், வேளாண் பூச்சியியல் துறை, சா.ராஜதுரை மற்றும் தொண்டைமான், தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003).
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X