லிபியா நடப்பதென்ன சதியா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2011
00:00

துனிசியா, எகிப்து ஆகிய நாடுகளில் பரவிய மக்கள் எதிர்ப்பலை லிபியாவில் பரவியபோது பலர் ஆச்சர்யம் அடைந்தார்கள். லிபியாவிலா? மக்கள் எழுச்சியா? ஊர் உலகத்துக்கு வேண்டுமானால் கடாபி, வில்லனாக இருக்கலாம், லிபியர்களுக்கு அவர் தலைவர் அல்லவா<? புரட்சியை வழிநடத்தியவர் அல்லவா? பாலைவனச் சோலை அல்லவா? என்ன நடக்கிறது லிபியாவில்?
ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே 20 லட்சம் பேர் கொண்ட லிபியாவில்தான் தனிநபர் வருமானம் அதிகம். பல்லாயிரக்கணக்கான எகிப்தியர்கள் லிபியாவில் தங்கி பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். உடல் சார்ந்த தொழில்களில் லிபியர்களைக் காட்டிலும் அன்னியர்களையே அதிகம் நம்பியிருக்கிறது லிபியா. கட்டுமானப் பணிகள், துப்புரவுப் பணிகள் போன்றவற்றை ஒப்பந்தக்காரர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். எகிப்தில் கிடைத்ததை விட மூன்று மடங்கு அதிக ஊதியத்தை லிபியா அளித்தது. அயல் நாட்டினருக்கே இந்த நிலை என்றால் லிபியர்களுக்குக் கேட்க வேண்டுமா? அத்தனைக்கும் காரணமானவர் கடாபி அல்லவா?

செப்டெம்பர் 1969ல், இட்ரிஸ் மன்னரின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, தலைமைப் பதவி ஏற்றுக்கொண்டார் முவாமர் கடாபி. அதிகம் ரத்தம் சிந்தாமல் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து முடிந்தது. கடாபிக்குப் பெரிதாக எதிர்ப்புகள் எதுவும் இல்லை. காரணம் ஆட்சியில் இருந்த இட்ரிஸ் மன்னரின் மீது ஒருவருக்கும் அபிமானம் இல்லை. எப்படியோ ஒழிந்தால் தேவலை என்று நினைத்தார்கள்.
முதல் காரியமாக, கடாபி எண்ணெய் உற்பத்தியை தேசியமயமாக்கினார். லிபியாவின் எண்ணெய் வளம் மட்டுமல்ல அதன் மூலம் வருவாயும் லிபியாவையே சேரவேண்டும் என்று அதிரடியாக அறிவித்தார். சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல், எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைத்த லாபத்தை மக்கள் நலப்பணிகளில் திருப்பி விட்டார்.
ஊழலும் அடக்குமுறையும் வறுமையும் உச்சத்தில் இருந்த லிபியாவில், நிலையான வீடு இல்லாததால் ஆயிரக்கணக்கான லிபியர்கள் பாலைவனக் கூடாரங்களில் வாழ்ந்து வந்தார்கள். கடாபி ஆட்சியில் இந்தக் கூடாரங்கள் ஒவ்வொன்றாக மறைய ஆரம்பித்தன. ஒன்றைத் தவிர. அது கடாபியின் கூடாரம். ஒரு நாட்டின் தலைவராக இருந்தாலும், பெரும் மாளிகையொன்று கடாபிக்குச் சொந்தமாக இருந்த போதும், எங்கேனும் வெளிநாடு செல்லவேண்டியிருந்தால், கூடாரத்தை மடக்கி, கையோடு கொண்டு சென்று விடுவார். "என்னது ஹோட்டலா? மன்னிக்கவும், பழக்கமில்லை நண்பா!' நத்தைக்கு அடுத்து தன் வீட்டை, தானே சுமந்த ஒரே மனிதன் கடாபிதான்.
கால்நடைகள் மேய்க்கும் வறிய குடும்பத்தில் பிறந்தவர் கடாபி. கடாபா என்னும் சிறிய ஆதிவாசிக் குழுவைச் சேர்ந்தவர்.
பிறந்தது ஒரு கூடாரத்தில். ஓர் இஸ்லாமியப் பள்ளியில் படிக்க ஆரம்பித்து, பிறகு தனிப்பட்ட ஆசிரியர் ஒருவரின்கீழ் பாடங்களை படித்துக்கொண்டார்.
பெங்காசியில் உள்ள ராணுவ அகாதெமியில் 1961 ஆம் ஆண்டு இணைந்தார் கடாபி. 1967ல் இஸ்ரேல், அராபியர்களின் எழுச்சியைப் பரிதாபகரமான முறையில் அழித்தொழித்தது. ராணுவப் பயிற்சி தந்த பலமும், இந்தத் தோல்வி அளித்த பாரமும் கடாபியின் ஒவ்வொரு ரத்த அணுவிலும் ஒட்டிக் கொண்டது. அப்போதே சில முடிவுகளை எடுத்துவிட்டார் கடாபி. அராபியர்களை அடக்கியாளும் முடியாட்சியை ஒழிப்பேன். இது முதல் எதிரி. இரண்டாவது எதிரி, இஸ்ரேலும் அதற்கு ஆதரவு தரும் மேற்குலகமும். அவர்களை, என் ஆயுள் முழுவதும் எதிர்ப்பேன் என்றார். சோஷலிசம் பேசினார். ஏகாதிபத்தியத்தை எதிர்த்தார். துணிச்சலுடன் சில விஷயங்கள் சாதித்தார். பெண்களுக்குச் சொத்துரிமை அதில் முக்கியமானது.
அதே கடாபி, ஆட்சி தந்த மயக்கத்துக்கும் ஆட்பட்டார். குடும்ப அரசியலை ஆரம்பித்து சொத்து சேர்த்தார். கடாபியைக் கொண்டாடிய லிபியர்களே முகம் சுளிக்கும்படி நடந்துகொண்டார். விளைவு, அரபுலக நாடுகளில் தொடங்கிய எதிர்ப்புகள் லிபியாவிலும் பரவியது. கிளர்ச்சியாளர்கள் கடாபியின் ராஜினாமாவைக் கோரினர். பதிலுக்கு கடாபி தன் படைகளை அவர்கள் மீது ஏவினார். எல்லாம் உண்மை.
ஆனால், எதற்காக இன்று அமெரிக்காவும் (என்றால் ஐ.நா என்று பொருள்) பிரிட்டனும் பிரான்ஸும் லிபியா மீது குண்டு மாரி பொழிந்து கொண்டிருக்கின்றன? சர்வாதிகார கடாபியின் ஆட்சியில் இருந்து லிபியர்களை விடுவிக்கத்தான் என்கின்றன இந்த நாடுகள். மேலும், ஜனநாயகத்தை அங்கே கொண்டு வரப் போகிறார்களாம்.
உண்மை காரணங்கள் வெளிப்படையானவை. லிபிய மக்களுக்கு ஆயிரம் தவறுகள் செய்திருந்தாலும், அமெரிக்காவையும் மேற்குலக நாடுகளையும் கடாபி கடுமையாக எதிர்த்து வந்தார். பொங்கும் எண்ணெய் வளத்தை மற்றவர்கள் உறிஞ்சிக் கொள்ளாதவாறு தடுத்து, தேசிய மயமாக்கினார். எனவே கடாபி எதிர்க்கப்பட வேண்டியவர். எனவே, மக்கள் எழுச்சி ஏற்பட்டிருக்கும் இந்தச் சூழலைப் பயன்படுத்தி கிளர்ச்சியாளர்களை கடாபிக்கு எதிராக ஏவிவிட்டு, லிபியா மீது குண்டு வீசும் விமானங்களைப் பறக்கவிட்டிருக்கின்றன இந்நாடுகள். இச்செயல் ஜனநாயகத்துக்கு விரோதமானது, காட்டு மிராண்டித்தனமானது. கடாபி தண்டிக்கப்படவேண்டியவர் என்றால் அதற்கான உரிமை லிபியர்களுக்கு மாத்திரமே இருக்கிறது.

- மருதன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X