வேலிமசால்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2011
00:00

தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக கால்நடை தீவனமான ""வேலிமசால்'' பயிரிடலாம். கால்நடை தீவனமாக புல்வகையை சேர்ந்த வேலிமசால் பயன்படுகிறது. இதற்கு டிவிடிவி, கூவாப்புல், வேலிபுல் என பல பெயர் உள்ளது. விதை விதைத்த நான்காவது நாளில் செடி துளிர்த்துவிடும். தென்னைக்கு காட்டும் தண்ணீரே காட்டினால் போதுமானது. விரைந்து வளரக்கூடிய இந்த புல் செடியை வெட்டி கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கலாம். கால்நடைகளுக்கான தீவனம் குறைந்து வரும் இவ்வேளையில் இதுபோன்ற செடிகள் நல்ல லாபத்தை விவசாயிகளுக்கு ஈட்டித்தருகிறது. ஐந்தாண்டு வரை இந்த செடியிலிருந்து இலைகளை அறுக்கலாம். செடியில் பச்சையம் சத்து அதிகளவு உள்ளதால் கால்நடைகளுக்கு மட்டுமல்ல, தென்னை மரத்துக்கு உரமாகவும் பயன்படுத்தலாம். செடியின் ஒரு கிலோ விதை 650 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன்மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும். தென்னை, பாக்கு, வாழைகளுக்கு இடையே இதை ஊடுபயிராக பயிரிடலாம்.
இரும்புக்கலப்பை கொண்டு இரு முறையும், நாட்டுக்கலப்பை கொண்டு மூன்று அல்லது நான்கு முறையும் உழவேண்டும். பார் பிடித்தல் 6 மீ நீளம் மற்றும் 1 மீ இடைவெளியில் பார் பிடித்து பார் களுக்கிடையில் வாய்க்கால்களை அமைக்க வேண்டும். மண் பரிசோதனையின்படி உரமிட வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிடில் (எக்டருக்கு) அடியுரமாக 10:60:30 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து இடவும்.
விதை அளவு - தீவனத்திற்கு எக்டருக்கு 10 கிலோ.
அமில நேர்த்தி: விதைகளை அடர் கந்தக அமிலத்தில் மூன்று நிமிடம் ஊறவைத்து விதைகளை நன்கு கழுவிய பின் குளிர்நீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். அல்லது விதைகளை வெந்நீரில் நான்கு நிமிடம் ஊறவைத்து பின் குளிர்நீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மேலும் எளிய முறையாக பாத்திரத்தில் நீரை 1000 செ.கி.க்கு கொதிக்கவைத்து பின் 4 நிமிடம் ஆறவைத்து (800 செ.கி) விதைகளை 3-4 நிமிடம் ஊறவைக்க வேண்டும். அடுத்து சூடான நீரை வடித்துவிட்டு குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். விதைகளை 72 மணி நேரம் குளிர்ந்த நீரில் ஊறவைத்தும் வைக்கலாம். விதைநேர்த்தி செய்தபின் ரைசோபியம் உயிர் உரத்தை அரிசிக்கஞ்சியில் கலந்து காயவைத்தபின் விதைக்க வேண்டும்.
நீர் மேலாண்மை: பாசன பகுதிகளில் வளர்க்கப்படும் பயிர்களுக்கு நீர் மேலாண்மை செய்திட வேண்டும். வளர்ச்சியடைந்துவிட்டால் சில மாதங்களின் வறண்ட சூழ்நிலையையும்கூட தாக்குப்பிடித்து விடும். இருந்த போதிலும் விரைவான இளஞ்செடிகளின் வளர்ச்சிக்கு நிலத்தில் 5 முதல் 6 மாதங்கள் வரை ஈரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
அறுவடை: நட்டபின் 6 மாதத்திற்கு பிறகு அறுவடை செய்யலாம். தண்டின் விட்டம் 3 செ.மீ. அடைந்தவுடன் (அல்லது) ஒருமுறை விதை உற்பத்திக்கு விட்டவுடன் முதல் அறுவடை செய்யலாம். அதற்கு பிறகு 40-80 நாட்களில் வளர்ச்சி மற்றும் பருவத்திற்கேற்ப அறுவடை செய்யலாம். வறட்சி அதிகமுள்ள பகுதிகளில் மரத்தை இரண்டு முதல் மூன்று வருடத்திற்கு அறுவடை செய்யாமல் விட்டுவிட வேண்டும். மரத்தை தரைமட்டத்திலிருந்து 90-100 செ.மீ. உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும். பூட்டு மற்றும் எரிபொருளாக பயன்படுத்த மரத்தை 2.5 அல்லது 5 வருடத்திற்கு வெட்டாமல் பக்கக்கிளைகளை அகற்றிவிட வேண்டும். தொடர்புக்கு: ஆர்.ஜி.ரீஹானா, அக்ரி கிளினிக், 268/77, பழைய ஹவுசிங் யூனிட், தாராபுரம்-638 657.
ஆர்.ஜி.ரீஹானா, தாராபுரம், 89037 57427.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X