தென்னையில் ஊடுபயிராக நெல்: கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் தாலுகா, குருந்தன்கோடு ஊராட்சி, ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த டி.தேவதாஸ் தென்னந்தோப்பில் நெற்பயிரைப் பயிரிட்டு சாதனை படைத்துள்ளார்.
குறுவையில் ஒரு ஏக்கர் நிலத்தில் 25 வருட வயதுள்ள தென்னை மரங்களை 25 அடி இடைவெளியில் நட்டு ஆண்டிற்கு இருமுறை ஊடுபயிராக சணப்பையும், தக்கைப்பூண்டையும் இயற்கை உரமாக பயன்படுத்துகிறார். கன்னிப்பூ பருவத்தில் செம்மை நெல் சாகுபடி முறையில் டி.கே.8004 என்ற நெல் விதையை நாற்றங்கால் அமைத்து
10 சென்ட் நிலப்பரப்பில் இயற்கை உரமிட்டு நடவு செய்து அறுவடை செய்து 140 கிலோ என்ற அளவில் நெல் விளைச்சல் பெற்றுள்ளார். தொடர்புக்கு: 98436 61262.
புதுக்கோட்டை பலா : ஒரு ஏக்கர் வரப்பில் 150 மரங்கள். அடர்நடவு முறையில் 300 மரங்கள் வரை. 5-6வது வருடம் முதல் தொடர் வருமானம். வருடந்தோறும் ரூ.1 லட்சத்திற்கு மேல் வருமானம். வயல் விளையவில்லை என்றால் வரப்பு பலா பலன் தரும். வறட்சி ஏற்பட்டாலும் பலா மட்டும் தொடர்ந்து பலன் தரும். பலாவோடு மிளகை ஜோடி சேர்த்தால் இரட்டிப்பு வருமானம். மேலும் விபரங்களுக்கு: லயன் எஸ்.டி.குமிழ் சண்முகசுந்தரம், ஸ்ரீஜெகதீஸ்வரர் உயர் ரக நாற்றுப்பண்ணை, ஆலங்குடி வழி, கொத்தமங்கலம் அஞ்சல், புதுக்கோட்டை. 94860 60136, 98942 91818. காட்டுப்புத்தூர் ராதாகிருஷ்ணன் - 99441 31671.
கேழ்வரகு ரகங்களும் சிறப்பியல்புகளும்
கோ.9:- வயது 100 நாட்கள். தானிய மகசூல் 4500 கிலோ/எக்டர். தட்டை விளைச்சல் 7000கிலோ/எக்டர். தானியம் வெள்ளை, மதிப்பூட்டம் பெறுவதற்கு ஏற்றது. மாவாகும் தன்மை அதிகம். அதிக புரதச்சத்து கொண்டது.
கோ.13:- வயது 105 நாட்கள். மகசூல் 3500 கிலோ/எக்டர். தட்டை விளைச்சல். 10,000 கிலோ/எக்டர். வறட்சியைத் தாங்க வல்லது. மானாவாரி மற்றும் இறவைக்கு ஏற்றது.
கோ (ரா) 14:- வயது 105-110 நாட்கள். மகசூல் 2774 கிலோ/எக்டர். தட்டை - 8428 கிலோ/எக்டர். அதிக புரதம், சுண்ணாம்பு சத்து உடையது. குலைநோய்க்கு சகிப்புத் தன்மை உடையது. மானாவாரி இறவைக்கு ஏற்றது.
கே.7:- வயது 95-100 நாட்கள். தானிய மகசூல் 3130 கிலோ/எக்டர். தட்டை - 5150 கிலோ/எக்டர். மானாவாரி, இறவைக்கு ஏற்றது.
டி.ஆர்.ஒய்.1:- வயது 102 நாட்கள். மகசூல் 4011 கிலோ/ எக்டர். தட்டை மகசூல் 6800 கிலோ/எக்டர். களர், உவர் நிலத்திற்கு ஏற்றது.
பையூர்.1:- வயது 115 நாட்கள். தானிய மகசூல் 3125 கிலோ/எக்டர். தட்டை - 5750 கிலோ. வறட்சியைத் தாங்க வல்லது. நீண்ட விரல் ரகம். மானாவாரி, இறவைக்கு ஏற்றது.
பையூர் (ரா) 2:- வயது 115 நாட்கள். மகசூல் 3150 கிலோ/எக்டர். தட்டை - 6000-7000 கிலோ/எக்டர். சாயாத தன்மை. குலைநோய்க்கு எதிர்ப்புத்தன்மை கொண்டது.
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.