இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2011
00:00

வேற இடம் கிடைக்கலையா?
பிளஸ் 2 முடித்த என் மகனின் கலந்தாய்வுக்காக, சென்னைக்கு வந்திருந்தோம். இரண்டு நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலையில், சென்னையிலுள்ள, "ஷாப்பிங் மால்'களைச் சுற்றிப் பார்த்தோம்.
ஷாப்பிங் மால்களில் உலவிக் கொண்டிருந்த மாடர்ன் யுவதி களை, என் மகன் ஒரு மாதிரியாக வெறித்து, வெறித்துப் பார்க்க ஆரம்பித்தான். வயசுக் கோளாறு காரணமாக, பெண் பிள்ளை களை, "சைட்' அடிக்கும் பார்வையாக அது இல்லாததால், அவன் பார்வை போன திசையை கவனித்து அதிர்ந்தேன்.

கழுத்துக்குக் கீழ், நிறைய இறக்கம் வைத்த, "லோ கட்' டாப்ஸ் அணிந்த யுவதிகள், தங்களின் நெஞ்சுப் பகுதியில், பல வண்ண, "டாட்டூ' - பச்சை குத்தி, அவை வெளியில் தெரியும் வகையில் திரிந்து கொண்டிருந் தனர்.
அந்தப் பிரதேசக் கவர்ச்சிதான், தாய் அருகில் இருப்பதைக் கூட மறக்கச் செய்து, என் பையனின் கவனத்தை திசை திருப்பி, அவன் மனதை சலனப் படுத்திக் கொண்டிருந்தது.
நாகரிகம் என்ற பெயரில், கவர்ச்சி காட்டித் திரியும் இதுபோன்ற யுவதிகளை கண்டிக்க இயலாத நிலையில், என் மகனை அழைத்துக் கொண்டு, இடத்தை காலி செய்தேன்.
டாட்டூ பதிப்பதை, அந்த இடத்தோடு நிறுத்தினார்களோ அல்லது இன்னும் உட்புற பிரதேசங்களிலும் பதிந்திருக்கின்றரோ?
ச்சே... கலி முத்திப் போச்சு!
— வி.காந்திமதி, பாளையங்கோட்டை.

அழகே... உனக்கு எதிரி, "புலிமியா'!
என் உறவு பெண் ஒருவர், சற்று பருமனாக இருந்தாலும், அழகாக இருப்பாள். அவளை, "குண்டு... பப்ளிமாஸ்...' என, அவளின் கல்லூரி தோழிகள் கேலி செய்துள்ளனர்.
இதனால், மனம் நொந்த அவள், ஒல்லியாக இருப்பது தான் பெண்ணிற்கு அழகு என்றெண்ணி, "டயட்' என்ற பெயரில், பட்டினி கிடக்க ஆரம்பித்தாள். வீட்டிலுள்ளவர்கள், வலுக்கட்டாயமாக சாப்பிடச் செய்தாலும், சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்து விடுவாள்.
ஒரு நாள், அவள் மயக்கமடைந்ததால், மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாக, கல்லூரியில் இருந்து போன் வந்தது. பதறிப் போய் மருத்துவ மனைக்கு சென்ற போது, அவளுக்கு, "புலிமியா' என்ற நோய் ஏற்பட்டுள்ளதாக, டாக்டர் குண்டை தூக்கிப் போட்டார்.
"சாப்பிட்ட சிறிது நேரத்தில், உணவை தொண்டைக்குள் விரலை விட்டு, வாந்தி எடுப்பதே புலிமியா. இதை, உடல் இளைப்பதற்கான, "டெக்னிக்' என, சில பெண்கள் கருதுகின்றனர்; ஆனால், உண்மையில் இது ஒரு வியாதி. இப்பழக்கம், நாளடைவில் உணவுப் பொருட்களை பார்த்தாலே குமட்டிக் கொண்டு, வாந்தி எடுக்கும் அளவுக்கு நோயாளியாக்கி விடும்.
"அத்தோடு, வாந்தியால் ஏற்படும், சக்தி இழப்பும் மிக அதிகம். வயிற்றுக்குள் நிரந்தரமாக புண் ஏற்பட்டு, உணவுப் பொருளே ஒவ்வாத நிலை ஏற்படும். உடல் அமைப்பே கேள்விக்குறி போல வளைந்து, தாறுமாறான வடிவத்திற்கு வந்து விடும். கூந்தல் உதிர்ந்து, நகங்களும் உடைய ஆரம்பிக்கும். பற்களும், ஈறுகளும் பாதிப்புக்குள்ளாகி, சுவாசித் தலிலும் துர்நாற்றம் வீசும்...' என, டாக்டர் விளக்கியதை கேட்டதும், அனைவருக்கும் அதிர்ச்சியும், கவலையும் ஏற்பட்டது.
தற்போது அப்பெண்ணிற்கு, உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இளம் பெண்களே... விபரீதமான வழிகளை விட்டு, விட்டு, உண்மையான அழகின் ரகசியம் என்பது, போதுமான, சத்தான உணவுகள், உடற்பயிற்சி ஆகியவை மட்டுமே என்பதை என்றும் நினைவில் கொள்ளுங்கள்.
— ஜெய்னம்பு, கீழக்கரை.

யாரைத்தான் நம்புவது?
சென்னை, தி.நகரிலுள்ள பிரபல நகைக்கடை ஒன்றில், நகை ஒன்றை வாங்கினோம். அந்த நகைக் கடையில், பி.ஐ.எஸ்., முத்திரை பெற்ற, "ஹால்மார்க் 916' கே.டி.எம்., நகைகள் விற்கப்படுகின்றன. நாங்கள் வாங்கிய நகையை, 27.94 கிராம் என்றே அங்கு எடை போட்டு காண்பித்தனர்.
ஒரு வாரத்திலேயே, பணத் தேவைக்காக அந்த நகையை, வங்கி ஒன்றில் அடகு வைக்க வேண்டியிருந்தது. அங்கு எடை போட்டு பார்த்ததில், 27.80 கிராம் மட்டுமே உள்ளதாக கூறினர்.
பணம் வாங்கியதும், வீட்டிற்கு வந்து, நகை வாங்கிய பில்லை பார்த்ததும், 14 மி.கி., குறைந்திருந்தது. அன்றைய விலைக்கு, 240 ரூபாய் ஏமாந்து விட்டோம் என்பதும் புரிந்தது. வங்கியிலுள்ள எடை பார்க்கும் எந்திரம் உண்மை என்பதால், அந்த நகைக் கடையில் மோசடி செய்துள்ளனர் என்பது தெரிந்தது.
இப்படி, ஒவ்வொரு வாடிக்கையாளரையும் ஏமாற்றினால், அதுவே, அவர்களுக்கு பெரிய தொகை லாபமாக கிடைக்கும். இன்றைய சூழ்நிலையில், யாரைத்தான் நம்புவது என்றே தெரியவில்லை.
— ரா.மகேஸ்வரி, சென்னை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (19)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரவி - டொரோண்டோ,கனடா
28-செப்-201121:18:11 IST Report Abuse
ரவி பெண்கள் டாட்டூ குத்தி கொள்வதில் தவறேதும் இல்லை. எனக்கு இந்தியாவிற்கு வரும்போதெல்லாம் ஒன்றை கவனிப்பேன். எல்லா ஆண்களும், பெண்களை வெறித்து வெறித்து பார்ப்பார்கள். பல்லாண்டுகளாக வெளிநாட்டில் நான் வசிக்கின்றேன். பல நாடுகளிலும் வசித்துள்ளேன். எந்தவொரு முற்போக்கு நாட்டிலும், பெண்கள் எவ்வளவு ஆடை குறைவான டிரஸ் அணிந்து இருந்தாலும், எந்த ஆணும் இந்திய ஆணை போல மதம் கொண்ட யானை போல் பார்க்க மாட்டார்கள். இதற்கெல்லாம் காரணம், பெண்களுக்கு தனி ஸ்கூல், ஆண்களுக்கு தனி ஸ்கூல் என்றும், ஆணையும் பெண்ணையும் சேர்த்து ஒரு இடத்தில் பார்த்தாலே தவறாக பழிப்பது போன்ற சமுக காரணங்களால், ஆண்களும் பெண்களும் தனித்தனியாகவே இருக்கின்றனர். பெண்கள் அனாவசியமாக எந்த ஆணுடனும் பழகுவதில்லை. பேசுவதுமில்லை. பெண்ணை விட்டு தனித்தே இருக்கும் ஆண் இதனால் எப்போதும் பெண்ணை தவறாகவே பார்க்கின்றான். அது கல்யாணம் ஆன பெண்ணாக இருந்தாலும் சரி, ஆன்டி ஆக இருந்தாலும் சரி. நமது கலாச்சாரம் என்று பீற்றி கொள்ளும் பலர் திருந்த வேண்டும். மேலை நாடுகளில் கல்யாணம் ஆன பெண்ணை யாரும் சீண்டுவதில்லை. குடும்பத்தை கலைத்தல் மிகபெரிய பாவம் என்று எண்ணுகின்றனர். ஆனால் இந்தியாவில், எல்லா பெண்ணிற்கும் நூல் விட்டு பார்க்கும் குரோத ஆண்களின் எண்ணிக்கை அதிகம்.
Rate this:
Cancel
சுரேஷ் குமார் - கோயம்புத்தூர்,இந்தியா
28-செப்-201116:52:16 IST Report Abuse
சுரேஷ் குமார் மனஅழகை பார்க்காமல், புறஅழகு மீது கொண்ட மோகத்தால் ஏற்பட்ட விளைவு இது.
Rate this:
Cancel
jk - India,இந்தியா
28-செப்-201116:21:25 IST Report Abuse
jk தற்போது டாடூகளை எளிதில் மறைய கூடிய மையால் தான் வரைந்து கொள்கின்றனர், கல்யாணப்பெண் மேக் அப்பில் காந்திமதி கேட்டிருந்த விசேஷமான இடங்களில் வரைகின்றனர் அதுவும் இரண்டு மூன்று குளியல்களில் மறைந்து விடும். இதை பற்றி ஒரு ஜோக், அமெரிக்காவில் ஒரு குத்து சண்டை வீரனின் காதலி அவன் முகத்தை தன் மார்பில் பச்சை குத்தி கொண்டாள், பின்பு எதோ ஒரு காரணத்தால் அவன் எதிரியை திருமணம் செய்கிறாள், முதல் இரவின் பொது தான் அவளுக்கு தான் கணவனின் ஜென்ம எதிரியின் முகத்தை பச்சை குத்தி இருப்பது நினைவிற்கு வருகிறது, நடுகியபடியே முதலிரவு அறைக்கு சென்று ஆடையை களைந்து கணவனிடம் சொல்கிறாள், அவன் என்ன செய்ய போகிறானோ என்று அச்சத்துடன் பார்க்க, அவனோ விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான், சந்தோஷமாக அவளை தூக்கி சுற்றினான், காதலிக்கு மனதில் கலவரம் அதிகமானது , அதிர்ச்சியில் கணவனுக்கு மறை கழன்று விட்டது என நினைத்து ஏன் சிரிக்கின்றாய் என்று கேட்டாள். அதற்கு அவள் கணவனோ, இந்த எதிரி இனிமேல் என் கையில் என்ன பாடு படபோகிறான் என்பதை நினைத்து சிரித்தேன், இன்னும் சிறிது நாளில் அவன் முகம் சுருக்கங்களுடன் தொங்கி போய்விடும் பார் என்றான். என்ன நிரந்தர டாட்டூ தேவையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X