சின்னச்சின்ன செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2011
00:00

ஸ்பைருலினா பாசி வளர்ப்பு வேகமாக பரவி வரக் காரணம் அதில் உள்ள சத்துக்கள் தான். வைட்டமின் பி12 என்ற சத்து இதில் உள்ளது.ரத்தசோகையை நீக்கும். மாத்திரை உள்ளிட்ட பல வடிவங்களில் இப்பாசி விற்பனை செய்யப்படுகிறது. இந்த பாசியைத் தூள் செய்து எலுமிச்சை பழச்சாறுடன் கலந்து குளிர்பானம் போலவும் குடிக்கலாம். இந்த பாசியைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்புத்திறன் கூடும். மனிதர்களுக்கு மட்டுமல்ல, கால்நடைகளுக்கும் சிறந்த உணவாக இந்தப்பாசி பயன்படுகிறது. மாட்டுத்தீவனம் தயாரிக்கும்போது இந்தபாசியைக் கலந்து தயாரித்தால் மாடுகள் ஆரோக்கியமாக இருக்கும்.
விரைவில் பருவத்துக்கு வரும். பால் கொடுக்கும் திறனும் அதிகரிக்கும். மீன்களுக்கு கொடுக்கப்படும் தீவனத்தில் ஸ்பைருலினா பாசியைக் கலந்தால் அதன் வளர்ச்சி வேகமாக இருக்கும். அலங்கார மீன்களுக்கு கொடுத்தால் அவை பளபளவென இருக்கும். 60 முதல் 65 சதம் புரதச்சத்து உள்ள பாசி. கிலோ ஒன்றுக்கு ரூ.700 முதல் ரூ.800 வரை விலைபோகும்.
சமீபகாலம் வரை கால்நடைத் தீவனம் தயாரிப்பவர்கள் சீனாவில் இருந்துதான் இந்த பாசியை இறக்குமதி செய்துவந்தார்கள். தற்சமயம் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய உற்பத்திக்கு மதிப்பு கூடி இருக்கிறது. ஸ்பைருலினா பாசி விற்பனை குறித்து மேலும் தகவல்பெற தொடர்பு முகவரி:
டாக்டர் கி.ராவணேஸ்வரன், உதவி பேராசிரியர் மற்றும் "பேராசிரியர் மற்றும் தலைவர், மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை காலனி, சென்னை-5. தொலைபேசி: 044-2555 6750'.

அதிக விளைச்சலுக்கு புதிய பயிர் ஊக்கிகள்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் குறைந்த செலவில் அதிக பலன் அளிக்கும் விதத்தில் "தென்னை டானிக்' என்ற தொழில்நுட்பத்தை 2003ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. கடந்த 8 ஆண்டுகளாக உழவர்கள் பயனடைந்து வருகிறார்கள். மேலும் பயிர் வினையியல் துறையினரால் கடந்த 2009-2010, 2010-2011ஆம் ஆண்டுகளில் 5 பயிர் மேலாண்மைத்தொழில் நுட்பங்கள் வெளியிடப் பட்டது. இதில் முறையே பயறுவகைப் பயிர்களான பாசிப்பயறு, உளுந்து, துவரைக்கு "த.வே.ப.க. பயறு ஒண்டர்', நிலக்கடலைக்கு "த.வே.ப.க. நிலக்கடலை ரிச்'; பருத்திக்கு "த.வே.ப.க.பருத்தி பிளஸ்'; கரும்பிற்கு த.வே.ப.க. கரும்பு பூஸ்டர்', மக்காச் சோளத்திற்கு "த.வே.ப.க. மக்காச்சோள மேக்சிம்' ஆகிய பயிர் பூஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இத்தகைய தொழில் நுட்பங்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்ட பயிர்களில் பல்வேறு பருவங்களில் உருவாகும் அல்லது உருவாக்கப்படும் வினையியல் குறைபாடுகளை கண்டறிந்து அவைகளின் பங்களிப்பினால் ஏற்படும் விளைச்சல் இழப்பை ஈடுகட்டி நிலைநிறுத்துவதற்காக கண்டறியப்பட்டதாகும்.
விவசாயிகள் பல்வேறு பயிர் ஊக்கிகளைப் பயிர் வினையியல் துறை மூலமாகவோ அல்லது மாவட்டம்தோறும் உள்ள வேளாண் அறிவியல் நிலையங்கள் மூலமாகவோ பெற்று பயன்படுத்தி அதிக விளைச்சலைப் பெறலாம் என தமிழ்நாடு வே.ப.கழக துணைவேந்தர் ப.முருகேசபூபதி கேட்டுக் கொள்கிறார்.

அமிர்த்த கரைசல்: தயாரிப்பு முறை: மாடு ஒருமுறை போட்ட சாணம், (எந்த மாடாக இருந்தாலும் பயன்படுத்தலாம்) ஒருமுறை பெய்த மூத்திரம்?இவற்றை ஒரு பிளாஸ்டிக் வாளியில் எடுத்துக் கொண்டுஅதில் ஒருகைப்பிடிவெல்லம், ஒருகுடம் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். 24 மணி நேரம் நிழற்பாங்கான இடத்தில் வைக்க வேண்டும். அமிர்த கரைசல் தயார். ஒரு பங்கு கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாம். ஒரு ஏக்கருக்கு பத்து தெளிப்பான் (டேங்க்) அளவுக்கு தெளிக்கலாம். வாய்க்கால் நீரிலும் கலந்துவிடலாம்.
அமிர்தகரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும். பயிர்கள் நோய்நொடி இல்லாமல் வளர உதவும். பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கரைசலைத் தெளிக்கலாம். பயிர்கள் மிகவும் வளமாகக் காணப்பட்டால் வாரம் ஒருமுறை கூடத் தெளிக்கலாம். வசதி இருந்தால் தண்ணீர் பாய்ச்சும்போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம். (தகவல்: இயற்கை வேளாண்மை, அ முதல் ஃ வரை, பொன்.செந்தில்குமார்)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

Advertisement

 

மேலும் விவசாய மலர் செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kannan - சென்னைசெங்கல்பட்டு,இந்தியா
02-டிச-201116:49:38 IST Report Abuse
kannan இந்த கட்டுரைகள் விவசாயிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. ஆனால் இதை பதிவிறக்கம் செய்யும்மாறு கொடுத்தால் மிகயும் ஊபயோகமாக இருக்கும். அதனால் ( பிரிண்ட்-இ புக் ) தருமாறு தாழ்மையுடன் கேட்கிறோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X