சின்னச்சின்ன செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2010
00:00

புதிய ரக த.வே.ப.க. தக்காளி - வீரிய ஒட்டு3- இந்த ரகம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எக்டருக்கு 96.2 டன் பழமகசூல் கொடுக்கக் கூடியது. இது கோடிஎச்.2, லட்சுமி ரகங்களைக் காட்டிலும் முறையே 9.76 மற்றும் 42.24 சதம் கூடுதல் மகசூலாகும். அதிகபட்ச மகசூலாக எக்டருக்கு 129.5 டன் கொடுக்க வல்லது. வயது - 145-150 நாட்கள். பருவம் - பிப்ரவரி-மார்ச், மே-ஜூன், நவம்பர்-டிசம்பர். பயிரிட உகந்த மாவட்டங்கள்: கோவை, சேலம், கடலூர், தஞ்சாவூர், மதுரை, தேனி, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திண்டுக்கல், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை. சிறப்பியல்புகள்: அடர்நடவு முறைக்கு ஏற்றது. பழங்கள் கொத்தாகவும், (கொத்திற்கு 3-5 பழங்கள்), 55.65 கிராம் எடையுடனும், உருண்டை வடிவிலும் இருக்கும். பழங்களில் 5.58 பிரிக்ஸ் மொத்த கரையும் திடப்பொருளும், 0.73 சதம் புளிப்புச்சுவையும், 35.72 மி.கி/100 கி வைட்டமின் சி சத்தும் அடங்கியுள்ளது. இலைச்சுருள், நச்சுயிரி நோய், வேர்முடிச்சு நூற்புழுவுக்கு மித எதிர்ப்புத்திறன் கொண்டது.


புதிய ரக கத்தரி: த.வே.ப.கத்திரி வீ.ஆர்.எம்.1 - தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள கத்தரி வீ.ஆர். எம்.1 என்ற ரகம். எக்டருக்கு 40-45 டன் காய் மகசூல் கொடுக்கிறது. இது பாலூர் 1 ரகத்தைவிட 27 சதம் கூடுதல் மகசூலாகும். வயது - 140-150 நாட்கள், பருவம்- ஆடிப்பட்டம், புரட்டாசி பட்டம், கோடை. பயிரிட உகந்த மாவட்டங்கள்: வேலூர், திருவண்ணாமலை. உருவாக்கம்: இலவம்பாடி கிராமத்திலிருந்து தனித்து தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறப்பியல்புகள்: அதிக மகசூல், இலை, தண்டு, கத்தரிக்காயில் காம்புப்பகுதியில் முட்கள் உள்ளன. கொத்துக்கொத்தாக காய்க்கக்கூடியது. காய்கள் முட்டை வடிவமானவை. ஊதா நிறக்காய்கள். முனையில் மட்டும் சிறிதளவு பச்சை நிறம் கொண்டவை. இலைப்புள்ளி, வெர்டிசிலியம் வாடல் நோய் மற்றும் எப்பிலாக்னா வண்டுகள் தாக்குதலைத் தாங்கி வளரும் தன்மை கொண்டது.
த.வே.ப.க. மிளகாய் வீரிய ஒட்டு கோ.1- சமீபத்தில் வெளியிடப் பட்டுள்ள ரகமாகும். எக்டருக்கு பச்சை மிளகாய் 28.1 டன். மிளகாய் வற்றல்-6.74 டன் கொடுக்கிறது. இது என்.எஸ்.1701 ரகத்தைவிட பச்சைமிளகாய் 14.65 சதம், மிளகாய் வற்றல் 19.15 சதம் கூடுதல் மகசூலாகும். வயது-195-205 நாட்கள். பருவம்: ஜூன்-ஜூலை, செப்டம்பர்-அக்டோபர், ஜனவரி-பிப்ரவரி. பயிரிட உகந்த மாவட்டங்கள்: கோவை, சேலம், கடலூர், தஞ்சாவூர், மதுரை, தேனி, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை. அதிகபட்ச மகசூல்: 129.5 டன்/எக்டர் பச்சை மிளகாய், 34.67 டன்/எக்டர் வற்றல். சிறப்பியல்புகள்: செடிகள் நன்கு படர்ந்து வளரக் கூடியவை. காய்கள் இளம்பச்சை நிறத்துடன் நுனி கூர்மையாகவும், 10.5-12 செ.மீ. நீளமாகவும் காணப்படும். காரத்தன்மை 0.58 சதம், ஓலியோரெசின் 14 சதமும் உள்ளது. வைட்டமின் சி சத்து 120 மி.கி/ 100 கிராம். பழ அழுகல் நோய்க்கு மிக எதிர்ப்புத்திறன்.


-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.


Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.Muruganandam - thanjavur,இந்தியா
22-ஜூலை-201011:19:56 IST Report Abuse
P.Muruganandam puthiya raga thakkali matrum kathari vithai engu kidaikkum?.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X