Advertisement
மாவட்டம் » ராமநாதபுரம் சிறப்பு
மற்ற மாவட்டங்கள் :
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் முதல் பக்கம்
ராமநாதபுரம் நகரின் சிறப்பு முதல் பக்கம்
ஹோட்டல்கள்
டிராவல்ஸ்
திருமண மண்டபங்கள்
திருமண தகவல் மையங்கள்
கல்வி நிறுவனங்கள்
மருத்துவமனை
சினிமா தியேட்டர்கள்
பிற தகவல்கள்
ராமநாதபுரம் வரலாறு
வரலாறு

15ம் நூற்றாண்டில் தற்போதைய ராமநாதபுரம், திருவாடானை, பரமகுடி, கமுதி, முதுகுளத்தூர், ராமநாதபுரம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி பாண்டியர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. பின்னர் கி.பி 1063ல் சோழ மன்னரான ராஜேந்திரசோழன் தனது பேரரசில் இணைத்தார். பின்னர் பாண்டியர்கள் ஆட்சியின் கீழ் இருந்த ராமநாதபுரம் 1520ம் ஆண்டில் விஜயநகர பேரரசன் நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. இரண்டு நூற்றாண்டுகள் இவர்கள் ஆட்சி புரிந்தனர். 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சேதுபதி மன்னர்கள் ஆட்சியில் குடும்ப சண்டை காரணமாக ராமநாதபுரம் பிரிக்கப்பட்டது. தஞ்சாவூர் மன்னனின் உதவியுடன் ...

மேலும்...
ராமநாதபுரம்
ராமநாதபுரம்

ராமநாதபுரம் சுற்றுலா

ராமநாத சுவாமி கோயில்
Hotel image
ராமநாதபுரத்திலிருந்து 54 கி.மீ., தூரத்தில் உள்ளது ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில். இதன் மூன்றாம் பிரகாரம் மிகவும் நீளமானது. 22 தீர்த்தங்கள் உள்ளன. அக்னிதீர்த்த கடலில் தீர்த்தமாடும் பக்தர்கள் இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி செல்கின்றனர்.

சுவாமி சன்னதியில் தினம்அதிகாலை 5.10 மணி ஸ்படிகலிங்க அபிஷேகம் முக்கியமானது. தீர்த்தங்களில் நீராட நபர் ஒன்றுக்கு ரூ.7 கட்டணம். சுவாமி சன்னதி சிறப்பு நுழைவு கட்டணம் ரூ.25, அம்பாள் சன்னதி சிறப்பு நுழைவு கட்டணம் ரூ.10, ஸ்படிக லிங்க தரிசனம் ரூ.15, சுவாமி சன்னதி மேடையில் அமர்ந்து தரிசனம் செசய்ய ரூ.50, கங்காபிஷேகம் செய்ய ரூ.30, சகஸ்ரநாம அர்ச்சனைக்கு ரூ20,பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய ரூ 750. ருத்ராபிஷேகம் செய்ய ரூ.900, 108 சங்காபிஷேகம் செய்ய ரூ 1000,108 கலச அபிஷேகம் செய்ய ரூ.1000, 1008 சங்காபிஷேகம் அல்லது கலச அபிஷேகம் செய்ய ரூ 5,000 கட்டணமாகும். ராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீ., தூரத்தில் உள்ளது திறக்கும் நேரம்: காலை 5.30 - பகல் 1 மணி, மாலை 4.30 - இரவு 9 மணி
தனுஷ்கோடி
Hotel image
இங்குள்ள சேது தீர்த்தக்கட்டத்தில் நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் செய்து தானம் கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் என்பதால் இங்கு பக்தர்கள் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். புயலால் அழிந்த நிலையில் காணப்படும் சேதமடைந்த கட்டடங்களும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளது. இங்கு செல்ல முகுந்தராயர்சத்திரம் வரை பஸ் வசதி உள்ளது. அங்கிருந்து மினிலாரி மூலம்தனுஷ்கோடி செல்லலாம். கட்டணமாக போய்வர ரூ.40 வசூலிக்கப்படுகிறது. தனி ஜீப்பில் செல்ல ராமேஸ்வரத்திலிருந்து கட்டணமாக ரூ. 700 வாங்குகின்றனர்.
ஏர்வாடி
Hotel image
ராமநாதபுரத்தில் கீழக்கரை செல்லும் வழியில் ஏர்வாடி தர்கா உள்ளது. 800 ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்த சுல்தான் இப்ராகிம் சயீதின் கல்லறை இங்கு உள்ளது. உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாட்டு பயணிகளும் இந்த தர்காவிற்கு வந்து செல்கின்றனர். இங்கு சந்தன கூடு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். தொலைபேசி - 4576-263807
பஞ்சமுக அனுமார் கோயில்
Hotel image
இங்குள்ள பஞ்சமுக அனுமார் செந்தூரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளார். ராமர் பாலம் கட்டுவதற்காக உபயோகப்படுத்தப்பட்ட ஒரு கல் இங்கு உள்ளதாக கூறப்படுகிறது. ராவணனுக்கு மயில் ராவணன் என்ற பெயரில் ஒரு சகோதரன் இருந்தான் .அவன் ஒரு சமையம் ராம லக்குவரைக் கவர்ந்து சென்று அடைத்தான். மயில் ராவணனின் உயிர் ஐந்து வண்டுகளிடம் குடி கொண்டு இருந்தது .அந்த ஐந்து வண்டுகளையும் ஒரே நேரத்தில் அழித்தால் மட்டுமே அவனுக்கு அழிவு ஏற்படும் .எனவே மயில் ராவணனை அளிப்பதற்காக ,அனுமன் ஒரே நேரத்தில் ஐந்து முகங்களையும் பெற்று, ஐந்து வண்டுகளையும் பிடித்துக் கொன்றார் .இவ்வாறு மயில் ராவணனைக் கொன்று ராமரை காப்பாற்றியதாக கர்ண பரம்பரை கதையில் கூறப்படுகிறது .இவ்வாறு பஞ்ச அனுமான் தோன்றினார்.
அனுமனின் ஐந்து முகங்கள் :
கிழக்குப் பக்கம் அனுமன்
முகம் மேற்கு கருடன்
வடக்கு வராக அவதாரம்
தெற்கு நரசிம்மர்
மேல் நோக்கி குதிரைத் தலை ஹயக்ரீவர் முகம் அமைந்துள்ளது.

மன்னார் வளைகுடா
தெற்கு ஆசியாவிலேயே முதன் முதலாக இங்கு தான் கடல் வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த பகுதி ஆராய்ச்சிக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடாவில் 3,600 வகையான கடல் தாவரங்கள் உள்ளன.
ஜடாயு தீர்த்தம்
Hotel image
பறவைகளின் தலைவனான ஜடாயு, ராவணன் சீதையை தூக்கி செல்லும் போது தடுத்து சண்டையிட்ட போது அதன் சிறகின் ஒரு பகுதி இங்கு விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த கோயிலை சுற்றி மணல் குன்றுகள் காணப்படுகின்றன. இங்குள்ள குளத்தின் தீர்த்தம் இளநீரை போன்ற இனிமையான சுவையுடையதாகும்.
ஜோதிர்லிங்க தரிசனம்
இந்தியாவில் உள்ள சிவபெருமானின் ஜோதிர்லிங்க சன்னதிகளில் ராமேஸ்வரத்தில் ராமநாதேஸ்வர கோயிலும் ஒன்று.
குருசடை தீவு
பாம்பன் பாலத்திற்கு மேற்கு பகுதியில் குருசடை தீவு அமைந்துள்ளது. இது ஒரு கடல் உயிரினங்களை ஆராய்ச்சி செய்யப்படும் பகுதியாகும். கடல் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இயற்கை ஆவலர்கள் இந்த இடத்திற்கு வருகின்றனர். மண்டபத்தில் இருந்து இந்த பகுதி 4 கி.மீ தொலைவில் உள்ளது. மீன்வளத்துறையின் அனுமதி பெற்ற பிறகே இப்பகுதிக்கு செல்லமுடியும். இங்கு டால்பின்கள், கடற்பசுக்கள், மீன்கள் மற்றும் கடற் பாறைகள் ஆகியவை இங்கு உள்ளன.
கந்தமதன பர்வதம்
ராமநாதசுவாமி கோயிலில் இருந்து 3 கி.மீ தொலைவில் இந்த மலை அமைந்துள்ளது. இங்கு உள்ள இரண்டடுக்கு மண்டபத்தில் ராமர் பாதம் உள்ளது. ஆயிரகணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர். ராமர் பாதத்திற்கு செல்லும் வழியில் சுக்ரீவர் கோயில் மற்றும் தீர்த்தம் உள்ளது.
கடல்வாழ் உயிரினங்கள் அருங்காட்சியகம்
ராமேஸ்வரம் பஸ் நிலையத்திற்கு எதிரில் கடல் வாழ் உயிரினங்கள் அருங்காட்சியகம் அமைந்துள்ளது.


பாம்பன் பாலம்
Hotel image
புகழ்பெற்ற பாம்பன் பாலம் ராமேஸ்வரம் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ளது. இதில் நின்றபடி அலையடிக்கும் கடலின் அழகை கண்டு மகிழலாம். 2.10.1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாலம் இது. இந்தியாவில் கடல் மேல் கட்டப்பட்டுள்ள பாலங்களில் மிக நீளமான இந்தப் பாலம்தான். இதன் நீளம் 2.2 கி.மீ.

திருப்புல்லானி பெருமாள் கோவில்:
Hotel image
திருப்புல்லாணையில் உள்ள ஜகந்நாதப் பெருமாள் கோவில் திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்ற தலமாகும். இக்கோவில் இராமர் விக்ரகத்திற்கு விலையுயர்ந்த காதணிகளை அணிவித்து வழிபடுகின்றனர். தனுஷ்கோடியிலிருந்த ராமர் விக்ரகம் இங்கு வைத்து வழிபடப்படுகிறது. இங்குள்ள இறைவனுக்குத் தென்னகத் தமிழான் என்ற பெயரும் உண்டு. 14 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் இங்குக் காணப்படுகின்றன.

ஒரியூர் தேவாலயம்
Hotel image
இந்த தேபிரித்தோ தேவாலயத்தை ஒரியூரில் அமைக்க 1734 இல் சேதுபதி மன்னர் 20 ஏக்கர் நிலத்தை வழங்கினார். அருளாநந்தர் என்னும் மேனாட்டு பாதிரியாரின் சேவையால் இத்தேவாலயம் எழுந்தது. 120 அடி உயரத்தில் கோபுரம் அமைந்துள்ளது. பழைய தேவாலயம் புதுப்பிக்கப்பட்டு இருந்தாலும் அங்கு வழிபாடு நடப்பதில்லை. தென்னிந்தியா முழுவதிலுமிருந்து கத்தோலிக்கர் ஒரியூருக்கு வருகின்றனர். பிள்ளை வரம் வேண்டுவோர் இத்தேவாலயத்தைச் சுற்றி தென்னம்பிள்ளை நடுகின்றனர். டி.பிரிட்டோ பாதிரியாரின் நினைவாக பெருவிழா கொண்டாடப்படுகிறது.

தேவிப்பட்டிணம்:
Hotel image
இது ராமநாதபுரத்திற்கு வடகிழக்கே 15 கி.மீ. தொலைவில் கடற்கரையிலுள்ள சிற்றுர். நவகிரகங்களைக் குறிக்கும் ஒன்பது தூண்கள் இவ்வூர் கடலுக்குள் இருப்பதால் இவ்வூரை 'நவபாசனம்' என்று அழைக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் தென்னம் பண்ணையும், பழத்தோட்டங்களும் இங்கு உள்ளன. இவ்வூரில் பாதிப்பேர் முஸ்லீம்கள். இது ஒரு சுற்றுலா தலமாகும். இந்துக்கள் தங்களின் முன்னோருக்குச் சடங்குகள் செய்யும் இடமாகவும் இது உள்ளது. 
Bookmark and Share
 

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X