Advertisement
மாவட்டம் » தேனி சிறப்பு
மற்ற மாவட்டங்கள் :
தேனி
தேனி மாவட்டம் முதல் பக்கம்
தேனி நகரின் சிறப்பு முதல் பக்கம்
ஹோட்டல்கள்
டிராவல்ஸ்
திருமண மண்டபங்கள்
திருமண தகவல் மையங்கள்
கல்வி நிறுவனங்கள்
மருத்துவமனை
சினிமா தியேட்டர்கள்
பிற தகவல்கள்
தேனி வரலாறு
வரலாறு

தேனி மாவட்டம் மதுரையில் இருந்து 1996ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி பிரிக்கப்பட்டது. பின்னர் உத்தமபாளையம் பெரியகுளம், ஆண்டிபட்டி ஆகியவை தாலுகாக்களாக பிரிக்கப்பட்டன.


அமைவிடம் : தேனிக்கு, வடக்கே திண்டுக்கல் மாவட்டமும், கிழக்கே மதுரை மாவட்டமும், தென்மேற்கில் விருதுநகரும், மேற்கே கேரளாவும் உள்ளது. தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. மேலும் மேகமலை போன்ற சிறிய சிறிய மலைகளும் உள்ளன. இந்த மலை தொடர் வடக்கிலிருந்து தெற்காக கேரள மாநிலத்தில் இருந்து தேனியை பிரிப்பது போல அமைந்துள்ளது. தேனி, போடிநாயக்கனூர், பெரியகுளம், கம்பம், ...

மேலும்...
தேனி
தேனி

தேனி சுற்றுலா

பாலசுப்ரமணிய கோயில்
பெரியகுளத்தில் உள்ள கோயில்களில் பாலசுப்ரமணியம் கோயில் மிக முக்கியமானதாகும். இந்த கோயில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டாகும். இங்குள்ள முருகன் சிலை ஆறு முகங்களை கொண்டதாகும். மேலும் இந்த சிலை மண்ணை தோண்டுபோது கண்டுபிடிக்கப்பட்தாகும்.
போடி மெட்டு
கடல் மட்டத்தில் இருந்து 4,500 அடி உயரத்தில் உள்ள மலை வாசஸ்தலமாகும். போடிநாயக்கனூரில் இருந்து 26 கி.மீ தொலைவில் போடி மெட்டு அமைந்துள்ளது.
சின்ன சுருளி
தேனியில் இருந்து 54 கி.மி தொலைவில் கோம்பை தொழு என்ற கிராமத்தின் அருகில் இந்த அருவி அமைந்துள்ளது. மேகமலையில் இருந்து இந்த அருவி விழுகிறது. இந்த இடம் சின்ன சுருளி என அழைக்கப்படுகிறது.
சின்னமனூர்
சின்னமனூர், தொல்காப்பியத்தில் ஹரிகேசரிநல்லூர் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. சின்னமனூரை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இந்த ஊரே முக்கிய வர்த்தக மையமாகும். இங்கு வாரசந்தையும் நடைபெறுகிறது. முல்லை ஆற்றின் கரையில் சிவகாமியம்மன் கோயில் அமைந்துள்ளது.
காமாட்சி அம்மன் கோயில்
தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் புகழ் பெற்றதாகும். கோயில் மஞ்சள் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த கோயில் 200 ஆண்டுகள் பழமையானதாகும். இந்த கோயிலில் எப்போதும் கதவு திறக்கப்படாது. நுழைவாயிலில் தான் பூஜைகள் நடைபெறும்.
குச்சனூர் சனீஸ்வரர் கோயில்
Hotel image
இந்தியாவிலேயே சனிபகவானுக்கு என தனியாக கோயில் இருப்பது இங்கு மட்டுமே. தேனியில் இருந்து தெற்கே 20 கி.மீ தொலைவில் இந்த கோயில் உள்ளது. இங்குள்ள சனிபகவான் சுயம்பு ஆவார். கோயிலின் முன்புறம் முல்லை மற்றும் சுருளியாற்றின் கிளை நதியான சுரபி நதி பாய்கிறது. இங்கு ஆடி மாதத்தில் திருவிழா நடைபெறும். சனிதோசம் உள்ளவர்கள் இங்கு மனமுருக வேண்டிக்கொண்டால் அவர்களுக்கு சோதனைகள் விலகி சுபிட்சம் கிடைக்கிறது. மேலும் புதிய தொழில் தொடங்க, வியாபார விருத்தி மற்றும் குடும்ப நலம் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் இத்தலத்துக்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர். கோயில்கள் அனைத்திலும் சனிபகவான் நவக்கிரகமாக வீற்றிருந்தாலும் தமிழ்நாட்டில் திருநள்ளாறுக்கு அடுத்து சுயம்புவாக வீற்றிருப்பது தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வரன் கோயிலில் தான். சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுதல் மிகவும் சிறப்பு.


மாவூது வேலப்பர் கோயில்
வருஷநாடு மலைப்பகுதியில் அமைந்துள்ள மாவூது என்ற இடத்தில் வேலப்பர் கோயில் அமைந்துள்ளது. கோயில் மலை உச்சியில் அமைந்துள்ளது. அடிவாரம் வரை மட்டுமே பஸ் வசதி உள்ளது. கோயிலை சுற்றி மாமரங்கள் நிறைந்து உள்ளதால் மாவூது என்ற பெயர் வந்ததாக கூறுவர்.
மேகமலை
Hotel image
தேயிலை, ஏலக்காய் தோட்டங்கள் நிறைந்த இயற்கை வளம் மிகுந்த பகுதியாக மேகமலை விளங்குகிறது. கடல்மட்டத்தில் இருந்த 1500 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மலையில் தாவரங்களும், விலங்கினங்களும் காணப்படுகின்றன.சோத்துப்பாறை அணை
பெரியகுளத்தில் இருந்து 12 கி.மீ தொலைவில்சோத்துப்பாறை அணை அமைந்துளளது. வராக நதியின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டுள்ளது. சுற்றுலா தலமான இந்த அணைப்பகுதி, நீர் நிரம்பியிருக்கும் போது கண்கொள்ளா காட்சியாக விளங்கும்.
சேரன் பொழுதுபோக்கு பூங்கா :
இது ஒரு வித்தியாசமான பொழுதுபோக்கு பூங்கா ஆகும். இங்கு குழந்தைகளை கவரும் வீடியோகேம்ஸ், படகு சவாரி, மற்றும் திறந்தவெளி திரையரங்கம் ஆகியவை உள்ளன. பசுமையான புல்வெளிகள் நிறைந்த இந்த இடத்திற்கு வருபவர்கள் புத்துணர்ச்சியுடன் செல்வர். பெரியகுளம் சாலையில் பைபாஸ் சந்திப்பில் இந்த பூங்கா உள்ளது. தொலைபேசி - 04546 - 252962.
கைலாசநாதர் குகை கோயில்
சுருளி அருவியில் இருந்து 800 மீ உயரத்தில் கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒரு ஊற்று உள்ளது. இந்த புனித நீர் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக உள்ளதாக நம்பப்படுகிறது. சித்திரை, ஆடி, தை மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறும். இந்த மலைப்பகுதி ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.

அபுபக்கர் மஸ்தான் தர்கா
கைலாசநாதர் கோயிலுக்கு அருகே அபுபக்கர் மஸ்தான் தர்கா உள்ளது. 1630ம் ஆண்டுகளில் வாழ்ந்த இறை தொண்டர் அபுபக்கர் மஸ்தானின் உடல் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தீர்த்த தொட்டி
தேனிக்கும் போடி நாயக்கனூருக்கும் இடையே சுப்ரமணியர் கோயில் அமைந்துள்ளது. இந்த இடம் தீர்த்த தொட்டி என அழைக்கப்படுகிறது.
புலிஅருவி
தேனியில் இருந்து மூணாறு செல்லும் வழியில் போடிக்கும் போடி மெட்டிற்கும் இடையே உள்ள சுற்றுலா தலம் இந்த அருவியாகும்.
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில்
தேனி மாவட்டத்தின் முக்கிய சிறப்பாக வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவை குறிப்பிடலாம். இந்த கோயில் 14ம் நூற்றாண்டில் வீரபாண்டிய மன்னனால் கட்டப்பட்டதாகும்.
வீரப்ப ஐயனார் சிலை
தேனியிலிருந்து 3 கி.மீ தொலைவில் அல்லிநகரத்தில் இந்த ஐயனார் சிலை அமைந்துள்ளது. இந்த கோயிலில் சித்திரை முதல் நாள் விழா கொண்டாடப்படும்.
வெள்ளி மலை
வருஷநாடு மலைப்பகுதியில் உள்ள ஒரு பகுதியே வெள்ளி மலை ஆகும். இங்கு பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்குகள் காணப்படுகின்றன.
கம்பராய பெருமாள் கோயில்
கம்பத்தில் நந்தகோபாலன் கோயில் மற்றும் கம்பராயப் பெருமாள் கோயில்கள் பழங்காலத்தவை. கம்பராயப்பெருமாள் கோயிலில் ஒரே வளாகத்தில் சிவனுக்கும், பெருமாளுக்கும் கோயில்கள் உள்ளன. சுற்றுலா தலங்களான சுருளி அருவி 10 கி.மீ., தூரத்திலும், தேக்கடி 20 கி.மீ., தூரத்திலும் அமைந்துள்ளது.
கம்பம்
மதுரையில் இருந்து 120 கி.மீ., தூரத்தில் கிழக்கு திசையில் தேசிய நெடுஞ்சாலை எண் 220 ல் அமைந்துள்ளது கம்பம் நகரம். புகழ் பெற்ற தேக்கடி சுற்றுலா தலம் இங்கிருந்து 20 கி.மீ., தூரத்தில் கேரள மாநிலத்திற்குள் அமைந்துள்ளது. மொத்த பரப்பு 6.58 சதுர கி.மீ., மொத்த வார்டுகள் 33. மேற்கு தொடர்ச்சி மலையில் அடிவாரத்தில் அமைந்துள்ளது. நகருக்கு கிழக்கு திசையில் தேனி, மேற்கு குமுளி நகரும் அமைந்துள்ளது. விவசாயம் சார்ந்த பகுதியாகும். சிவப்பு நிற மண் கொண்டது. நிலக்கடலை, தென்னை, நெல், வாழை போன்ற பல்வேறு பயிர்கள் சாகுபடியாகின்றன. சீதோஷ்ண நிலை : சராசரியாக அதிகபட்சமாக 41.6 சென்டிகிரேடும், குறைந்தபட்சமாக 31.6 சென்டிகிரேடும் உள்ளது. தென்மேற்கு பருவமழை அதிகம் கிடைக்கிறது. ஆண்டிற்கு சராசரியாக 836 மி.மீ., மழை கிடைக்கிறது.1958 ல் மூன்றாம் நிலை நகராட்சியாக இருந்து பின்னர் 1975 ல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1991 ல் முதல்நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

கம்பராய பெருமாள் கோயில்:
கம்பத்தில் நந்தகோபாலன் கோயில் மற்றும் கம்பராயப் பெருமாள் கோயில்கள் பழங்காலத்தவை. கம்பராயப்பெருமாள் கோயிலில் ஒரே வளாகத்தில் சிவனுக்கும், பெருமாளுக்கும் கோயில்கள் உள்ளன. இங்குள்ள நந்தகோபாலன் கோயில் மற்றும் கம்பராயப் பெருமாள் கோயில்கள் பழங்காலத்தவை.

சுருளி நீர்வீழ்ச்சி:
Hotel image
சுருளி அருவி தமிழ்நாடு, தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் என்ற அழகிய சிறிய நகரத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது. கோடைக்காலத்தில் ஓர் இனிய சுற்றுலாத்தலமாகும். தரையில் மெலிதாகப் பரவி மறுபடியும் 40 அடி ஆழமாக வீழ்ந்து ஓடுகின்றது. அடர்ந்த காடுகளும் மரங்களும் இதன் அழகை மெருகூட்டுவதாகவும் உள்ளது. ஆண்டு முழுவதும் இந்த அருவியில் நீர் வரும் எனச் சொன்னாலும் ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் நீர்ப் போக்குவரத்து அதிகமாய் இருப்பதால் அப்போது நிறைய மக்களைக் காணலாம். சுருளியாண்டவர் கோயில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் என்ற இதிகாசத்தில் இந்த அருவி பற்றி எழுதியிருப்பது இதன் பெருமைகளில் ஒன்று. கீழ்ச் சுருளி, மேல்ச்சுருளி என இரு இடங்கள் உள்ளன. காலாற மலையின் மேல் நடந்து மேல்ச் சுருளிக்குச் சென்றால், அங்கே சித்தர்கள் வாழுகின்ற இடங்களைக் காணலாம். ஒரு குகையும் இருக்கிறது. படுத்துக் கொண்டு சிலர் உள்ளே சென்று வெளியே வருவதுமுண்டு. இதன் அருகிலேயே மூணார் மற்றும் தேக்கடி ஆகிய சுற்றுலாத் தலங்கள் இருப்பது இதன் மற்றுமொரு சிறப்பாகும்.

வைகை அணை
Hotel image
வைகை அணை தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாதலங்களில் முக்கியமான ஒன்றாகும். ஆண்டி பட்டிக்கு அருகே வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்குகிறது. இந்த அணைப்பகுதியில் பூங்கா, சிறுவர் பூங்கா, சிறிய வனவிலங்கு சரணாலயம் ஆகியவை உள்ளது.

தேக்கடி
Hotel image
தமிழக எல்லையில் கேரளப்பகுதியில் அமைந்திருக்கும் அழகான இடம் தேக்கடி. தமிழகத்தின் தேனி மாவட்டத்தின் எல்லையில் குமுளியையொட்டி கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தேக்கடி அமைந்துள்ளது. இயற்கையுடன் கொஞ்சம் பழகிட்டு வரலாமே என நினைப்பவர்களுக்கு எழில் கொஞ்சும் தேக்கடி நல்ல சாய்ஸ். எழில் கொஞ்சும் தேக்கடியில் வனவிலங்கு சரணாலயம் ஒன்று அமைந்துள்ளது. 673 சதுர கி.மீ பரப்பளவில் பச்சைப் பசேலென பரந்து விரிந்து கிடக்கும் இந்த சரணாலயம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. யானைகள், பைசன்கள், மான்கள், குரங்குகள் கூட்டம் கூட்டமாய் திரிவதை பார்த்து ரசிக்கலாம். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் புலிகளும் கண்களில் தென்படலாம். இங்கு சலசலத்துக் கொண்டிருக்கும் பெரியாற்றில் இந்த காட்டு விலங்குகள் தண்ணீர் குடிக்கும் காட்சியை கண்டு ரசிப்பது த்ரில் கலந்த புதுமையான அனுபவமாக இருக்கும். பெரியாற்றில் படகு சவாரியும் நடத்தப்படுகிறது.

கூடலூர்
Hotel image
தேனி மாவட்டம், கூடலூருக்கு தெற்கே 9 கி.மீ., தொலைவில் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. கிழக்கில் 9 கி.மீ., தொலைவில் சுருளியாறு மின் உற்பத்தி நிலையம் உள்ளது. அதற்கு அருகில் சுருளி நீர்வீழ்ச்சியும் உள்ளது. லோயர்கேம்ப் அருகே வண்ணாத்திப்பாறை வனப்பகுதியின் உச்சியில் கண்ணகி கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள பெரியாறு அணை கூடலூரில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் உள்ளது. கேரள எல்லைப்பகுதியை ஒட்டி மலையடிவாரத்தில் கூடலூர் அமைந்துள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க கூடலழகிய பெருமாள் கோயில் உள்ளது. கண்ணகி காலத்திற்கு முந்தய இந்த கோயிலுக்கும், மலை உச்சியில் அமைந்துள்ள கண்ணகி கோயிலுக்கும் சுரங்கப்பாதை இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 1966-67ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பலர் துப்பாக்கிக் குண்டுக்கு பலியான சம்பவம் கூடலூரின் மறக்க முடியாத நிகழ்வாகும்.

கூடலூர் பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேதி தரம் உயர்த்தப்பட்டது. 21 வார்டுகள் உள்ள கூடலூரின் மொத்த மக்கள் தொகை 35 ஆயிரத்து 531 ஆகும். இதில் ஆண்கள் 17 ஆயிரத்து 821ம், பெண்கள் 17 ஆயிரத்து 710ம் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 27 ஆயிரத்து 865 பேர் வாக்காளர் ஆகும்.

கூடலூரின் முதல் கிராமத் தலைவராக பாலசுப்ரமணிய பிள்ளை 1921 முதல் 1932 வரை இருந்தார். அதற்குப் பின்னர் என்.எஸ்.கே.சுருளியாண்டி கவுண்டர் (1934-55), பி.வி.கோட்டைச்சாமி தேவர் (1955-57), பன்னீர் சேகனராவுத்தர் (1957-58), வி.கே.சின்னாத்தேவர் (1958), ஏ.கே.கருப்பணத்தேவர் (1958-64), டி.வி.எம்.வாசகர் (1965-70), ஏ.பி.கே.துரைச்சாமி (1970-79), சின்னாத்தேவர் (1986-1991), சின்னமாயன் (1996-2001), பி.வி.பாண்டியன் (2001-06) ஆகியோர்கள் தலைவர்களாக இருந்தனர். தற்போது ஜெயசுதா தலைவராக உள்ளார். கூடலூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் முதல் நகராட்சி தலைவராக பி.வி.பாண்டியன் இருந்தார். முதல் பெண் தலைவராக ஜெயசுதா தற்போது பதவியில் உள்ளார்.
 
Bookmark and Share
 

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X