Advertisement
மாவட்டம் » திண்டுக்கல் சிறப்பு
மற்ற மாவட்டங்கள் :
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் முதல் பக்கம்
திண்டுக்கல் நகரின் சிறப்பு முதல் பக்கம்
ஹோட்டல்கள்
டிராவல்ஸ்
திருமண மண்டபங்கள்
திருமண தகவல் மையங்கள்
கல்வி நிறுவனங்கள்
மருத்துவமனை
சினிமா தியேட்டர்கள்
பிற தகவல்கள்
திண்டுக்கல் வரலாறு
கொடைக்கானல்

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள புகழ் பெற்ற மலை வாசஸ்தலம் கொடைக்கானல் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 2133 மீ உயரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து 115 கி.மீ., மற்றும் கோவையிலிருந்து 130 கி.மீ.,தொலைவில் கொடைக்கானல் உள்ளது. பஸ் வசதி இருக்கிறது. கொடைக்கானல் ரோடு வரை ரயிலிலும் வரலாம். இங்கிருந்து 80 கி.மீ., பிற வாகனங்களில் செல்ல வேண்டும். ஏப்ரல், மே, ஜூன் மற்றும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சீசன். இந்த மாதங்களில் தங்குவதற்கு இடம் கிடைப்பது சிரமம். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழாவும், டிசம்பரில் குளிர்கால ...

மேலும்...
திண்டுக்கல்
திண்டுக்கல்

திண்டுக்கல் சுற்றுலா

அபிராமி அம்மன் கோயில்
திண்டுக்கல் மாவட்டத்தின் மைய பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளது. ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் பூப்பல்லாக்கில் ஊர்வலம் வருவார். நவராத்திரி கொலு இங்கு மிகவும் விஷேசமாகும். தொலைபேசி - 0451 - 2433229
பேகம்பூர் பெரிய மசூதி
 ஹைதர் அலியின் ஆட்சி காலத்தில், அவர் 3 மசூதிகளை அமைத்தார். ஒன்று அவருக்காகவும், மற்றொன்று மலைகோட்டையின் கீழ் தன்னுடைய படையினருக்காகவும், 3வது பொதுமக்களுக்காக கோட்டையின் தென்பக்கம் பிரமாண்டமாக கட்டினார். ஹைதர் அலியின் சகோதரி அமீர் உன் நிஷா பேகத்தின் உடல் இங்கு புதைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இடத்திற்கு பேகம்பூர் என்ற பெயர் வந்தது. தொலைபேசி - 0451 - 2402086.
நாடு பட்டி ஆஞ்சநேயர் கோயில்
நாடுபட்டி ஆஞ்சநேயர் கோயில் திண்டுக்கல்லில் இருந்து 35 கி.மீ தொலைவில் நிலக்கோட்டையில் அமைந்துள்ளது. இந்த கோயில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளதால் இதன் பிம்பம் நீரில் பிரதிபலிக்கிறது.
பழனி
Hotel image
பழனி மலையின் மீது முருகன் தண்டாயுதபாணியாக வீற்றிருக்கிறார். முருகனின் அறுபடை வீடுகளில் பழனியும் ஒன்றாகும். தென்னிந்தியாவின் முக்கிய புண்ணிய தலங்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது. தமிழகத்திலேயே மிக அதிக வருமானம் கொண்ட பெருமையுடையது. இங்கே முருகப்பெருமானை வணங்கி அருள் பெறலாம். திருப்பதிக்கு அடுத்தபடியாக முடிகாணிக்கை செலுத்த பக்தர்கள் இங்கு ஏராளமாக வருகின்றனர்.

ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயில்
Hotel image
கோட்டை மாரியம்மன் கோயில் 300 ஆண்டு பழமையானதாகும். 18ம் நூற்றாண்டில் மாரியம்மன் சிலையை திப்புசுல்தானின் படையில் இருந்த ராணுவ வீரர் ஒருவர் மலைக்கோட்டையின் கீழ் நிறுவினார். இதுவே திண்டுக்கல் மக்களுக்கு கோட்டை மாரியம்மனாக, காவல் தெய்வமாக உள்ளது. கோயில் சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் தென் புறம் விநாயகர் கோயிலும், வடக்கில் மதுரை வீரன் கோயிலும் உள்ளன. கோயிலின் நடுவே உள்ள மண்டபத்தில் சிங்க முகம் கொண்ட சிலை அம்மனை நோக்கி இருக்குமாறு அமைந்துள்ளது. கோயில் கர்ப்பகிரகத்தில் பல்வேறு சிறிய சிலைகளும் உள்ளன. இவை அனைத்தும் மாரியம்மனின் பல்வேறு அவதாரங்களை பிரதிபலிப்பதாக உள்ளது. கோயில் திண்டுக்கல்லின் மையத்தில் அமைந்துள்ளது.
ஸ்ரீ காளகத்தீஸ்வரர் கோயில்
மிகவும் பழமை வாய்ந்த இந்த கோயிஞூல திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகும். இங்கு காளகத்தீஸ்வரர் ஞானாம்பிகை அம்மனுடன் வீற்றிருக்கிறார். திண்டுக்கல்லின் மைய பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளது.
செயின்ட் ஜான்ஸ் சர்ச்
தாமஸ் பெர்னான்டோ என்பவரால் இந்த சர்ச் கட்டப்பட்டது. இந்த சர்ச்சில் ஜனவரி கடைசி வெள்ளி கிழமை துவங்கி தொடர்ந்து 15 நாட்கள் விழா நடைபெறும். செயின்ட் ஜான்ஸ் சர்ச் 100 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்ட்டதாகும். 1866ம் ஆண்டு துவங்கி 1872ம் ஆண்டு இந்த பணி நிறைவடைந்தது. திண்டுக்கல்லின் உள்ள பிற சர்ச்களுக்கு தலைமை இடமாக இந்த சர்ச் திகழ்கிறது.
தாடி கொம்பு பெருமாள் கோயில்
Hotel image
திண்டுக்கல்லில் இருந்து 10 கி.மீ தொலைவில் தாடிகொம்பில் சவுந்திரராஜ பெருமாள் கோயில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் பெருமாள் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுவார். கோயிலில் உள்ள சிற்பங்கள் நுண்ணிய வேலைப்பாடுகள் மிகுந்தவை ஆகும்.


நத்தம் மாரியம்மன் கோயில்
Hotel image
திண்டுக்கல் மற்றும் மதுரையில் இருந்து 36 கி.மீ தொலைவில் நத்தம் மாரியம்மன் கோயில் உள்ளது. இத்தல அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவராக உள்ள அம்மன் அன்னத்தின் மேல் அமர்ந்து காலில் அசுரனை மிதித்த நிலையில் தாழ்மலரை பணிந்த பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். மாசிமாதம் அமாவாசை அன்று கன்னிமார் தீர்த்தம் எடுத்து வருதலுடன் திருவிழா ஆரம்பிக்கிறது. நத்தம் அருகில் உள்ள கரந்த மலையில் கன்னிமார் தீர்த்தம் உள்ளது. சந்தன கருப்பு கோயிலில் மஞ்சள் ஆடையுடன் ஒரு மைல் நீளத்துக்கு ஒரே கூட்டமாக சென்று தீர்த்தம் எடுத்து வருவர்.பின்பு கம்பம் நடும் நிகழ்ச்சி நடக்கும்.கம்பம் என்பது ஒரே மரத்தில் 3 கிளைகளையுடையதாகும். இது பார்ப்பதற்கு திரிசூலம் போன்றிருக்கும்.அம்பாள் தன் கணவரோடு இந்த பதினைந்து நாட்களுக்காவது இருக்க விரும்புவதால்தான் இந்த கம்பம் சுவாமியாக நினைக்கப்பட்டு கோயில் நுழைவில் நடப்படுகிறது. முத்தாய்ப்பாக கழுகுமரம்(வழுக்கு மரம்) ஏறுதல், பூக்குழி இறங்குதல் என்ற மயிர் கூச்செறியும் பக்திகரமான நேர்த்திகடன்கள் நடக்கின்றன. சற்று கடினமான உயரமான யூகலிப்டஸ் மரம் வழுவழுவென செதுக்கி விளக்கெண்ணெய்,மிளகு கடுகு ஆகிய எளிதில் வழுக்கும் பொருட்களால் பூசப்பட்ட நிலையில் பக்தர்கள் விடாப்பிடியுடன் மேலே ஏறுவார்கள். பின்பு 14 அடி நீள நெருப்பு கங்குகள் பரப்பப்பட்ட பாதையில் அம்மனை நினைத்தபடியே இறங்கி நடந்து தங்கள் நேர்த்திகடனை செலுத்துவார்கள். இந்த உற்சவம் மிகப் புகழ்பெற்றதாகும்.
குறிஞ்சி ஆண்டவர் கோயில்:
Hotel image
கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பூக்கின்றன. கடந்த 2004ம் ஆணடு கடைசியாக குறிஞ்சி பூ பூத்தது. கொடை ஏரியில் இருந்து 3 கி.மீ தொலைவில் குறிஞ்சி ஆண்டவர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் உறைந்திருக்கும் முருக பெருமான் குறிஞ்சி ஆண்டவர் என அழைக்கப்படுகிறார். இந்த கோயிலில் இருந்து பார்த்தால் வைகை அணை மற்றும் பழனி மலையை காணலாம்.

வெள்ளி அருவி :
Hotel image
கொடை ஏரியில் இருந்து 8 கி.மீ தொலைவில் இந்த அருவி உள்ளது. கொடை ஏரி நிரம்பி வழியும் 180 அடியில் இருந்து அருவியாக விழுகிறது. சுற்றுலா பயணிகள் இங்கு குளிக்கவும் செய்கின்றனர்.

பில்லர் ராக் :
Hotel image
மூன்று பெரிய கற்பாறைகள் செங்குத்தாக அமைந்த இடமே பில்லர் ராக் ஆகும். இதன் உயரம் 122மீ ஆகும். ஏரியில் இருந்து 7.4 கி.மீ தொலைவில் பில்லர் ராக் அமைந்துள்ளது.

பிரையன்ட் பூங்கா :
Hotel image
பிரையன்ட் பூங்காவில் அனைத்து வகையான பூக்களையும், செடிகளையும் பார்த்து பரவசப்படலாம். ஏரியின் கிழக்கு பக்கம் இந்த பூங்கா அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடக்கும் கோடை விழாவில் மலர் கண்காட்சி நடத்தப்படும்.


கோக்கர்ஸ் வாக் :
Hotel image
மலையின் ஓரமாக இயற்கை எழிலை ரசிப்பதற்கு ஏற்ப அமைக்கப்பட்ட பாதையே கோக்கர்ஸ் வாக் ஆகும். கோக்கர் என்ற பொறியாளர் 1872ம் ஆண்டு இந்த பாதையை கண்டறிந்தார். தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்ட இந்த பாதையில் நடந்து செல்வது மனதிற்கு மிகவும் அமைதியை தரும்.


குக்கல் குகை :
Hotel image
கொடைக்கானலில் இருந்து 40 கி.மீ தொலைவில் பூம்பாறை அருகே உள்ள வனப்பகுதியில் குக்கல் குகை உள்ளது.


பசுமை பள்ளத்தாக்கு :
Hotel image
ஏரியில் இருந்து 5.5 கி.மீ தொலைவில் பசுமை பள்ளத்தாக்கு உள்ளது. இங்கிருந்து பார்த்தால் வைகை அணை தெரியும். இதன் அருகில் உள்ள மிக ஆழமான மரங்களடர்ந்த பள்ளத்தாக்கை தற்கொலை முனை என அழைக்கிறார்கள்.


செண்பகனூர் மியூசியம் :
Hotel image
இந்த மியூசியம் புனித இருதய கல்லூரியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு மனித வள ஆராய்ச்சி பற்றிய நூல்கள் மற்றும் பல்வேறு கற்கால பொருட்கள் உள்ளன. நுழைவுகட்டணம் : ஒரு ரூபாய். திறந்திருக்கும் நேரம் : காலை 10 மணி முதல் 11.30 வரை, மதியம் 3 மணி முதல் 5 மணி வரை.

செட்டியார் பூங்கா :
Hotel image
கொடைக்கானலின் வடகிழக்கு மூலையில் குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்கு செல்லும் வழியில் இந்த பூங்கா அமைந்துள்ளது.


கோடை ஏரி:
Hotel image
கொடைக்கானலில் 24 ஹெக்டேர் பரப்பளவுள்ள ஏரியில் படகு சவாரி செய்யலாம். இந்த ஏரி 1863ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் மதுரை கலெக்டராக இருந்த சர் வேரி ஹென்றி லெவின்ஜ் என்பவரால் உருவாக்கப்பட்டதாகும்.

கொடைக்கானல்
Hotel image
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள புகழ் பெற்ற மலை வாசஸ்தலம் கொடைக்கானல் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 2133 மீ உயரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து 115 கி.மீ., மற்றும் கோவையிலிருந்து 130 கி.மீ.,தொலைவில் கொடைக்கானல் உள்ளது. பஸ் வசதி இருக்கிறது. கொடைக்கானல் ரோடு வரை ரயிலிலும் வரலாம். இங்கிருந்து 80 கி.மீ., பிற வாகனங்களில் செல்ல வேண்டும். ஏப்ரல், மே, ஜூன் மற்றும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சீசன். இந்த மாதங்களில் தங்குவதற்கு இடம் கிடைப்பது சிரமம். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழாவும், டிசம்பரில் குளிர்கால விழாவும் கொண்டாடப்படும். சைக்கிள், குதிரை, படகு சவாரி செய்யலாம்.

 
Bookmark and Share
 

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X