Advertisement
மாவட்டம் » மதுரை சிறப்பு
மற்ற மாவட்டங்கள் :
மதுரை
மதுரை மாவட்டம் முதல் பக்கம்
மதுரை நகரின் சிறப்பு முதல் பக்கம்
ஹோட்டல்கள்
டிராவல்ஸ்
திருமண மண்டபங்கள்
திருமண தகவல் மையங்கள்
கல்வி நிறுவனங்கள்
மருத்துவமனை
சினிமா தியேட்டர்கள்
பிற தகவல்கள்
மதுரை வரலாறு
தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி

மதுரையில் பல சாப்ட்வேர் நிறுவனங்கள் விரைவில் துவங்கப்பட உள்ளது. மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் அருகிலும், புறநகர் பகுதியிலும் இரண்டு தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்க மாவட்ட நிர்வாகம் நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. இலந்தைகுளம் அருகில் ...

மேலும்...
மதுரை
மதுரை

மதுரை சுற்றுலா

காந்தி மியூசியம்
Hotel image
1670ம் ஆண்டு மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாவின் அரண்மனை தற்போது காந்தி மியூசியமாக மாற்றப்பட்டுள்ளது. முன்பு இந்த இடம் மதுரை கலெக்டர் அலுவலகமாக இருந்து வந்தது. 1955ம் ஆண்டு இந்த அரண்மனை மற்றும் சுற்றியுள்ள 12 ஏக்கர் நிலமும் காந்திய சிந்தனையை வளர்ப்பதற்காக தமிழக அரசு வழங்கியது.

இந்த அருங்காட்சியகத்தில் காந்தியடிகளின் ஓவியம், சிலை, அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நூல்கள், காந்திய சிந்தனை நூல்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

மேலும் காந்தியின் ஆடைகள், ராட்டை மற்றும் அவர் எழுதிய கட்டூரைகள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு இந்திய வரலாறு மற்றும் சுதந்திர போராட்ட வரலாறு குறித்து அறிந்து கொள்ளலாம்.

மதுரையில் தான் காந்தி ஒரு முக்கிய முடிவையும் எடுத்தார். 1921ம் ஆண்டு காந்தி மதுரை வந்த போது ராம்ஜி கல்யாண்ஜி என்பவரது வீட்டில் தங்கினார். அப்போது அவர், ஏழை மக்கள் பலர் உடுத்த சரியான ஆடையின்றி குளிரில் வாடுவதை கண்டார். அன்று இரவு முதல் அவர் எளிய ஆடையை உடுத்த வேண்டும் என முடிவெடுத்து அதையே தம் வாழ்நாள் முழுவதும் செயல்படுத்தினார். காந்தி மியூசியம் திறந்திருக்கும் நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 5.45 மணி வரை. (எல்லா நாட்களும்)

தொலைபேசி - 0452- 2531060.
அருங்காட்சியகம்:  இந்த அருங்காட்சியகம் காந்தி மியூசியத்தின் உள்ளே அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் 5ம் உலகத்தமிழ் மாநாட்டின் போது விரிவுபடுத்தப்பட்டது.

அருங்காட்சியகம் திறந்திருக்கும் நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 5.45 மணி வரை. (ஒவ்வொருமாதமும் 2வது சனிக்கிழமை மட்டும் விடுமுறை) தொலைபேசி - 0452 -2650298.

திருப்பரங்குன்றம்
Hotel image
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மதுரையிலிருந்து தெற்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது. மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த கோயில் கட்டட கலைக்கு சிறந்த சான்றாகும்.

முருகப்பெருமான் திருச்செந்தூரில் சூரபத்மனை சங்காரம் செய்து மீளும்போது பராசரமுனிவரின் புதல்வர்கள் அறுவரும் நான்முகன் மற்றும் தேவர்களும் வேண்டிக்கொண்டதை ஏற்று திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளினார்.
இந்திரன் பகைவனாகிய சூரபத்மனை அழித்து விண்ணுலக அரசாட்சியை மீண்டும் அளித்தருளிய முருகப்பெருமானுக்கு தன் மகள் தெய்வயானையை திருமணம் செய்து வைக்க விரும்பினான்.அவனும் நாரதர்,நான்முகன் மற்றும் தேவர்களும் வேண்டிக் கொள்கின்றனர். இதையடுத்து முருகன்-தெய்வயானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் சீரும் சிறப்புமாக நடந்தது.அதனால் தான் இன்றும் திருப்பரங்குன்றத்தில் ஏராளமான திருமணங்கள் நடக்கின்றன.
கூடலழகர் கோயில்
Hotel image
108 திவ்ய தேசங்களில் ஒன்றான அழகர் கோயில் மதுரையிலிருந்து வடக்கே 21 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோயில் திராவிட கட்டட கலைக்கு சிறந்த சான்றாகும்.எமதர்ம ராஜனுக்கு சாபம் ஏற்பட்டது.


இச்சாபத்தை போக்க பூலோகத்தில் தற்சமயம் கோயில் இருக்கும் அழகர் மலை விருசுபகிரி என்னும் இம்மலையில் தபசுசெய்கிறார்.இம்மலை 7 மலைகளை கொண்டது.தர்மராஜனின் தபசை மெச்சி பெருமாள் காட்சி தந்தார்.இறைவனின் கருணையை போற்றும் விதமாக தர்மராஜன் பெருமாளிடம் தினந்தோறும் நின்னை ஒரு முறையாகிலும் பூஜை செய்ய வரம் தர வேண்டும் என் று கேட்டார்.அதன்படியே பெருமாளும் வரம் தர இன்றும் இக்கோயிலில் தினமும் நடக்கும் அர்த்த ஜாம பூஜையை எம தர்ம ராஜனே நடத்துவதாக ஐதீகம்.எல்லா மக்களுக்கும் அருள் தருமாறு தர்ம ராஜன் விருப்பத்தின் பேரில் விஸ்வகர்மாவினால் சோமசந்த விமானம்(வட்ட வடிவ) உள்ள கோயில் கட்டப்பட்டது.புத்தம், சமணம், முஸ்லிம் என்று எல்லா சமயங்களை சேர்ந்தவர்களும் வணங்கியதற்காகான சரித்திர சான்றுகள் உள்ளன.வைணம், சைவம் என்ற பேதமில்லாமல் இக்கோயிலில் ஆராதனை நடைபெறுவது மற்றொரு சிறப்பு.
சித்திரைத் திருவிழா
Hotel image
10 நாட்களும், ஆடிப் பெருந்திருவிழா - 13 நாட்களும், ஐப்பசி தலை அருவி உற்சவம் - 3 நாட்களும்,பங்குனி உத்ரம் திருக்கல்யாணம் - 5 நாட்களும் நடைபெறும்.

இவை தவிர வைகுண்ட ஏகாதேசி, கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி,பொங்கல், தமிழ் ஆங்கில வருடப் பிறப்பின் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர்.
வாரத்தின் சனி, ஞாயிற்று கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாகவும் இருக்கும்.மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது. அழகர் மலை மீது முருகன் கோயில் ஒன்றும் உள்ளது.
அதிசயம்
Hotel image
மதுரையின் சிறந்த பொழுது போக்கு பூங்காவான அதிசயம் மதுரை திண்டுக்கல் சாலையில் பரவை என்ற இடத்தில் உள்ளது. மதுரையில் இருந்து 15 கி.மீ தொலைவில் இந்த பூங்கா அமைந்துள்ளது. இதற்கு நுழைவு கட்டணமாக குழந்தைகளுக்கு 200 ரூபாயும், பெரியவர்களுக்கு 300 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தொலைபேசி - 0452 - 2463848 - 51
குட்லாடம்பட்டி அருவி
Hotel image
மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து 36 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது குட்லாடம்பட்டி அருவி. அருவி 87 அடி உயரத்தில் இருந்து விழுகிறது. அருவி அமைந்திருக்கும் மலை சிறுமலை என அழைக்கப்படுகிறது.விடுமுறை மற்றும் திருவிழா காலங்களில் உள்ளூர் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து அருவியில் குளித்து இயற்கையை ரசித்து செல்கின்றனர்.அருவியின் அருகில் 500 ஆண்டுகள் பழமையான தாடகை நாச்சியம்மன் கோயில் உள்ளது.
திருமோகூர் கோயில்
Hotel image
மதுரையில் இருந்து 20 கி.மீ தொலைவிலும், ஒத்தகடை பகுதியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் திருமோகூர் விஷ்ணு கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் விஷ்ணு காளமேக பெருமாளாக வீற்றிருக்கிறார். தொலைபேசி - 0452 - 2423227.
திருவாதவூர் கோயில்
Hotel image
சைவத்தலமான இந்த கோயில் மதுரையில் இருந்து 25 கி.மீ தொலைவிலும், ஒத்தக்கடையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. திருவாதவூர் மாணிக்கவாசகர் பிறந்த இடமாகும்.
ராமகிருஷ்ண மடம்
Hotel image
உலகம் முழுவதும் அமைந்துள்ள ராமகிருஷ்ண மடத்தின் கிளை மதுரையிலும் அமைந்துள்ளது.தொலைபேசி - 0452 - 2680224, 2681181.


கோச்சடை அய்யனார் கோயில்
மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள கோச்சடையில் அய்யனார் கோயில் அமைந்துள்ளது. எல்லை காவல் தெய்வமாக கருதப்படும் இந்த கோயிலுக்கு மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வழிபட்டு செல்கின்றனர்.


ராஜாஜி பார்க்
Hotel image
ராஜாஜி பார்க், மதுரை மாநகராட்சியினரால் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்கா மாநகராட்சி அலுவலகம் (அண்ணா மாளிகை) அருகே உள்ளது. திறந்திருக்கும் நேரம் : காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை.
நுழைவு கட்டணம் : 3 ரூபாய்.
தொலைபேசி - 0452 - 2531012.

ஸ்ரீ அரவிந்தர் அன்னை அறக்கட்டளை யோகா மையம்
மதுரையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் திருநகர் 6வது பஸ் நிறுத்தத்தில் இந்த மையம் அமைந்துள்ளது. ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீ அன்னைக்காக இந்த மையம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு பழங்கால யோக முறைகள் கற்றுத்தரப்படுகிறது. யோகா கற்றுத்தரப்படும் நேரம் : மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரை. தொலைபேசி - 0452 - 2423227.
புதுமண்டபம்
Hotel image
மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு கோபுரத்திற்கும் முழுமையாக இல்லாத ராயகோபுரத்திற்கும் இடையே அமைந்துள்ளது. இந்த மண்டபம் திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. இங்குள்ள தூண்களில் சிவன், மீனாட்சி மற்றும் நாயக்க மன்னர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் ஏப்ரல் மே மாதங்களில் வசந்தோற்சவம் கொண்டாடப்படுகிறது. இந்த மண்டபத்தில் தற்போது கடை அதிகரித்து வருகின்றன.

ஈகோ பார்க்:
Hotel image
மதுரை மாநகராட்சிக்கு சொந்தமானது ஈகோ பார்க். இங்கு குழந்தைகள் விளையாடு வதற்கான உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு விடுமுறை காலங்களில் இசையுடன் கூடிய நீருற்று நிகழ்ச்சி நடத்தப்பெறுகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை போட்டிங் செய்யும் வசதியும் உண்டு. பரபரப்பாக இழங்கி் கொண்டு இருக்கும் மதுரை மக்களுக்கு இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு இடமாக நிகழ்கிறது. நுழைவு கட்டணமாக ரூ.2 வசூலிக்கப்படுகிறது.

மீனாட்சி அம்மன் கோயில்
Hotel image
மதுரையின் மிக முக்கியமான இடமாக மீனாட்சி அம்மன் கோயில் உள்ளது. மதுரைக்கு பெருமை சேர்ப்பதே இந்த கோயில் தான். திராவிட கட்டடகலைக்கு மீனாட்சி அம்மன் கோயில் சிறந்த எடுத்து காட்டாகும். 6 ஏக்கர் பரப்பளவில் கோயில் அமைந்துள்ளது.மீனாட்சி அம்மன் கோயிலில் 12 கோபுரங்களும் 4 விமானங்களும் உள்ளன. கோயில் கோபுரங்களில் உயரமானது தெற்கு கோபுரம் ஆகும். இதன் உயரம் 170 அடியாகும்.
பொற்றாமரை குளம்
Hotel image
மீனாட்சி அம்மன் கோயிலின் சிறப்பம்சமாக பொற்றாமரை குளம் அமைந்துள்ளது. இந்த குளம் 165 அடி நீளமும், 120 அடி அகலமும் உடையது. குளத்தில் அல்லி, தாமரை போன்ற பூக்கள் உள்ளன. மேலும், இந்த குளத்தில் மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடதக்கது. தற்போது பொற்றாமரை குளத்தில் 7 கிலோ எடையுள்ள ஐம்பொன்னால் ஆன தாமரை மிதக்கவிடப்பட்டுள்ளது.
ஆயிரம் கால் மண்டபம்
Hotel image
மற்றொரு சிறப்பம்சமான ஆயிரம் கால் மண்டபம் திராவிட கட்டடகலைக்கு சான்றாக அமைந்துள்ளது. ஆயிரம் கால் மண்டபத்தில் 999 தூண்களே உள்ளன. மதுரையை ஆண்ட முதல் நாயக்கர் அரசரின் பிரதம மந்திரியான ஆர்யநாத முதலியாரால் கட்டப்பட்டிருக்காலம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆயிரம் கால் மண்டபத்தில் 1200 ஆண்டுகால வரலாற்றை விளக்கும் புகைப்படங்கள், பழங்கால பொருட்கள் போன்றவை கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் வெளியே மேற்கு பகுதியில் இசைத்தூண் உள்ளது. இந்த தூணை தட்டினால் இசை வெளிப்படும். மண்டபத்தின் தெற்கே திருக்கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. இங்கு தான் மீனாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சி ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நாயக்கர் மகால்
Hotel image
மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து தென்கிழக்கு திசையில் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருமலை நாயக்கர் மகால். மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரால் கி.பி. 1636ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அரண்மனை இந்திய-அரேபிய கட்டட கலைக்கு சான்றாகும். இந்த மகாலில் 248 தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 58 அடி உயரமும், 5 அடி விட்டமும் கொண்டது.

மகாலில் உள்ள ஓவியங்கள் 16ம் நூற்றாண்டின் ஓவியக்கலையை பிரதிபலிப்பதாக உள்ளது. மிகப்பெரியதான இந்த மகாலின் ஒரு பகுதி மட்டுமே தற்போது நம் பார்வைக்கு உள்ளது. செவ்வக வடிவில் உள்ள இந்த அரண்மனையின் முற்றத்தில், மாலை நேரத்தில் தற்போது ஒலி-ஒளி காட்சிகள் நடைபெற்று வருகின்றன. மதுரையின் முக்கிய சுற்றுலா தலங்களில் நாயக்கர் மகாலும் ஒன்றாகும்.
மகால் திறந்திருக்கும் நேரம் : காலை 9 மணி முதல் 1 மணி வரை. மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை.
ஒலி ஒளி காட்சி : மாலை 6.45 மணிக்கு ஆங்கிலத்திலும், 8.15 மணிக்கு தமிழிலும் நடைபெறும்.
மாரியம்மன் தெப்பக்குளம்
Hotel image
திருமலை நாயக்க மன்னர், மீனாட்சி அம்மன் கோயில் அளவிற்கு பெரிய சதுர வடிவிலான தெப்பகுளத்தை அமைத்துள்ளார். இந்த குளம் 1000 அடி நீளமும், 950 அடி அகலுமும் கொண்டது. தெப்பக்குளத்தின் நடுவில் மண்டபமும், விநாயகர் சன்னதியும் உள்ளது.


ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கு இடையே வரும் பவுர்ணமி மற்றும் திருவிழா காலத்தில் தெப்பக்குளம் நீரால் நிறைக்கப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கண் கொள்ளா காட்சியாக விளங்கும். இந்த குளத்திற்கு வைகையில் இருந்து நீர் கிடைக்கும் படி செய்யப்பட்டுள்ளது. நீர் நிறைந்திருக்கும் நாட்களில் படகு சவாரி விடப்படும்.


 
Bookmark and Share
 

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X