*கத்திமுனையில் நடப்பதைப் போல பாதை கடினமானதாக இருந்தாலும் வாழ்வில் நம்பிக்கை இழப்பது கூடாது.
* தெய்வீகத் தன்மை இல்லாத அறிவும் ஆற்றலும் மனிதனை மிருகமாக்கும்.
* ஒழுக்கம் என்பது மிருக இயல்பை தெய்வீக இயல்பாக மாற்றிக் கொள்வதேயாகும்.
* நல்லவர்கள் செய்த தியாகத்தின் பயனை இந்த சமுதாயமே அனுபவிக்கிறது. அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
* எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள் இருக்கிறது என்று வேதாந்தம் கூறுகிறது. அதை நாம் விழிப்படையச் செய்ய வேண்டும்.
-விவேகானந்தர்