* துன்பம் இல்லாமல் இன்பமாக வாழ விரும்பினால் மனதால் கூட பிறருக்கு தீங்கு நினைப்பது கூடாது.
* பாவம், புண்ணியம் இரண்டையும் பிறரிடம் கூறுவதால் அதன் தீவிரத் தன்மை குறைந்து விடும்.
* தன்னைத் தானே சோதித்துக் கொள்பவன் தீமையில் இருந்து விரைவில் விடுபடுவான். மனத்தூய்மை பெற்று நற்செயலிலும் ஈடுபடுவான்.
* இல்லை என்று தன்னை மறுக்கும் நாத்திகனையும் காப்பாற்றும் பொறுப்பு கடவுளுக்கே இருக்கிறது.
* விலங்கு உணர்ச்சியில் இருந்து மனிதனை உயர்த்துவது ஆன்மிகம்.
-வாரியார்