* மனிதனாகப் பிறக்க பாக்கியம் செய்திருக்கிறோம். வாழும் காலத்திற்குள், சாதிக்கும் விதத்தில் நல்ல அறிகுறியை விட்டுச் செல்வோம்.
* வாழ்வில் வளர்ச்சி பெற அக்கறையுடன் செயல்படுவது அவசியம். அக்கறையின்மை மனிதனை பலவீனப்படுத்தி தாழ்வடையச் செய்யும்.
* ஆன்மிக வாழ்க்கை சோறு போன்றது. செல்வம், புகழ் போன்ற மற்றவை கறி, கூட்டு போல அதற்கு துணை செய்கின்றன.
* பரந்த நோக்கத்துடன் விரிந்து செல்வதே வாழ்க்கை. சுயநலத்துடன் குறுகிக் கொண்டிருப்பதை மரணம் என்றே சொல்ல வேண்டும்.
* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது. அதனால், கடவுளைப் பூரணமாக நம்பிச் சரணடையுங்கள்.
விவேகானந்தர்