அன்புப்பாலத்தில் பயணம் செய்
பிப்ரவரி 02,2012,
10:02  IST

* தன்னம்பிக்கை என்னும் ஒளியோடு இருப்பவர்கள் வாழ்க்கைப் பாதையில் வெற்றிநடை போடுவார்கள். அவர்களால் மற்றவர்களுக்கும் வழிகாட்ட முடியும்.
* நாமோ கல்நெஞ்சம் கொண்டவர்களாக இருக்கிறோம். இறைவனோ, கருணை உள்ளம் கொண்டவனாக திகழ்கிறான்.
* பெண்கள் மகிழ்ச்சியோடு இருப்பதில் தான், ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியே அடங்கி இருக்கிறது. வாழ்வில் இசை என்பது, பெண்களின் சிரிப்பில் தான் புதைந்து கிடக்கிறது.
* இறைவன் தனக்கான நண்பர்கள் கிடைப்பார்களா என்று தேடுகின்றான். மனித மனங்களில் அன்பு இருக்கிறதா என்று எதிர்பார்க்கிறான்.
* மனித உறவுகள் அன்பினால் பிணைக்கப்பட்டுள்ளன. அன்பு என்னும் பாலத்தின் வழியாகப் பயணம் செய்தால் தான், நம் வாழ்க்கை சுகமானதாக இருக்கும்.
* நிலத்தைப் பண்படுத்தும் உழவனிடமும், கல்லுடைக்கும் தொழிலாளியிடமும் இறைவன் இருக்கிறான்.
* உலகில் உள்ள அனைத்தும் இறைவனின் உறைவிடம் என்பதை உணருங்கள். அவன் அளிப்பதை அனுபவியுங்கள்.
- தாகூர்

Advertisement
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE
ரவீந்திரநாத் தாகூர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X