புதுக்கணக்கு பிரார்த்தனை
ஏப்ரல் 01,2012,
09:04  IST
எழுத்தின் அளவு:

புதுக்கணக்கு துவங்கும் இனியநாளில், செல்வத் திருமகளான லட்சுமியை வழிபட்டு தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி அடைவோம்.
* தாமரைக் கண்களைக் கொண்ட திருமாலின் துணைவியே! அவனது உள்ளத்தாமரையில் மகிழ்ச்சியோடு வீற்றிருக்கும் இன்பவடிவே! கற்புநெறி தவறாத குலமாதர் நெற்றியில் குங்குமமாய்த் திகழ்பவளே! உலகின் கண்மணியாய் விளங்கும் திருமகளே! எங்கள் தொழிலும், வியாபாரமும் தழைத்திட வேண்டும் தாயே!
* செந்தாமரை மலரில் வீற்றிருப்பவளே! பசுவின் கோமயத்தில் குடிகொண்டவளே! மாவிலைத் தோரண வாசலில் நிறைந்திருப்பவளே! மங்கலம் மிக்க துளசிச்செடியில் உறைந்திருப்பவளே! இனிய சொற்களைப் பேசும் நல்லோரின் நாவில் இருப்பவளே! தூயவளே! எல்லோரும் இன்புற்று வாழ அருள்புரிவாயாக.
* செல்வத்திருமகளே! பாற்கடல் அமுதோடு பிறந்தவளே! வெற்றி தரும் தைரியலட்சுமியே! உயிர்களுக்கெல்லாம் குறைவில்லாமல் உணவைத் தந்து உலகைக் காக்கும் அன்னலட்சுமியே! எங்களுக்கு செல்வ வளத்தை தந்தருள்வாயாக.

Advertisement
லஷ்மி ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X