* யாரும் நம்மைப் பார்க்கவில்லை என்று எண்ணி பாவம் செய்யாதீர்கள். அனைத்தையும் ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனே மேலான கடவுள்.
* பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காக தர்மம் செய்வது கூடாது. மனத்தூய்மையுடன் செய்யும் தர்மமே உயர்வானது.
* கீழ்வானில் உதிக்கும் சூரியன், மாலைநேரச் சந்திரன் இவையெல்லாம் எப்படி காலம் தவறாமல் செயல்படுகிறதோ, அதுபோல நீங்களும் பணியில் கருத்தை செலுத்துங்கள்.
* மனதில் இருக்கும் ஆசையே கொடிய பகைவன். அதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
* யார் மனதில் வெறுப்புணர்ச்சி வளர்ந்து விட்டதோ, அவர்களை கடவுளும் வெறுக்கத் தொடங்கி விடுவார்.
* கடவுளை அறியும் முயற்சியில் இறங்க வேண்டாம். முதலில் உங்களை நீங்களே தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்குள் கடவுளின் காட்சியை பெறுவீர்கள்.
- சாந்தானந்தர்