* ஒவ்வொன்றிற்கும் ஒரு பருவம் உண்டு. வானின் கீழ் உள்ள ஒவ்வொரு நோக்கிற்கும் ஒரு காலம் உண்டு.
* பிறப்பதற்கு ஒரு காலமும், இறப்பதற்கு ஒரு காலமும், விதைப்பதற்கு ஒரு காலமும், விதைத்தலின் விளைச்சலைப் பறிப்பதற்கு ஒரு காலமும் உண்டு.
* தகப்பன்மார்களே! உங்கள் குழந்தைகளுக்கு எரிச்சலைக் கிளப்பாதீர்கள். இல்லையெனில் அவர்கள் மனந்தளர்ந்து போவார்கள்.
* உன் மனைவி உன் வீட்டோரங்களிலுள்ள கனி தரும் திராட்சைக் கொடிபோல் இருப்பாள். உன் குழந்தைகள் உன் பந்தலைச் சுற்றிலும் ஓலிவ் மரக்கன்று போல் தழைத்திருப்பார்கள்.
* பாலைக் கடைந்தால் வெண்ணெய் பிறக்கும். மூக்கைப் பிசைந்தால் ரத்தம் பிறக்கும். கோபத்தை வலியுறுத்தினால் சண்டை தான் பிறக்கும்.
* அவனுடைய கை ஒவ்வொருவனுக்கும் எதிராக இருக்கும். ஒவ்வொருவன் கையும் அவனுக்கு எதிராக இருக்கும்.
* அசட்டுத்தனமான வீண்கேள்விகளைத் தவிர்த்துவிடு. அவை சச்சரவுகளையே பிறப்பிக்கின்றன.
- பைபிள் பொன்மொழிகள்