* ஒவ்வொரு மனிதனும் தன் மோகங்களால் இழுக்கப்பட்டு மருளும்போதே சோதனைகளுக்கு ஆளாகின்றான்.
* சோதனையைச் சகிக்கிற மனிதன் பாக்கியவான். ஏனெனில் சோதனை முடிந்தபின் வாழ்க்கையின் கிரீடத்தைப் பெறுவான்.
* சோம்பேறியே எறும்பைக் கவனி. அதன் வழிமுறையை பின்பற்றி அறிவு பெறு. அதற்கு வழிகாட்டி இல்லை. தலைவனும் இல்லை. அதிகாரியும் இல்லை.
* கடவுள் தாம் நேசிக்கிறவனைத் தண்டிக்கிறார். தம் மகனாக ஏற்றுக் கொள்ளும் எவனையும் பிரம்பால் அடிக்கிறார்.
* எவனாவது முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லோருக்கும் கடைசியானவனாய் எவருக்கும் தொண்டனாய் இருப்பானாக.
* கீல் முனையில் கதவு ஆடுவது போல், சோம்பேறி படுக்கையில் ஆடிக் கொண்டிருக்கிறான்.
* பூலோகத்தில் உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்துக் கிடக்க வேண்டாம். அங்கே அந்தும் தூரும் அரித்துத் திருடர்களும் கன்னமிட்டுத் திருடுகிறார்கள்.
- பைபிள் பொன்மொழிகள்