* கடவுள் நமக்குள் இருந்து கொண்டு, நாம் செய்வது அனைத்தையும் ஓயாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
* மறைவில் இருந்தபடி பாவம் செய்தால் யாருக்கும் தெரியாது என்று நினைப்பது அறிவீனம். பாவத்திற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.
* அசைவற்ற தீபம் போன்று, மனம் சலனமில்லாமல் அமைதியுடன் இருத்தல் வேண்டும்.
* உள்ளத்தில் தீய எண்ணத்தை வளர்த்துக் கொள்ளாதே. சிறு தீப்பொறி பெரிய காட்டுத்தீயாக மாறி உன்னையே அழித்து விடும்.
* இயற்கையான சந்திரனும், சூரியனும் காலம் தவறாமல் ஒழுங்காகச் செயலாற்றுகிறது. ஆனால், பகுத்தறிவு இருந்தும் மனிதன் ஒழுங்குக்கு கட்டுப்பட்டு வாழ மறுக்கிறான்.
* மனம் தூய்மை அடைந்தால் மட்டுமே தெய்வசக்தியை உணர முடியும்.
- சாந்தானந்தர்