* நீ செய்யும் பணிவிடைகள் எல்லாம் கடவுளுக்குச் செய்யும் பணிவிடை என்று உபன்யாசம் செய்தால் போதாது. கடவுளுக்குப் பிடித்தமான பணி விடைகளை நீ செய்ய வேண்டும்.
* உண்மையான பக்தனின் கண்களில் குறைகள் தென்படாது. பிறரது குறைகளைப் பற்றி பேசுவதைவிட, அவற்றை அவர்கள் திருத்த வேண்டும் என்ற சேவையில் இறங்கினால் எல்லாருக்கும் நல்லது.
* நீ நல்லவனாய் இருந்தால் உலகமும் நல்லதாகவே காட்சி தரும். குற்றமுள்ளவனாக இருந்தாலும் உலகமும் கெட்டதாகத் தோன்றும்.
* மக்களிடம் பணிவுடன் பழகி வா. அகங்காரம் என்ற தீ உன்னை விட்டு தானே அகன்றுவிடும்.
* பணியாள் போல இரு. ஆணவம் உனக்கு உண்டாகக்கூடாது. பணிந்து செல். அனைத்தும் நன்மையாக முடியும்.
- சாந்தானந்தர்