* பொருளின் மீதுள்ள பேராசையை விடவேண்டும். உழைப்பால் அடைந்ததையே வைத்துக் கொண்டு திருப்தி அடைய வேண்டும்.
* இரவுக்குப்பின் பகலும், காலைக்குப் பின் மாலையும், குளிர்காலத்திற்குப்பின் வசந்தமும் மாறிமாறி வருகின்றன. ஆயுள் தேய்ந்துகொண்டே வருகிறது. அப்படியிருந்தும் வீண் ஆசைகள் மட்டும் நம்மைவிட்டுப் போவதில்லை.
* மனம் அலையாதிருக்கவும் கடவுளின் மீது சிந்தை நிலைத்திருக்கவும் சுவாசத்தை ஒழுங்காக்க வேண்டும். புலன்களை ஒடுக்கி ஜபமும் பிரார்த்தனையும் செய்ய வேண்டும்.
* எதுவரை பொருள் தேடுவதில் ஒருவன் பற்றுள்ளவனாய் இருக்கிறானோ, அதுவரை அவனுடைய சுற்றம் அவனிடம் அன்பு வைத்திருக்கும். உடல் தளர்ந்தபின்பு ஒருவரும் அவனிடம் முன் போல அன்புடன் நடப்பதில்லை.
- ஆதிசங்கரர்