* நம்மிடம் இருக்கும் ஆற்றலைப் பணம் தேடுவதிலேயே பயன்படுத்துகிறோம். அதைக் கொஞ்சம் சேவை செய்வதிலும் பயன்படுத்த வேண்டும்.
* தன்னடக்கம் இல்லாதவன் எவ்வளவு படித்தும் பயனில்லை. தலைவர்களாக வேண்டும் என விரும்புவோர் அடக்கம் உடையவராக இருக்க வேண்டும்.
* மனதில் எழும் நியாயமான ஆசை நிறைவேறாமல் போவதில்லை. இந்த உண்மையை அனுபவத்தில் எல்லாராலும் உணர முடியும்.
* நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைக்க தொடங்கினால் மண்ணுலகம் சொர்க்கமாகி விடும்.
* கடவுளின் கணக்குப் புத்தகத்தில் நம் செயல்கள் மட்டுமே குறிக்கப்படுகிறது. நாம் படித்தவையும், பேசியவையும் அல்ல.
* பாவத்தை மறைத்து வைத்தால் அது உடலில் மறைந்து நின்று கொல்லும் நஞ்சு போல கொடியதாகும்.
- காந்திஜி