* கடவுளை தவறாமல் வழிபட்டால், நாளுக்கு நாள் மனத்தூய்மை நம்மிடம் அதிகரிப்பதை உணர முடியும்.
* துன்பத்தால் எப்போதெல்லாம் வருத்தம் உண்டாகிறதோ, அப்போதெல்லாம் கடவுளை முழுமையாகச் சரணடைந்து விடுங்கள்.
* மனத்தூய்மை இல்லாமல் செய்யும் வழிபட்டால் பலன் உண்டாகாது.
* உங்களின் ஆற்றலை பணம் தேடுவதில் மட்டுமே செலவு செய்வது கூடாது. பிறருக்கு இயன்ற உதவிகளைச் செய்ய முன் வர வேண்டும்.
* பலம் என்பது உடலின் ஆற்றல் மட்டுமன்று. அசையாத மனஉறுதியே உண்மையான பலம்.
* நியாய வழியில் நடப்பவனுக்கு தேவையான சமயத்தில் உதவி கிடைக்கும். திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்பதே உண்மை.
* பிரார்த்தனை இல்லாமல் உலகில் வாழ முடியாது.
- காந்திஜி