புனித வெள்ளியை ஒட்டி பைபிள் பொன்மொழிகள் சிலவற்றைக் கேட்போம்.
* உன் கண்கள் நேராகவே பார்க்கட்டும். உன் கண் இமைகள் முன்னோக்கட்டும்.
* உன் பகைவன் பசித்திருந்தால் உணவிடு. அவன் தாகத்தோடிருந்தால் பானம் கொடு.
* நேசத்தில் பயம் என்பதே இல்லை. பரிபூரணமான நேசம் பயத்தைப் புறம்பாக்கி விடுகிறது.
* நேர்மையாளனுக்கு வெளிச்சமும், செம்மையாக நிமிர்ந்த நெஞ்சினருக்காக உற்சாகமும் விதைக்கப்பட்டிருக்கின்றன.
* நீதியின் கனியாவது அமைதி உண்டாக்குபவர்களின் அமைதியிலேயே விதைக்கப்படுகிறது.