* கோபம் வரும் போது கண்ணாடியில் முகத்தைப் பாருங்கள். உங்களுக்கே வெட்கமாகப் போய் விடும்.
* ஆபத்தான சமயத்தில் உயிரைக் காபாற்றிக் கொள்ளச் சொல்லும் பொய் குற்றமாகாது.
* முதுமைக்குத் தேவையானதை இளமையில் தேடுவதே அறிவுள்ளவனின் செயல்.
* எந்த பாவம் செய்தாலும் தப்பித்து விடலாம். ஆனால், நன்றி மறந்த பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது.
* செய்த பாவமும், புண்ணியமும் பல மடங்காகப் பெருகி நம்மிடமே திரும்பி வரும்.
- வாரியார்