எல்லா குழந்தைகளுக்கும் போதிய அறிவு இருக்கிறது. தன்னுடைய அறிவு நிலைக்கேற்ப அந்த குழந்தை வளர்வதற்கு நீங்கள்தான் சரியான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்!
அற்புதமான உறவுகள் வேண்டுமானால், உறவுகளை நிர்வகிக்க முயற்சி செய்யாதீர்கள். உங்களை எப்படி மேல்நிலைக்கு உயர்த்திக் கொள்வது என்று பாருங்கள்.
மனச்சோர்வு வரும்போதெல்லாம் மற்றவர்கள் மீது எரிச்சல்படுவதை நிறுத்திவிட்டு, அதற்குக் காரணம் நீங்கள்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் உயிருக்கு மேலாக நம்பிக்கை வைக்கக் கூடிய ஒரு மனிதரையாவது கண்டுபிடித்து விட்டால், நீங்கள் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலி. பெரும்பாலானவர்களுக்கு அந்த ஒருவர் கூட கிடைப்பதில்லை.