மனிதர்களுக்கு வயது ஆக ஆக ஞானம் அதிகரிப்பதில்லை. மாறாக அவர்களின் மனக்காயம்தான் அதிகரிக்கிறது.
இந்த உலகில் வேறெங்கும் நடக்கின்ற மோதல்களை விடவும், வீட்டின் நான்கு சுவர்களுக்குள் நடக்கின்ற மோதல்கள் தான் அதிகம். ஆனால் என்ன, வீட்டிற்குள் நாம் குண்டுகளை வீசிக் கொள்வதில்லை.
வாழ்க்கையின் சிறு சிறு விஷயங்களிலும் முழு ஈடுபாட்டுடன் இருந்தீர்கள் என்றால், நடக்கும் ஒவ்வொரு விஷயமும் அற்புதமாக இருப்பதைப் பார்ப்பீர்கள்.
உயிரோடு இருப்பது வேறு, உயிரோடு வாழ்வது வேறு. ஒரு கணம், ஒரே ஒரு கணத்தையாவது முழு விழிப்புணர்வோடு வாழ்ந்து பாருங்கள். வாழ்க்கையின் போக்கே மாறிவிடும்.