ஒவ்வொருவரிடமும் நீங்கள் நல்லிணக்கமாக இருந்தால், அது உங்களுக்கு பல வழிகளில் திரும்ப வரும். அது திரும்ப வருகிறதா, இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.
கிடைத்த ஆயிரம் விஷயங்களை மறந்துவிட்டு, கிடைக்காத ஏதோ ஒரு விஷயத்துக்காக வேதனை கொள்வது போன்ற முட்டாள்தனமான எண்ணங்கள் ஒருபோதும் உங்களை மேம்படுத்தாது.
கடவுள் மட்டும் தனக்குப் படைக்கப்பட்டதை எல்லாம் சாப்பிடத் தொடங்கிவிட்டால், அடுத்த வேளைக்கு அவரைப் பட்டினி போட்டு விடுவோம்.
உங்களுக்குள் என்ன நடக்க வேண்டுமென்று உங்களைத் தவிர வேறு யாரும் தீர்மானிக்கக் கூடாது. உங்கள் விதியை நீங்களே நிர்ணயிக்கலாம். அது சாத்தியமானதே