ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கவேண்டிய அடிப்படை நற்குணம், தனக்குத்தானே உண்மையாக இருப்பது.
இளமை, அற்ப இன்பங்களில் மூழ்கிச் சோர்வுறும் பருவம் அல்ல. ஆராய்ந்து அறிவதற்கும், சாகசங்கள் செய்வதற்குமான பருவம்.
துன்பமும் ஏழ்மையும் ஒன்றுக்கொன்று நேரடித் தொடர்புள்ளவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எல்லாம் உடையவர் கூட ஒன்றுமில்லாதவரைவிட ஆழமான துன்பத்தில் இருக்கக் கூடும்.
ஒரு முட்டாளுக்கும், ஒரு புத்திசாலிக்கும் என்ன வித்தியாசம் என்றால், தான் எந்த அளவு முட்டாள் என்பது புத்திசாலிக்குத் தெரியும், ஆனால் அது முட்டாளுக்கு தெரியாது.