* பெற்றோரின் குணமே பிள்ளைகளுக்கும் வரும். குழந்தைகள் நல்லவர்களாக வளர்வது பெற்றோரைப் பொறுத்ததே.
* உடல் அழுக்கு தீர நீராடுவது போல, மன அழுக்குகளான ஆசை, கோபம் நீங்க கடவுள் பக்தியில் ஈடுபட வேண்டும்.
* எங்கிருந்து வந்தோம், இனி எங்கே செல்ல வேண்டும் என்று மனிதன் உயிரைப் பற்றிச் சிந்திப்பதே ஞானம்.
* வெயில் அதிகமாகும் போது வெம்மை தணிய மழை வருவது போல, அநீதி அதிகரிக்கும் போது நீதியை நிலைநாட்ட மகான்கள் அவதரிக்கிறார்கள்.
- வாரியார்