* உன்னைப் பிறர் போற்றுவதற்கும், துாற்றுவதற்கும் நீயே தான் காரணம்.
* வாழ்வில் தர்மநெறிகளைக் கடைபிடிக்கத் தவறியவன் தனக்குத் தானே அழிவைத் தேடிக் கொள்கிறான்.
* கோபப்படுபவன் அறிவாளியாக இருக்க முடியாது. கோபத்தில் அறிவு மழுங்கி விடுகிறது.
* உன்னை நீயே விளம்பரப்படுத்திக் கொள்ளாதே. நீ செய்யும் நல்ல செயலே உன்னை உலகிற்கு தெரிவித்து விடும்.
* பிறர் உன்னைப் புகழ்வதால் மட்டுமே உன் மனம் பரிசுத்தமாகி விடாது.
- சாந்தானந்தர்